செல்வாவின் நண்பர் ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருந்தார். அவர் செல்வாவின் ஊரைப் பற்றிக் கிண்டலாகவும் அவரது ஊரைப் பற்றி பெருமையாகவும் பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் இதைக் கேட்ட செல்வா மிகவும் எரிச்சலடைந்தார். இருந்தபோதும் தனது எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
" எங்க ஆபீசுல எனக்கு AC ரூம் குடுத்திருக்காங்க , உனக்கு ? " என்று கேட்டார் நண்பர்.
" இல்ல எனக்கு தரல , அது சரி அவரு வந்தா நீ வெளிய போயிருவியா?"
" எவரு வந்தா ?"
" AC ரூம்னு சொன்னியே , AC னா Assistant Commissioner தானே. அதான் கேட்டேன்! "
" உங்க ஊர்ல எதைச் சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிங்களா ? AC னு சொன்னது Air Conditioner .. என்ன ஆளுங்கடா நீங்க ? " என்று மறுபடியும் செல்வாவை மட்டம் தட்ட ஆரம்பித்தார். அப்பொழுது பின்னாலிருந்து வந்த லாரி ஒன்று அவர் அருகில் மோதுவது போல வந்து பின்னர் விலகிச் சென்றது.
" என்ன கேவலமான ட்ராபிக் ரூல்ஸ் உங்க ஊர்ல , எப்படி வரான் பாரு ? " என்று மேலும் மட்டம் தட்ட ஆரம்பித்தார்.
எதாச்சும் செய்யணுமே என்று எண்ணிய செல்வா " எங்க ஊர் ரோடு அப்படி , ஆக்சிடென்ட் ஆனா கூட ஒன்னும் ஆகாது " என்றார்.
" அது எப்படி ஆக்சிடென்ட் ஆனா கூட ஒன்னும் ஆகாது ? " என்றார் நண்பர் ஆச்சர்யமாக.
" எல்லாம் லேட்டஸ்ட் டெக்னாலஜி , இங்க இருக்குற ரோடுல நாங்க லாரி டயருக்கு அடில செல்போன வச்சு எடுப்போம் , அப்ப கூட உடையாது தெரியுமா ? " என்றார் செல்வா.
" உண்மையாவா , என்னால நம்பவே முடியல , எங்க உன்னோட செல்போன வச்சு காமி பாப்போம் " என்றார் அந்த நண்பர்.
" அத வீட்டுல வச்சிட்டு வந்திட்டேன் !"
" சரி என்னோட போன வைக்கலாம் " என்றவர் திடீரென கொஞ்ச தூரத்தில் வந்துகொண்டிருந்த லாரியைப் பார்த்துவிட்டு அதுல வைக்கட்டுமா என்று கூறிக்கொண்டு லாரியின் சக்கரம் செல்போனில் ஏறுமாறு வைத்துவிட்டு ஓரத்தில் வந்து நின்றுகொண்டார்.
வேகமாக வந்த லாரி நண்பரின் செல்போன் மீது ஏறிச் சென்றது. லாரி சென்றதும் தனது போனின் அருகில் சென்ற அந்த நண்பர் மிகுந்த கோபத்துடன் " அட பாவி! லேட்டஸ்ட் டெக்னாலஜினு பொய் சொல்லி என்னைய ஏமாத்திட்டியே , 12 ஆயிரம் குடுத்து வாங்கின செல்லு ஒடஞ்சு போச்சே " என்று அழ ஆரம்பித்தார்.
" நான் எங்க பொய் சொன்னேன் ? "
" நீ தான லாரி டயருக்கு அடில போன வச்சா கூட உடையாதுன்னு சொன்ன., இப்ப உடைஞ்சு போச்சே ! "
" உனக்கும் உங்க ஊர்க் காரங்களுக்கும் அறிவே கிடையாது , லாரி டயருக்கு அடில போன வச்சா உடையாதுன்னு சொன்னேன் , ஆனா அது லாரி நின்னுட்டு இருக்கும்போது மட்டும் , நீ எதுக்கும் போயிட்டு இருக்குற லாரி டயருக்கு அடில வச்ச? " என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா.
11 comments:
vadai
நீதி: செல்போன் உபயோகித்தால் கதிரியக்கத்தால் உடல்நலம் கெடுதி. அதனால்தான் செல்வா செல்போனை உடைக்க செய்தார்.
//நீதி: செல்போன் உபயோகித்தால் கதிரியக்கத்தால் உடல்நலம் கெடுதி. அதனால்தான் செல்வா செல்போனை உடைக்க செய்தார். //
உயிர்காக்கும் செல்வா வாழ்க..
நல்ல காமடி
என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா./// அதன்பிறகு அந்த நண்பர் செல்வாவுக்கு தக்க சன்மானம் கொடுத்ததை எல்லாம் நாம் கவனிக்க வேண்டியதில்லை....:))
யம்மாடியோ....
...?
>>" எல்லாம் லேட்டஸ்ட் டெக்னாலஜி , இங்க இருக்குற ரோடுல நாங்க லாரி டயருக்கு அடில செல்போன வச்சு எடுப்போம் , அப்ப கூட உடையாது தெரியுமா ? "
கலைஞரை விட பெரிய புளுகரா இருக்கீங்களே?
>>
" உனக்கும் உங்க ஊர்க் காரங்களுக்கும் அறிவே கிடையாது , லாரி டயருக்கு அடில போன வச்சா உடையாதுன்னு சொன்னேன் , ஆனா அது லாரி நின்னுட்டு இருக்கும்போது மட்டும் , நீ எதுக்கும் போயிட்டு இருக்குற லாரி டயருக்கு அடில வச்ச? "
ஹா ஹா செம கேள்வி.. உங்களை கேப்டன் கிட்டே விட்டுடனும்.. அடி வாங்கியே .. ஹி ஹி
செல்வா.. கதை செம கலக்கல்./.. நல்லா டெவலப் பண்ணி இருக்கீங்க... குட்
Post a Comment