Saturday, March 26, 2011

தெரிந்த வேலை

செல்வாவின் அலுவலகம் முன்பு மழை நீரினால் ஏற்பட்ட ஒரு குழி ஒன்று இருந்தது.

ஒருநாள் செல்வாவிற்கு வேலை குறைவாக இருந்ததால் அவரது மேலாளர் செல்வாவை அழைத்து யாரேனும் கூப்பிட்டு இந்தக் குழியை மூடிவிடு என்று கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு செல்வா அந்த வேலையே முடித்துவிட்டதாகவும் வந்து பார்வையிடுமாறும் அவரது மேலாளரிடம் கூறினார்.

இதைக்கேட்ட அவரது மேலாளர் " வெரி குட் , அதுக்குள்ளே முடிச்சிட்ட " என்று கூறிக்கொண்டே அந்தக் குழி இருந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அந்தக் குழி மூடப்பட்டிருந்தது , ஆனால் அதற்குப் பக்கத்தில் வேறொரு குழி புதிதாகத் தோண்டப்பட்டிருந்தது. மேலாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

" இந்தக் குழி எதுக்கு ? " என்றார் மேலாளர் சற்று கோபமாக .

" சார் அந்தக் குழிக்கு மண் எங்க இருந்து எடுக்கிறதுன்னு கேட்டாங்க , அதான்
பக்கத்துல தோண்டி எடுத்துக்கோங்கனு சொன்னேன் , அதுல குழி ஆகிருக்குமோ ? " என்றார் செல்வா வியப்பாக.

செல்வாவை முறைத்த அவரது மேலாளர் " நல்லா படிச்சிருக்க , இன்டர்வியூவ்லயும் நல்லா பெர்பார்ம் பண்ணினணுதான் உன்ன வேலைக்கு எடுத்தேன். ஒரு குழிக்கு மண்ணு கூட போடத் தெரியாம இருக்கியே , உன்னயெல்லாம் வச்சு என்ன பண்ணுறது? " என்றார்.

" சார் , இது எனக்கு எப்படி சார் தெரியும் , எனக்குத் தெரிஞ்ச வேலை சொல்லி அதுல தப்பு நடந்தா கேளுங்க , தெரியாத வேலையக் குடுத்துட்டு தப்பாகிடுட்சுனா நான் என்ன சார் பண்ண முடியும் ? " என்றார் செல்வா.

11 comments:

Madhavan Srinivasagopalan said...

HA..Ha..Ha..

very true..

பாட்டு ரசிகன் said...

அறிவு ஜீவியே வாழ்க...

NaSo said...

உனக்கு எது தெரிஞ்ச வேலை செல்வா?

பெசொவி said...

//" சார் அந்தக் குழிக்கு மண் எங்க இருந்து எடுக்கிறதுன்னு கேட்டாங்க , அதான்
பக்கத்துல தோண்டி எடுத்துக்கோங்கனு சொன்னேன்//

தேவையான அளவு மண் செல்வாவோட மூளையிலிருந்தே கிடைத்திருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு பேசாம பெரிய குழியா வெட்டி, உங்க டேமேஜ்ரை தள்ளிவிட்ருக்கலாம்......

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுக்கு பேசாம பெரிய குழியா வெட்டி, உங்க டேமேஜ்ரை தள்ளிவிட்ருக்கலாம்..///
அதுவும் பண்ணிருக்கலாம் இல்லைனா கூட அதுல செல்வாவே குதிச்சு இருக்கலாம்......:))

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா அறிவுக்கொழுந்து

சௌந்தர் said...

ம்ம்ம்ம் என் டா என் நீ மட்டும் இப்படி யோசிக்குரே .....உனக்கு மட்டும் ஏன் இப்படி

Anonymous said...

சரியான கேள்விதான் கேட்றீங்க !!!

பிரதீபா said...

அய், நம்ம ஊர்க்காரர்ப்பா இவரு..
செல்வா கதைகள் பாதி படிச்சுட்டேன்.. உங்க பொறுமை, யோசிப்பு இதெல்லாத்துக்கும் பாராட்டுக்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், சமூகத்தில் நடக்கும் இயல்பான விடயங்களைத் தொகுத்து, நகைச்சுவை உணர்வினைக் கலந்து இப் பதிவினைத் தந்துள்ளீர்கள். உங்களது எழுத்து நடை பதிவிற்குப் பக்க பலம். இப் பதிவின் மூலம் சமயோசிதமாக யோசித்தும், சறுக்கி விழும் மனித உள்ளங்களைச் சுட்டியிருக்கிறீர்கள்.