ஒரு நாள் காலை செல்வா அவசர அவசரமாகக் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென குளியலறையில் இருந்து வெளியே தலை நீட்டிய செல்வா அவரது நண்பரிடம் கொஞ்சம் அவசரமாகச் " சோப்பு வாங்கிட்டு வா" என்று கத்தினார்.
அவரது நண்பரும் அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று சோப்பு வாங்கி வந்தார். அதற்குள் செல்வா குளித்துவிட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர் " அதுக்குள்ளே ஏண்டா குளிச்ச ? "
" பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! "
" ஐயோ , என்னைய சோப்பு வாங்கிட்டு வரச்சொல்லிட்டு சோப்பு வரதுக்கு முன்னாடியே ஏன் குளிச்சனு கேட்டேன் ? நீ எப்பவும் சுத்தமா இருப்பண்ணுதான் நான் அவ்ளோ வேகமா ஓடிப் போய் சோப்பு வாங்கிட்டு வந்தேன் ! இப்படிப் பண்ணுறதுக்கு எதுக்கு அவ்ளோ அவசரப்படுத்தி சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ? "
" அதுக்கு காரணம் இருக்கு , இரு சாப்பிட்டுட்டு வரேன் ! "
" என்ன மண்ணாங்கட்டிக் காரணம் ? " என்று கோபமாகக் கத்தினார் நண்பர்.
சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்த செல்வா நண்பர் வாங்கிவந்த சோப்பினை எடுத்துகொண்டு வேகமாக குளியலறைக்குச் சென்றார். மறுபடி குளிப்பானோ என்று நினைத்த அவரது நண்பர்
" ஏண்டா நீ எப்பவும் சாப்பிட்டுட்டுக் குளிக்க மாட்டியே , இன்னிக்கு எதுக்கு மறுபடியும் குளிக்கிற ? "
" நான் எங்க குளிக்கப் போறேன் ?! " என்று கூறியவர் குளியலறையில் இருந்து மற்றொரு சோப்பினைக் கையில் எடுத்து வந்தார்.
" ஏண்டா , இன்னொரு சோப்பு வச்சிட்டே எதுக்கு எங்கிட்ட எதுக்கு இன்னொரு சோப்பு வாங்கிட்டு வரச்சொன்ன ? "
" சும்மா தொணதொணன்னு பேசாத , ஒரு நிமிஷம் இரு ! " என்றவர் குளியலறையில் இருந்து எடுத்துவந்த சோப்பின் மீது தண்ணீரை ஊற்றி நண்பர் வாங்கிவந்த சோப்பால் தேய்க்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த அவரது நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. " டேய் , என்ன பண்ணுற ? "
" அது ஒன்னும் இல்ல , நான் குளிச்சிட்டிருக்கும்போது இது கீழ விழுந்திடுச்சு , அதனால இது மேல கிருமி ஒட்டிருக்கும். அதான் இதுக்கு சோப்புப் போட்டு குளிப்பாட்டிட்டு இருக்கேன். இப்ப அதுமேல இருக்குற கிருமி எல்லாம் போயடும்ல " என்றார் செல்வா.
" சோப்புக்கே சோப்புப் போட்ட ஆள் நீயாத்தாண்டா இருப்ப ! உன்னையும் ஒரு ஆளா மதிச்சு போய் சோப்பு வாங்கிட்டு வந்து கொடுத்தேன் பாரு என்னச் சொல்லனும் ? "
" சுத்தமா இருக்கிறது தப்பாடா ? "
" மொதல்ல இந்த சோப்பு விளம்பரத்த நிறுத்தனும் , போற போக்குல நீ பண்ணின மாதிரி பண்ணச்சொன்னாலும் சொல்லுவாங்க , அது சரி இனிமேல அந்தச் சோப்ப என்ன பண்ணுவ ? "
" நாளைக்கும் இதே மாதிரி குளிப்பாட்டி விடுவேன் ?! " என்றார் செல்வா.
