Saturday, March 12, 2011

கழுதையைப் பார்க்கச் சென்ற செல்வா!

செல்வாவின் ஊருக்கு ஒருமுறை ஞாநி ஒருவர் வந்திருந்தார். ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர்.

செல்வாவும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார். மேலும் அவரிடம் தனக்கு எதாவது அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றும் அதுவும் இப்பொழுதே கிடைக்க என்ன செய்வது என்றும் கேட்டார். அதற்கு அந்த ஞாநி " போய் ஒரு கழுதையைப் பார் " என்று கூறினார்.

செல்வாவும் கழுதை எங்கு உள்ளது என ஊரில் விசாரித்தார். பக்கத்தில் உள்ள குட்டிச்சுவற்றில் கழுதை இருக்கும் என சிலர் கூறினர்.

கழுதை இருப்பதாகச் சொன்ன இடத்திற்குச் சென்ற செல்வா அங்கே கழுதை பின்பக்கமாக நின்றிருப்பதைக் கண்டார்.கழுதையின் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பதால் அதனது வாலைப் பிடித்து இழுக்கலாம் என்று வாலைப் பிடித்தார். ஆனால் அது சடீரென செல்வாவை பின்னங்கால்களால் உதைத்து விட்டு ஓடத் துவங்கியது. செல்வா இந்த அடியை எதிர்ப்பார்த்திருக்க வில்லை.

அதன் திடீர்த் தாக்குதலில் நிலைகுழைந்த செல்வா இரண்டடி தள்ளி விழுந்தார்.
அந்த வலியில் கழுதையைப் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டார். மேலும் அந்த ஞாநி மீது கோபம்கோபமாக வந்தது. 

நேராக ஞானியிடம் சென்றவர் " கழுதையப் பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்றீர் , ஆனால் அது உதைத்து எனக்கு ரத்தம் தான் வருகிறது " என்றார். இதைகேட்ட ஞாநி " அதிர்ஷ்டம் என்பதைத் தேடிப்போனால் இப்படித்தான் , நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம் " என்றார் சாந்தமாக.

ஜப்பான் சுனாமி நண்பர்கள் கவனத்திற்கு 

12 comments:

ஜீவன்சிவம் said...

ஹஹா...உண்மை தான்

எஸ்.கே said...

அற்புதமான கருத்து!
(அந்த ஞாநி ரமேஷ்தானே?)

MANO நாஞ்சில் மனோ said...

// அது சடீரென செல்வாவை பின்னங்கால்களால் உதைத்து விட்டு ஓடத் துவங்கியது. செல்வா இந்த அடியை எதிர்ப்பார்த்திருக்க வில்லை.//

மைனர் குஞ்சை சுட்டுட்டாங்களா.....

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ..உண்மைய சொல்லி இருக்க ...

MANO நாஞ்சில் மனோ said...

//அதன் திடீர்த் தாக்குதலில் நிலைகுழைந்த செல்வா இரண்டடி தள்ளி விழுந்தார்.//

இவளவு நாளும் எங்ககிட்டே இருந்துதான் உத வாங்கிட்டு இருந்தாய்....
இப்போ கழுதை கிட்டேயும் வாங்கியாச்சா ஹா ஹா ஹா ஹா ரொம்ப சந்தோஷமா இருக்குடி மனசுக்கு.....

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் இம்சை இவனை ஆஸ்பத்திரி கொண்டு போயி செக் பன்னுங்கய்யா கழுதை மிதிச்சது பலான இடத்துல....

கோவை நேரம் said...

///அதிர்ஷ்டம் என்பதைத் தேடிப்போனால் இப்படித்தான் , நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம் "///அசத்தலான வரிகள் ...வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வாவும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கச் சென்றார். மேலும் அவரிடம் தனக்கு எதாவது அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றும் அதுவும் இப்பொழுதே கிடைக்க என்ன செய்வது என்றும் கேட்டார். அதற்கு அந்த ஞாநி " போய் ஒரு கழுதையைப் பார் " என்று கூறினார்.//

செல்வா: அதான் தினமும் கண்ணாடி பாக்குரனே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கழுதைகிட்டயும் உத வாங்கிட்டயா?

சி.பி.செந்தில்குமார் said...

>>" அதிர்ஷ்டம் என்பதைத் தேடிப்போனால் இப்படித்தான் , நம்மைத் தேடி வருவதுதான் அதிர்ஷ்டம் " என்றார் சாந்தமாக.

கோபிக்கு அடுத்த பஸ் எத்தனை மணீக்கு..?

VELU.G said...

கம்முனு கண்ணாடியப் போய் பார்த்திருந்தா வேலை முமுடிஞ்சுருக்கும். ஹ ஹ ஹ ஹ ஹா

Unknown said...

ம்ம்ம்.. கருத்தோடதான் இருக்கு செல்வா கதை..