Monday, February 28, 2011

இனிதே ஆரம்பம்.!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கோமாளி.! வலைப்பக்கத்துல செல்வா கதைகள் படிச்சிருப்பீங்க. உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். செல்வா கதைகளுக்கு மட்டுமே ஒரு தனி வலைப்பக்கம் இருக்கட்டுமே அப்படின்னு தான் இது.

இந்தப் வலைப்பகத்துல முழுவதும் செல்வா கதைகள் மட்டுமே பதிவிடப்படும்.  செல்வா கதைகள் உண்மையா அப்படின்னு சிலர் கேக்குறாங்க.எல்லாமே என்னோட கற்பனைகள்தான். ஆனா சில கதைகள் உண்மையாவும் இருக்கும்.

செல்வா கதைகள் எழுதுறதுக்கு காரணம் கண்டிப்பா முல்லா கதைகள்தான். கொஞ்ச நாள் முன்னாடி கோமாளி.! வலைப்பக்கத்துல ஒரு பதிவுக்கு நம்ம எஸ்.கே அண்ணன் முல்லா கதை ஒன்ன பின்னூட்டமா போட்டிருந்தார்.

நானும் அதுக்கு முன்னாடி சில முல்லா கதைகள் படிச்சிருக்கேன். உண்மைலேயே ரொம்ப ரொம்ப நகைச்சுவையா இருக்கும்.அப்போதான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது. நாமளும் ஏன் சின்னச் சின்ன கதைகள் எழுதக்கூடாது அப்படின்னு. அதன் விளைவுதான் செல்வா கதைகள்.

அத திங்கள் திங்கள் கோமாளி.! வலைப்பதிவுல எழுதினேன். ஆனா அதுல தலைப்பு செல்வா கதைகள் அப்படின்னு வைக்கிறதால பழைய பதிவுகளப் பார்க்கும்போது வெறும் செல்வா கதைகள் மட்டுமே தெரிஞ்சது.

அதனாலதான் இந்த வலைப்பக்கம். அதனால இனிமேல் திங்கள் கிழமைய நினைச்சு நீங்க பயப்பட வேண்டியதில்லை. நான் உங்களிடம் எதிர்பார்ப்பது சரியான கருத்துக்கள் மட்டுமே. செல்வா கதைகள் படிச்சிட்டு உங்களுக்கு சிரிப்பு வந்தா சிரிப்பு வந்ததுன்னு சொல்லுங்க , வரலைனா சிரிப்பு வரலைன்னு சொல்லுங்க. அது என் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த அறிமுகம் போதும்னு நினைக்கிறேன். ஏன்னா இந்த வலைப்பக்கத்துல இத விட பெரிய பதிவுகள் கண்டிப்பா வராது. ஒவ்வொரு பதிவும் அதிகபட்சம் மூன்று நிமிடங்களில் படித்து முடித்து விடும் அளவுல இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.!