Tuesday, March 29, 2011

செல்வாவின் திட்டம்

மருத்துவமனையில் செல்வாவும் மருத்துவரும் எதைப்பற்றியோ கொஞ்சம் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். செல்வா தனக்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை செய்யுமாறு வேண்டிக்கொண்டிருந்தார்.

" ஐயோ அதெல்லாம் நினைச்ச நேரத்துக்குப் பண்ண முடியாதுங்க ! "

" ஏன் பண்ண முடியாது ? சரி இன்னிக்கு வேண்டாம் , நாளைக்கு பண்ணுங்க ., அதுவும் முடியலைனா இந்த வாரத்துக்குள்ள பண்ணிடுங்க! "

" என்ன விளையாடுறீங்களா ? நான் இங்க என்ன சின்ன குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடமா நடத்திட்டு இருக்கேன் , உங்க இஷ்டத்துக்கு எல்லாம் ஆபரேசன் பண்ண முடியாது ! " என்று கத்த ஆரம்பித்தார்.

ஆனால் செல்வா மருத்துவரின் கூச்சலுக்குப் பயக்கவில்லை. " அதெல்லாம் முடியாது டாக்டர் , எனக்கு நீங்க ஆபரேசன் பண்ணித்தான் ஆகணும் " 

" என்னங்க புரியாம பேசுறீங்க , உங்களுக்குத்தான் ஒரு பிரச்சினையும் இல்லையே , அப்புறம் எதுக்கு ஆபரேசன் பண்ணனும் ? " 

" எனக்குப் பிரச்சினை இல்ல , ஆனா அடுத்த மாசத்துக்குள்ள என்னோட மெடிக்ளைம் பாலிசி முடியுது, அதனால என்னோட பணம் வேஸ்ட் ஆகிடும் போல , அதான் ஒரு ஆபரேசனாச்சும் பண்ணிக்கலாம்னுதான் " என்றார் செல்வா கொஞ்சம் ஏக்கமாக.

இதைகேட்ட மருத்துவர் " ஏங்க இப்படி இருக்கீங்க ? எல்லோரும் நோய் வரக்கூடாதுன்னு நினைப்பாங்க , ஆனா உங்களை மாதிரி ஒரு லூச இதுவரைக்கும் பார்த்ததே இல்ல , தயவு பண்ணி வேற ஹாஸ்பிடல் பார்த்துக்கோங்க " என்று கத்தியவரை மேலும் பார்க்க வேண்டாமென எண்ணி செல்வா அகிம்சைக் கடைப்பிடித்து வெளியில் வந்தார்.


15 comments:

சக்தி கல்வி மையம் said...

1.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ அட்லீஸ்ட் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனாவது பண்ணிட்டு வந்திருக்கலாம்..

சக்தி கல்வி மையம் said...

ஆரம்பம் நல்லாயிருக்கு நண்பா... முடிவு பிடிக்கல..
எதிர்பார்ப்பு புஸ்ஸூனு ஆயிடுச்சி ...மன்னிக்கவும்..

சக்தி கல்வி மையம் said...

இப்பவெல்லாம் நம்ம பக்கம் பாக்கமுடியலியே? என்னாச்சு?

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏய்.. செல்வா கதை வந்திடுச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதியில் இன்றைய பதிவு...

கோமாளி செல்வாவும் விண்டோசும்...!

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_29.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த கதை எப்படியிருக்குன்னு சொல்லு செல்வா...

செல்வா said...

இது மாதிரி ஒரு விளம்பரம் வந்திடுட்சாம்ல :-(

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீ அட்லீஸ்ட் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனாவது பண்ணிட்டு வந்திருக்கலாம்./// he he அதுக்கு பாலிசி க்ளைம் ஆகுமோ ....:))

சௌந்தர் said...

இவன் கிட்னியை புடுங்கிட்டு விட்டு இருக்கணும்

Madhavan Srinivasagopalan said...

// கோமாளி செல்வா said...

இது மாதிரி ஒரு விளம்பரம் வந்திடுட்சாம்ல :-( //

சொல்லுறதையும் சொல்லிட்டு இப்படி சமாளிக்கலாமா.. ?

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீ அட்லீஸ்ட் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனாவது பண்ணிட்டு வந்திருக்கலாம்..//

:-)))

i thing this comment only suitable for this selva story..!

continue selva :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீ அட்லீஸ்ட் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனாவது பண்ணிட்டு வந்திருக்கலாம்..//////

அவன் தான் மிஸ் பண்ணிட்டான், நீயாவது பண்ணிடு.... இன்சூரன்ஸ் முடியறதுக்குள்ள....!

நிரூபன் said...

வணக்கம் சகோ, அட எப்படியெல்லாம் நம்ம ஆளுங்க பணத்தைச் சேமிக்க, வழி பண்ணுறாங்க என்பதற்கு இந்தக் கதை ஒரு கடி.