Thursday, March 24, 2011

சோதிடம் பொய்யா ?

செல்வா ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். ஆனால் அவளது அண்ணனை நினைத்து சற்று பயந்து வந்தார். இதை அறிந்த அவரது நண்பர் அவரிடம் " நீ எதற்கும் ஒரு சோதிடரிடம் ஆலோசனை கேள் " என்றார்.

செல்வாவும் அருகில் இருந்த சோதிடர் ஒருவரிடம் சென்று அந்தப் பெண்ணின் சாதகத்தைக் காட்டி ஆருடம் சொல்லுமாறு வேண்டினார்.

" இந்தப் பொண்ணு நல்ல வசதியான குடும்பத்துல பிறந்திருக்கும்... "

" ஆமா சார் , ரொம்ப சரியா சொன்னீங்க . அப்புறம் நான் முக்கியமா கேக்க வந்தது அவுங்க அண்ணன பத்தி.. "

" அவுங்க அண்ணனப் பத்தி சொல்லனும்னா ..இந்தப் புள்ள சாதகத்துப் படி  ஒன்னும் பயப்பட வேண்டியதில்லை .. சந்திரன் , செவ்வாயி ... ம்ம் .. ரொம்ப சாந்தமாதான் இருப்பார். பயப்பட வேண்டாம்.. " என்றார் சோதிடர்.

செல்வா சற்றே ஆறுதல் அடைந்து பின்னர் மீண்டும் அவளது தந்தை பற்றிக் கேட்டார்.

அந்தப் பெண்ணின் சாதகத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்தவர் " இந்த சாதகத்துப் படி இந்தப் பொண்ணோட அப்பா உயிரோட இருக்க முடியாதே . " 

" சார் , நல்லா பார்த்து சொல்லுங்க , அந்த ஆள் குத்துக்கல்லாட்டம் இருக்கார் " என்றார் செல்வா .

" எத வேணா சந்தேகப் படு , என்னோட கணிப்பு என்னிக்குமே பொய் போனதில்ல , அந்த ஆள் மட்டும் உசுரோட இருந்திட்டா நான் சோசியம் பாக்குற தொழிலையே விட்டுடறேன்." என்று சவாலாகப் பேசினார் சோதிடர்.

" உண்மைலேயே அவர் உயிரோடதான் இருக்காருங்க .! " என்றவர் குனிந்து எதையோ தேடினார்.

" நேர்ல காட்ட முடியுமா ? " 

" நேர்ல என்னத்தக் காட்டுறது , உங்க பொண்ணத்தான் நான் லவ் பண்றேன். நீங்க உயிரோடதானே இருக்கீங்க ? அதுக்குத்தான் கொஞ்சம் டவுட் ஆகி உங்க காலப் பார்த்தேன் " என்றார் செல்வா.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத சோதிடர் சற்று அதிர்ந்தவராய் " என்ன சொல்லுற , உண்மையாவா ? " என்றார்.

" ஆமாங்க , அதான் அவ சாதகத்த ஜெராக்ஸ் எடுத்துப் பேர மட்டும் மாத்திக்கொடுத்தேன் "

" போயும் போயும் உன்ன லவ் பண்றாளே " என்றவர் எப்படி என் ஜோதிடம் பொய்யாப்போச்சு " என்று குழம்பினார்.

இதைக்கேட்ட செல்வா " ஏன் உண்மை ஆகணும்னு நினைக்குறீங்களா ? " என்றார்.

" ஐயோ வேண்டாம் ... நான் வேணா அவள உனக்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்திடறேன்  " என்று பதறினார் சோதிடர்.

( தெய்வங்களே , இது முழுக்க முழுக்க கற்பனை .. நான் ஜோசியக் காரர் பொண்ண லவ் பண்ணல )

21 comments:

எஸ்.கே said...

Love is blind!

Madhavan Srinivasagopalan said...

// செல்வாவிற்கு மறுபடியும் சந்தேகம் வந்தது. இவர் சோதிடம் பொய்யாகிப் போனதால் இறந்து போனாரா ? அல்லது சோதிடத்தில் சொன்னது போல அவரது மகளின் சாதக நிலைப்படி இருந்துபோனாரா என்று !! //

அடப்பாவி.. ஜோசியக்காரனுக்கே ஜாதகம் குறிச்சிட்டியா ?.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லகாலம் பிறக்குது நல்லகாலம் பிறக்குது டுர் டுர் டுர்

சி.பி.செந்தில்குமார் said...

