ஒரு முறை செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருன்தனர்.
அப்பொழுது ஒரு தென்னை மரம் பாளை(பூ) விட்டிருந்தது. இதைப் பார்த்த அவரது சகோதரர் இது காயா மாறி பறிக்கிற அளவு வரதுக்கு இன்னும் ஒரு வருசம் ஆகும் என்றார்.
இதைகேட்ட செல்வா அவ்ளோ நாள் எல்லாம் ஆகாது , ஒரு ஆறு மாசத்துல முத்திடும் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்படி அந்தக் குலையை அடையாளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஒரு வருடம் கண்காணிக்க வேண்டும் என்றும் , தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
ஒப்பந்தம் செய்து அடுத்த நாள் அவரது சகோதரர் வந்து பார்த்துச் சென்றுவிட்டார். அடுத்த நாள் செல்வாவின் முறை. அதற்கு அடுத்த நாள் சென்ற அவரது சகோதரர் அந்தக் குலை காணாமல் போனதால் சற்றே அதிர்ச்சியுற்றார்.
செல்வாவிடம் விசாரித்த போது தினமும் தோட்டம் சென்று வருவது சிரமமாக உள்ளது , அதனால் அந்தக் குலையை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும் இனிமேல் தோட்டம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக.
" தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.
No comments:
Post a Comment