Friday, March 18, 2011

என்ன தலைப்பு வைப்பது ?

செல்வா அவரது அலுவலகத்திற்கு வருகை தருவோரின் பெயர் மற்றும் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது தினேஷ் என்பவரும் , அவரது மனைவியும் வந்தனர்.

செல்வா : "வாங்க சார் , உங்க பேர் சொல்லுங்க .

தினேஷ் : " என்னோட பேர் தினேஷ் "

" இனிசியல் சொல்லுங்க "

 " S ".

" தினேசா இல்ல தினேஷ்குமாரா ? "

" இல்ல வெறும் தினேஷ்தான்."

" உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ? " 

" ஆகிடுச்சு , இவுங்க தான் என்னோட வைப் , பேரு பரிமளா! "

" ஓகே , சார் , இருங்க அவுங்களைப் பத்தியும் எழுதிக்கிறேன் , அவுங்க பேரு பரிமளா , அவுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"

" என்ன சார் இப்படி கேக்குறீங்க ? என்னோட வைப்னு சொல்லுறேன் , கல்யாணம் ஆகிடுட்சானு கேக்குறீங்க ? "

" ஏன் உங்க வைப்கு கல்யாணம் ஆகாதா ? "

" யோவ் , கல்யாணம் ஆனா தானையா அவ எனக்கு மனைவி ஆவா ? லூசா நீ ? "

" ஓ , சாரி .. சரி இந்தாங்க உங்க பதிவுச் சீட்டு "

அந்தப் பதிவுச் சீட்டில் கீழுள்ளவாறு எழுதப்பட்டிருந்தது 

பெயர் : S இல்ல வெறும் தினேஷ்.

திருமண நிலை :  மணமாகிவிட்டது.

மனைவி பெயர் :  பரிமளா.


அவர் மனைவியின் சீட்டில் 

பெயர் : பரிமளா 

திருமண நிலை : தினேசிற்குத் திருமணம் ஆனதால் இவருக்கு ஆகிவிட்டது!

கணவர் பெயர் : கல்யாணம் ஆனா தான அவ எனக்கு வைப் !! 


14 comments:

நாகராஜசோழன் MA said...

செல்வா அதற்கு அப்புறம் என்ன நடந்தது?

பட்டாபட்டி.... said...

ஏய் பட்டாபட்டி..
வருவியா.. இங்க வருவியா..!!!!

*( ஹி..ஹி.. எனக்கு நானே சொல்லீட்டேன்.. நீ நடத்து ராசா...)

அருண் பிரசாத் said...

கல்யாணம் ஆனதால தினேஷ் என்ன ஆனான்னு கேக்கவேயில்லையே செல்வா?

karthikkumar said...

நீதி : செல்வாவை கல்யாணம் பண்ற பொண்ணு பாவம்....:)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

செல்வாவுக்கு மணமாகிவிட்டது என்று புரிந்துகொண்டேன். (இல்லைனா இப்படி மூளை கெட்டுப் போகாது)

சௌந்தர் said...

ஏன் உங்க வைப்கு கல்யாணம் ஆகாதா ? "

" யோவ் , கல்யாணம் ஆனா தானையா அவ எனக்கு மனைவி ஆவா ? லூசா நீ ? "////

இன்னும் பச்ச குழந்தையாவே இருக்கே மச்சி

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னாச்சுலேய் உனக்கு நீ லூசாலேய்.....

எஸ்.கே said...

அருமையான விண்ணப்ப படிவம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீதி = அநீதி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னை : கருணாநிதி 6வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட பா.ம.க., மழு ஒத்துழைப்புடன் பாடுபடும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கூட்டணி கட்சி தொகுதி தவிர, மற்ற இடங்களுக்கான பட்டியலை ஜெயலலிதா தயாரித்தார்; பல தொகுதி, வேட்பாளர் பெயர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவும் செய்துவிட்டார்; விருப்ப மனு தாக்கல், புகார்கள் அடிப்படையில் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டாலும், இறுதிப் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தி அடைந்தார் என, தெரிந்தது. ஆனால், நேற்று முன்தினம் மாலை இப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை; அவரது தோழி சசிகலா வெளியிட்டார். அப்பட்டியலில், சசிகலாவுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு சாதகமானவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் முன், கவனித்த ஜெ., பலரது பெயர், தொகுதி மாறியிருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மிகக் கோபமாக இது பற்றி ஜெ., கேட்டபோது, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் தெரிவித்து, பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், "எப்படியும் செய்யுங்கள்' என, பட்டியலை தூக்கி வீசிவிட்டு ஜெயலலிதா தன் அறைக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை. கூட்டணி கட்சியினரின் அழைப்பு வந்த போது கூட, "இப்போதைக்கு பேச வாய்ப்பில்லை' எனக் கூறி ஜெயலலிதா தவிர்த்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள பட்டியல், சசிகலாவின் குழுமத்தினரை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அ.தி.மு.க.,வினரே கருதுகின்றனர்.

சி.பி.செந்தில்குமார் said...

செம நக்கல் செல்வா... ஆனா நம்ம ராம்சாமியோட நக்கல் அதை தூக்கி சாப்பிட்டுடுச்சு

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த மூக்கு இல்ல மூக்கு..
அது புடைச்சலா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்..
அதை கட்ப்ண்ணிட்டா சரியாயிடும்..

தலைப்பா..

அறிவாளியின் ஆய்வு கூடம்-ன்னு பெயர் வை..

Anonymous said...

மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து கொண்டிருக்கிறது.

உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள். ‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம்.

அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க!’ என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர். உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம். ஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.
Share Tweet1