Monday, March 14, 2011

செல்வா கேட்ட சந்தேகம்

ஒரு முறை செல்வாவின் ஆசிரியர் அந்த மூன்று அறிவாளிக் குரங்குகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த மூன்று குரங்குகளின் பெயர்களையும் கூறி , அவை எதனை உணர்த்துகின்றன என்பதையும் விளக்கினர்.

" இங்க பாருங்க பசங்களா , இந்தக் மூணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு. இதுல முதல் குரங்கு ஏன் கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்குன்னு தெரியுமா ? " 

" தெரியாது சார் " என்றனர் மாணவர்கள் ஒரே குரலில்

" முதல்ல ஒரு குரங்கு கண்ண மூடின மாதிரி உட்கார்ந்திருக்கு. அது நமக்கு எத உணர்த்துதுனா தீயவற்றைப் பார்க்காதே அப்படின்னு சொல்லுது. 

இரண்டாவது குரங்கு காத மூடி இருக்கு இல்லையா , அது தீயவற்றைக் கேட்காதே அப்படின்னு சொல்லுது , மூணாவதா வாய மூடி உட்கார்ந்திருக்குற குரங்கு தீயவற்றைப் பேசக்கூடாது அப்படின்னு நமக்கு உணர்த்துது! , இனிமே நீங்களும் இதே மாதிரி கெட்ட விசயங்களப் பாக்கவோ , கேக்கவோ, பேசவோ கூடாது !, எதாச்சும் சந்தேகம் இருந்தா கேளுங்க " என்றார்.

சட்டென எழுந்த செல்வா " சார் இங்க இருக்குற மூணு குரங்குல நாங்க எந்த குரங்கு மாதிரி இருக்கணும் ? " என்றார்.

" புரியலப்பா, சரியா கேளு " 

" இல்ல சார் முதல் குரங்கு கெட்ட விசயங்களப் பாக்காதுன்னு சொல்லுறீங்க ? அப்படின்னா அது கெட்ட விசயங்கள கேக்கும் , பேசும் அப்படித்தானே , ஏன்னா அது கண்ண மட்டும் தானே மூடி இருக்கு !! " என்றார்.

23 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

இரு படிச்சிட்டு வந்து உன்னை போட்டு தள்ளிர்றேன்.....ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

//சார் இங்க இருக்குற மூணு குரங்குல நாங்க எந்த குரங்கு மாதிரி இருக்கணும் ? " என்றார்.//

எல்லாமே குரங்குதானா...?
அதானே பார்த்தேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//அப்படின்னா அது கெட்ட விசயங்கள கேக்கும் , பேசும் அப்படித்தானே , ஏன்னா அது கண்ண மட்டும் தானே மூடி இருக்கு !! " என்றார்.//

வாத்தி கண்டிப்பா தற்கொலை பண்ணி செத்துருப்பான்...

வைகை said...

ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?

எஸ்.கே said...

//ணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு.///

ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-)))

எஸ்.கே said...

சௌந்தர்: முதல் குரங்கு மாதிரிதான் நான் இருப்பேன்.
செல்வா: ஏண்டா?
சௌந்தர்: அப்பத்தான் உன் கதைகளை படிக்க முடியாது!
செல்வா: கவலைப்படாதே நான் தினமும் உன் காதில கதை சொல்றேன்!

வைகை said...

எஸ்.கே said...
//ணு குரங்குகளோட பேரு மிசாரு , கிகாசாரு, இவாசாரு.///

ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-))) //

ஹா..ஹா..கோர்த்துவிட்டார் எஸ்.கே.. :))

சி.பி.செந்தில்குமார் said...

ஸ் அப்பா.. முடியல

செல்வா said...

//ஏதோ பெரிய இடத்தில மோதுற மாதிரி இருக்கே!:-)))//

Ayyo naan enkayum mothala.. unmailaye athoda per athuthaan.. naan poi aani pudunkiren

மாலுமி said...

டேய்,
யவன்டா உன்ன படச்சான்
கைல கிடச்சான் செத்தான்
இருக்குடி உனக்கு..............

Unknown said...

கரெக்டு.. சரியான சந்தேகம் செல்வா.. :-)..

க்ர்ர்ர்ர்ர்...

VELU.G said...

யப்பா சாமி எந்த ஊருப்பா நீயி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வைகை said...
ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?

karthikkumar said...

மச்சி இது கரெக்டான கேள்வி பாவம் அந்த வாத்திக்கு அறிவு பத்தல போல .....:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு தெரிஞ்சுக்கனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு வேளை செல்வா உண்மைலே புத்திசாலியோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
ஸ் அப்பா.. முடியல //////////

அப்படின்னா நைட்டு 9.30 மணிக்கு சன்டிவில டாக்டர் எக்ஸ் பாருங்கண்ணே...........

கோவை நேரம் said...

யப்பா ..என்ன ஒரு வில்லத்தனம் .......முடியல ...

Madhavan Srinivasagopalan said...

அடப்பாவி.. இதுக்கு இப்படிக்கூட அர்த்தம் இருக்கா ?

மங்குனி அமைச்சர் said...

செல்வா உண்மையிலேயே சூப்பர் கதை

Unknown said...

கேளுங்க...கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க...

பிரதீபா said...

அடசாமி.. என்னா அறிவு, என்னா அறிவு. வாத்தியாரு இன்னும் உயிரோட இருக்காரா? டைமண்ட் ஜூபிலி?