Saturday, March 19, 2011

எமலோகமும் செல்வாவும்

செல்வா இறந்த பின்பு எமதூதர்கள் வந்து செல்வாவை எமன் முன்பு கொண்டு நிறுத்தினர். எமன் அங்கிருந்த " எமலோகக் குறிப்புகள் " என்ற புத்தகத்தினைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் தண்டனை கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது செல்வாவின் முன்பாக அவரது நண்பர் ஒருவரும் நின்றிருந்தார். அவரது நண்பர் கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

எமதர்மன் ஒவ்வொருவரின் பாவ புண்ணியங்களைப் பார்த்து அவர்களை சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பிக்கொண்டிருந்தார். இப்பொழுது செல்வாவின் குறிப்புகளைப் பார்த்த எமன் அவரை சொர்க்கத்திற்குச் செல்லுமாறு அனுப்பினார். செல்வா தான் அந்த நண்பரின் முடிவினை பார்த்துவிட்டு செல்கிறேன் என்று நின்றுகொண்டிருந்தார்.

அவரது நண்பரின் குறிப்புகளைப் பார்த்த எமன் அவரை நரகத்திற்குச் செல்லுமாறு அனுப்பினர். அந்த நண்பர் தன்னை ஏன் நரகத்திற்கு அனுப்புகிறீர்கள் என்று வினவினார். அதற்கு எமன் " நீ ஒரு முறை திருட நினைத்திருக்கிறாய் , அதனால்தான் உன்னை நரகத்திற்கு அனுப்புகிறேன் " என்றார்.

"ஆனா நான்தான் திருடலையே , அதுக்குள்ளே அந்த வீட்டு ஆளுக வந்திட்டாங்க , அதனால நான் திருடாம வந்திட்டேனே ! "

" நீ வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். அனால் திருட நினைத்திருக்கிறாய் , செல்வா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்திருந்தாலும் நேர்மையாக வாழ நினைத்திருக்கிறார்.வாய்ப்பு கிடைக்காமல் நல்லவராக இருப்பது வேறு , கெட்டுப்போக வாய்ப்புகள் இருந்தும் நல்லவராக இருப்பது வேறு , பெண்களே இல்லாத இடத்தில் ஏகபத்தினி விரதனாக இருப்பதற்கும் , பெண்கள் மட்டுமே உள்ள இடத்தில் ஏக பத்தினி விரதனாக இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது! இதிலே நீ முதல் வகை " என்றார் எமன்.

அருகில் நின்று கொண்டிருத்த செல்வாவிற்கு குழப்பம் . ஏன் என்றால் திருட்டு என்ற வார்த்தையை இப்பொழுதான் கேட்கிறார். எமனிடமே கேட்டும் விட்டார் " திருட்டுனா என்ன ? "

இதைக்கேட்ட எமன் செல்வாவை ஆரத்தழுவி கண்ணீர் விட்டு " திருட்டுனா என்னன்னே தெரியாம இருக்குற நல்லவன பிடிச்சிட்டு வந்திட்டீங்களேடா ? " என்று எம தூதர்களை திட்டிவிட்டு செல்வாவைத் திரும்பவும் பூமிக்கே அனுப்பிவிட்டார்.

பின்னர் பூமிக்கு வந்த செல்வா " எமலோகக் குறிப்புகள் " என்ற புத்தகத்தினை வைத்துக் கண்காட்சி நடத்தி பெரிய பணக்காரர் ஆனார் என்பது நமக்குத் தேவை இல்லாதது. அவருக்குத் திருட்டு என்றால் என்னவென்றே தெரியாது!!


24 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டாவது வெட்டு

செல்வா said...

எவ்ளோநேரம் வெட்டுவீங்க ? ஹி ஹி ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முணாவது வெட்டு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வான்னா யாருங்க...?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னு இருக்கியா..

உன்ன அங்கேய அனுப்புனும்..

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற....

உண்மையிலே பாராட்டுகிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருய்யா இது மாறி மாறி வெட்டுறது?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வான்னா யாருங்க...?
/

அது ஒரு ... வேணா விட்டுடுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருய்யா இது மாறி மாறி வெட்டுறது?
//////

ஏனுங்க .. நான்தாங்க..

karthikkumar said...

நீதி : க்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்தூ..........:))

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
செல்வான்னா யாருங்க...///
தப்பு செல்வான்னா எதுன்னு கேளுங்க :)

செல்வா said...

//அது ஒரு ... வேணா விட்டுடுங்க../

பரவால்ல சொல்லுங்க ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
கோமாளி செல்வா said...

//அது ஒரு ... வேணா விட்டுடுங்க../

பரவால்ல சொல்லுங்க ...
//////

சரி முடிச்சிடுறேன்..

அது ஒரு அறிவு ஜீவிங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
செல்வான்னா யாருங்க...///
தப்பு செல்வான்னா எதுன்னு கேளுங்க :)/////////

அப்படின்னா அது ஒரு விஷ ஜந்துவா...?

karthikkumar said...

///பன்னிக்குட்டி ராம்சாமி said..அப்படின்னா அது ஒரு விஷ ஜந்துவா...////

என்னது இந்துவா எங்க எங்க ...:))

Unknown said...

kodumai selva.neenga angayae irunthurikalam:(

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போச்சி நீ எமலோகம் வரை போயிட்டியா...இனி பதிவுலகம் உருப்படவே உருப்படாது.....ஹே ஹே ஹே...

Madhavan Srinivasagopalan said...

எலேய்..
அங்க வெச்சி.. இங்க வெச்சி..
இப்போ எமனுகிட்டேயே கை வெச்சிட்டியே !

பெசொவி said...

// எமன் " நீ ஒரு முறை திருட நினைத்திருக்கிறாய் , அதனால்தான் உன்னை நரகத்திற்கு அனுப்புகிறேன் " என்றார்.
//

திருட நினைச்ச நண்பனுக்கே இந்தக் கதின்னா, திருடிட்டு வந்த செல்வா உயிரோட இருப்பான்னு நினைக்கிறே?

எஸ்.கே said...

செம கலக்கல் செல்வா!

சௌந்தர் said...

கொய்யாலே திருட்டு னா என்னனு தெரியாதா என் கிட்ட இருந்து திருடின செல் போன் எங்க டா

சௌந்தர் said...

செய் இதையெல்லாம் எப்போ யோசிக்குரே

VELU.G said...

எங்க ஆட்டையப்போடறதுன்னு ஒரு விவஸ்தயே இல்லையா

Jey said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...முடியலை.....இன்னுமாடா திருந்தல....( ங்கொய்யாலே தினமும் ஒரு மொக்கை SMS அனுப்பி கொல்றது இல்லாம, இஙே தனியா பிளாக் ஆரம்பிச்சி இங்கயும்...., பாண்டி, பன்னி இந்த பீச இன்னுமா விட்டு வச்சிருக்கீங்க...)