கடந்த வருடம் செல்வாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அப்பொழுது சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் வெளியில் கிளம்பலாம் என்று கிளம்பியபொழுது அவரது உறவினர் " இங்க இந்த போன் டவரே கிடைக்கல , வெளிய கொண்டுபோய் கிடைக்குதான்னு பாரு "என்றார்.
வெளியில் சென்ற செல்வா நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்தனர். அப்பொழுது செல்வா " ஒரு சைடு இருக்குற போல்ட் எல்லாம் கழட்டிட்டேன் , இன்னும் இரண்டு சைடு தான் , சீக்கிரமா வந்திடுவேன் " என்றார்.
இதைக்கேட்ட அவரது தந்தை " என்ன சொல்லுற ஒண்ணும் புரியலையே ? "
மாமா மொபைலுக்கு டவர் கிடைக்குதான்னு பார்க்கச் சொன்னார் , நானும் எல்லா கடைலயும் கேட்டேன் , எங்கயும் கிடைக்காதுன்னு சொன்னாங்க , அதான் இங்க ( எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி ) ஒரு டவர் இருந்துச்சு , அத கழட்டிட்டு வந்திடலாம்னு தான் கழட்டிட்டு இருக்கேன் , ஆனா இது கொஞ்சம் வெய்ட்டா இருக்கும் போல " என்று முடித்தார்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் " தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு " என்றார் கோபமாக.
1 comment:
காட்டேரி கணக்கா கத சொல்லு
கதை சொல்றேன்கிற பேர்ல போற வர்றவன புடிச்சு வலுக்கட்டாயமா ரத்தம் குடிக்கும் கோமாளி செல்வாவிற்கு இந்த விருதை கதை அடிக்காமல் கொடுக்கிறோம்!// பொருத்தமான விருது, தொப்பி தொப்பி ஹாஹா ஹா
Post a Comment