செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடலாம் என்று முயற்சித்துக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவரது மாமா செல்வாவின் வீட்டிற்கு வந்தார். செல்வாவிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றார். அதற்கு செல்வா வேலை தேடிக்கொண்டிருப்பத்தாகக் கூறினார். இதைக்கேட்ட அவரது மாமா வேலை கிடைக்கும் வரையில் கையில் இருப்பதைக் கொண்டு சுயதொழில் ஒன்று செய் என்று அறிவுரை கூறிச்சென்றார்.
சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வா அவரது மாமாவைச் சந்திக்கச் சென்றார். மாமாவிடம் தான் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அவர் வாழ்த்தி முதலில் துவங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் இருவரும் செல்வா தொழில் துவங்கியுள்ளதாகக் கூறிய கடைக்குச் சென்றனர். அங்கே முன்னால் ஒரு பெரிய போர்டில் " உங்கள் பல் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும் , சொத்தைப் பல்லா , இல்லை பீடிக்கறை உள்ள பல்லா? கவலை வேண்டாம். எங்களிடம் கழட்டிக் கொடுங்கள். விரைவில் சுத்தம் செய்து தருகிறோம்! என்ற அறிவிப்பு இருந்தது.
இதைப் பார்த்த அவரது மாமா சற்றே வித்தியாசமாக " இது என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை " என்றார் .
" மாமா நீங்கதானே அன்னிக்கு கைல இருக்குறத வச்சு ஒரு தொழில் தொடங்கு அப்படின்னு சொன்னீங்க ,அதான் இந்த மாதிரி தொழில் தொங்கினேன் " என்றார் .
இதைக்கேட்ட அவரது மாமா " நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?! " என்றார்.
" நீங்க அன்னிக்கு சொல்லும்போது நான் பல்லு விளக்கிட்டு இருந்தேன் , அப்போ என் கைல TOOTHBRUSH இருந்துச்சு , நீங்க கைல இருக்குறத வச்சு தொழில் தொடங்க சொன்னீங்க. அப்படின்னா அத வச்சு இந்தத் தொழில்தானே பண்ண முடியும் , அதனால உங்க பல்ல கழட்டிக்குடுங்க , முதல் போனி உங்ககைல இல்ல இல்ல உங்க வாய்ல இருந்துதான்!! "
" கைல இருக்குறத வச்சு பண்ணு அப்படின்னா ? ( எதையோ சொல்ல வந்தவர் ) வேண்டாம் சாமி , நான் ஒண்ணும் சொல்லல , ஆள விடு " என்று புலம்பியவாறே சென்றுவிட்டார்.
செல்வாவிற்கு பெரும் குழப்பம் , அவர் சொன்னதைத் தானே செய்தோம் ஏன் திட்டுகிறார் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.
No comments:
Post a Comment