Friday, March 11, 2011

கணித மேதை செல்வா

இதுவும் செல்வா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவமே.

ஒருநாள் செல்வாவின் வகுப்பறையில் அனைவரும் பத்துக்குள் ஒரு நம்பர் நினைச்சுக்க என்றும் பின்னர் இரண்டு மூன்று வினாக்களை கேட்டு விடை சொல்லி விளையாடிக்கொண்டிருந்தனர்.

வகுப்பில் உள்ள அனைவரும் எதாவது ஒரு கணக்கினை இதுபோல சொல்லி விடை கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு கேள்விகளில் பதில் கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர்.

செல்வாவும் சிறிதுநேரம் பொறுத்துப் பார்த்தார். இவருக்கு அதுபோன்ற கணக்குகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இருந்தபோதிலும் வழக்கம்போல " மூணு ஸ்டெப்ல கண்டு பிடிக்கிறது எல்லாம் மேட்டர் இல்ல , நான் முப்பது ஸ்டெப் சொல்லி விடை கண்டுபிடிப்பேன்.! " என்றார் சற்று பெருமையாக. முப்பது ஸ்டெப் என்றால் யாரும் அந்தக் கணக்கை விரும்ப மாட்டார்கள் என்றும் தன்னை கணித மேதை என்று நம்பிவிடுவார்கள் என்றும் எண்ணினார் செல்வா. ஆனால் விதி வலியது.

இதைகேட்ட செல்வாவின் நண்பர் " முப்பது ஸ்டெப் சொல்லி விடை கண்டுபிடிக்கிறது சான்சே இல்ல , யாராலையும் முடியாது " என்றார்.

" அதெல்லாம் எனக்கு சப்ப மேட்டர் , நான் கண்டுபிடிப்பேன் " 

" சரி சொல்லு " என்று ஒரு பெரிய பேப்பரை எடுத்துக்கொண்டு செல்வாவின் அருகில் வந்து அமர்ந்தார் அவரது நண்பர். செல்வாவிற்கு தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என்றும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாமோ என்றும் தோன்றியது. இருந்தாலும் எதாச்சும் சொல்லி சமாளிக்கலாம் என்று முடிவெடுத்து 

" பத்துக்குள்ள ஒரு நம்பர் நினைச்சிக்க " 

" நினைச்சிட்டேன்! "

" அத நாளால பெருக்கு , ஆற கூட்டிக்க " என்று ஒரு இருபத்தியேழு ஸ்டெப் வரை சொல்லிக்கொண்டே போனார். அவரது நண்பர்களுக்கு இவன் எப்படி கண்டுபிடிக்கப் போறான் என்ற எண்ணத்தில் இருவரையும் சூழ்ந்து நின்றனர். செல்வாவிற்கோ அச்சம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே சென்றார்.

செல்வாவின் சொன்ன கணக்குகளை அவர் கூட்டியும் பெருக்கியும் போட்டு இருபத்திஎட்டாவது ஸ்டெப் சொல்லும்போது ஒரு முழு காகிதமும் தீர்ந்து போயிருந்தது. வேறு எதையாவது சொல்லி தப்பித்துவிடலாம் என்ற செல்வாவின் எண்ணமும் நண்பர்கள் சூழ்ந்து நின்றதால் கைவிட்டார். ஆனால் நான் சும்மா சொன்னேன் என்று சொல்லியும் இவர்களிடம் தப்பிக்க முடியாது என்ற பயமும் இருந்தது. நண்பரோ இவன் நல்லா மாட்டிக்கிட்டான் என்ற நினைப்பில் அடுத்த ஸ்டெப் சொல்லு என்று நச்சரித்தார்.

செல்வாவிற்கு அப்பொழுது சட்டென ஒரு யோசனை தோன்றியது. இதுவரையிலும் பேயரைந்தது போல் இருந்தவர் இப்பொழுது சற்றே தைரியமாகவும் வெற்றி பெறப் போகிறவர் போலவும் " சரி வந்த விடைகூட 45126 ஆல பெருக்கு " என்றார். அந்த நண்பரும் சிரமப்பட்டு அந்தப் பெருக்களை சொல்லி முடித்தார்.

அடுத்து முப்பதாவது ஸ்டெப். இதை சொல்லி முடித்ததும் செல்வா அவருக்கு வந்த விடையை சொல்லவேண்டும். வகுப்பு மாணவர்கள் அனைவரும் கூர்ந்து கவனித்துகொண்டிருந்தனர். செல்வா மிகவும் அமைதியாக " அந்த விடைய 0 வால பெருக்கு " என்றார்.

அந்த நண்பர் செல்வாவை ஒரு முறை குழப்பமாகப் பார்த்தார். நீ ஜீரோவால பெருக்கு , இப்ப உனக்கு விடை ஜீரோ தான வருது. எப்படி முப்பது ஸ்டெப் சொல்லி கண்டுபிடிச்சேன் பார்த்தியா ? " என்றார் பெருமை பொங்க. அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனையில் விட்டுவிடுகின்றேன்.

( இதுவும் ஒரு உண்மை சம்பவம் )10 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுழியம் பத்தி சொன்ன இந்த பயலுக்கு சுழி அதிகமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீதி: என்னதான் அறிவாளியா இருந்தாலும் ஆம்லேட் போட முட்டை(0) வாங்கித்தான் ஆகணும்...

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ஹி.. இது தெரிந்த விஷயம்..
செல்வா திறமைக்கு.. இன்னும் நல்லா செஞ்சிருக்கலாம்..

எஸ்.கே said...

எல்லாம் சூனியம்! எல்லாம் சூனியம்!

எஸ்.கே said...

ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை அடங்கி விடுகிறது என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்கிறார் செல்வா!

VELU.G said...

கனித மேதை ராமானுஜத்திற்கு பிறகு இவருதாங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ வேற ஒரு உண்மைச்சம்பவத்தைத்தான் இனி நடத்த வேண்டி இருக்கும் போல.....

ராஜி said...

அவ்வ்வ்

karthikkumar said...

இதுவும் ஒரு உண்மை சம்பவம் )//// m velangiruchu....:))