>>செல்வா ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார்.

செல்வா சின்ன வயசுல இருந்தே ஒருமை , பன்மை தகராறுல தத்தளிப்பார்.. பெண்களை என திருத்தி வாசிக்கவும் ஹி ஹி

பாட்டு ரசிகன் said...

இது நல்ல கேள்விதான்.

அதாவது ...
போத்திட்கிட்டு படுத்துக்களாமா.. படுத்துக்கிட்டு போத்திக்களாமா...

இது மாதிரியா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வித்தியாசமான சிந்தனைக் கொண்ட சிறுகதை... நன்று தொடருங்கள் தோழரே..

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல வேளை.. நல்ல நேரம் சதீஷ்க்கு இப்பத்தான் குழந்தை பிறந்திருக்கு.. அவர் கோபப்பட மாட்டார்.. ஆனா பதிவுலகில் பெண்கள் பெற்ற ஜோசியர்கள் 9 பேர் இருக்காங்க.. அதுல கல்யாண வயசுல பெண்கள் உள்ள ஜோசிய பதிவர்கள் 6 பேர் இருக்காங்க.. அவங்க கோபப்பட்டு மைனஸ் ஓட்டூ போடுவாங்களோன்னு பயமா இருக்கு.. ஹுஇ ஹி ஹி ஹி

பாட்டு ரசிகன் said...

இல்லன்னா...

முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா

அது மாதிரியா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தெய்வங்களே , இது முழுக்க முழுக்க கற்பனை .. நான் ஜோசியக் காரர் பொண்ண லவ் பண்ணல --- இந்த சமாளிப்பு எதுக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

>>நான் ஜோசியக் காரர் பொண்ண லவ் பண்ணல )

இப்போத்தான் செல்வா பாதி உண்மையை ஒத்துக்கிட்டாரு..பொண்ணை லவ் பண்றாராம்.. ஆனா அது ஜோசியக்காரர் பொண்ணு இல்லையாம்.. அப்போ ஆசியாக்காரர் பொண்ணா?

பாட்டு ரசிகன் said...

இல்லன்னா..

குடைபிடிப்பதால் மழை வருதா..
இல்லை மழை வரதால குடை பிடிக்கிறமா..

அது மாதிரியா...

karthikkumar said...

மச்சி அந்த பொண்ண பாக்கணும் எப்போ வரட்டும்?....:))

பாட்டு ரசிகன் said...

இல்லன்னா...

ஊத்திகினு கடிச்சிக்கலாம்
இல்ல கடிச்சிக்கினு ஊத்திக்கலாம்..

அது மாதிரியா...

கோமாளி செல்வா said...

@ பாட்டு ரசிகன்
இதுல இவ்ளோ இருக்கா ? ஹி ஹி ஹி

பாட்டு ரசிகன் said...

இல்லன்னா...

கதை படிக்க இங்க வரமா..
இல்ல இங்க வந்ததால கதை படிக்கிறமா...

அது மாதிரியா..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆனா பதிவுலகில் பெண்கள் பெற்ற ஜோசியர்கள் 9 பேர் இருக்காங்க.. அதுல கல்யாண வயசுல பெண்கள் உள்ள ஜோசிய பதிவர்கள் 6 பேர் இருக்காங்க.. --- இவர் என்ன விஜயகாந்த் ரசிகரா?

கோமாளி செல்வா said...

@ கருண் :

அவர் விஜயகாந்த் நற்பணி மன்ற தலைவர் ... ஹி ஹி ..

பாட்டு ரசிகன் said...

இல்லன்னா...

வேலைக்காக பாரின் போரோமா
இல்லை பாரின் போகதால வேலைக்கு செய்யரோமா..

அது மாதிரியா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் இல்லாத்தப் கதையை போட்டதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஊர்ல ஒரு பெண்ணை விடரதில்லயா...

ராஜி said...

இந்த பொண்ணையாவது கல்யாணம் கட்டிக்குவியா இல்ல எப்பவும்போல பிக் அப்பு. டிராப்பு எஸ்கேப்பா?