" நாளைக்குமா ? எதுக்கு ? "
" ஏன்னா இந்தச் சோப்பு 24 மணிநேரப் பாதுகாப்புத் தானே ! " என்ற செல்வா கீழே விழுந்த சோப்பினை தண்ணீரில் கழுவத் தொடங்கினார்.

21 comments:
vadai
நீதி: அடுத்தவர்களுக்கு சோப்பு போட்டு காக்கா பிடிக்க கூடாது
போங்கட நீங்களும் உங்க கதைகளும்..
சோப்புக்கு சோப்பு போட்டதலால் இன்று முதல் நீ “ சோப்பு போட்ட சொக்கதங்கம்” என்று எல்லோறாலும் அன்போடு அழைப்படுவாய்..
//பாட்டு ரசிகன் said...
போங்கட நீங்களும் உங்க கதைகளும்..
///
நான் கூட கோபம் வந்திடுட்சோனு நினைச்சேன் .. ஹி ஹி
படுவா... சோப்புக்கு சோப்பா..
///
பாட்டு ரசிகன் said...
சோப்புக்கு சோப்பு போட்டதலால் இன்று முதல் நீ “ சோப்பு போட்ட சொக்கதங்கம்” என்று எல்லோறாலும் அன்போடு அழைப்படுவாய்..
/////
அதை நான் வழிமொழிகிறேன்..
இன்னைக்கு கவிதை வீதி வரவேண்டாம்..
டேய் நீ மட்டும் தான்டா இப்படி யோசிப்பே... நல்லா இருக்கு டா
" பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! "//// ஐயோ என் தங்கம் செல்வாவுக்கு என்னா அறிவு ..... :))
ரெம்ப நல்லாயுருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
சுத்தம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .................
நீதி : செல்வா தினமும் குளிக்கிறான் அப்டிங்கிறத நீங்க நம்புவீங்களா...:))
ஏய்.. கலக்கிட்ட..
சுத்தம் பத்தி பேசுற ஆளைப்பாரு அவ்வ்வ்வ்வ்வ்வ்...
>>அதுக்குள்ளே ஏண்டா குளிச்ச ? "
" பாத் ரூமுக்குள்ள தான் குளிச்சேன் , அங்கதானே குளிக்கணும் ?! "
அறிவுக்கொழுந்து///...
>>" சோப்புக்கே சோப்புப் போட்ட ஆள் நீயாத்தாண்டா இருப்ப !
ஹா ஹா செம கலக்கல்
>>" நாளைக்கும் இதே மாதிரி குளிப்பாட்டி விடுவேன் ?! " என்றார் செல்வா.
" நாளைக்குமா ? எதுக்கு ? "
" ஏன்னா இந்தச் சோப்பு 24 மணிநேரப் பாதுகாப்புத் தானே !
ஃபினிஷிங்க் டச்சு?ங்கொய்யால..?
செம கலக்கல் கதை செல்வா.... ஏப்ரல் ஃபூல் பண்ண வித்தியாசமா ஏதாவது பண்ணுவீங்கன்னு பார்த்தேன்... ஆனா ரியல் லைஃப்ல நீங்க கோபில.. அந்த பொண்ணை.. ச்சீ ச்சீ வேணாம்.. இது பொது இடம். ஹி ஹி
சோப்புக்கே சோப்பா.....? அந்த சோப்பு லைஃப்பாய்தானே?
///////சி.பி.செந்தில்குமார் said...
செம கலக்கல் கதை செல்வா.... ஏப்ரல் ஃபூல் பண்ண வித்தியாசமா ஏதாவது பண்ணுவீங்கன்னு பார்த்தேன்... ஆனா ரியல் லைஃப்ல நீங்க கோபில.. அந்த பொண்ணை.. ச்சீ ச்சீ வேணாம்.. இது பொது இடம். ஹி ஹி/////////
இதுல இது வேறயா........? சரி சரி மறந்துடாம எனக்கும் மெயில் பண்ணிடுங்க.........
Post a Comment