Monday, March 21, 2011

என்னோட போன் எங்க இருக்கு ?

செல்வா ஒரு முறை தனது தொலைபேசியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே தனது நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.

" டேய் பிரபு , என்னோட போன காணோம் , நீ பார்த்தியா ? "

" நீ உண்மைலேயே லூசா , இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா ? " என்றார் பிரபு சற்று கோபமாக.

" ஏண்டா ? "

" என்ன நோண்டா , இனிமேல் என்கிட்டே போன காணோம் , கீன காணோம் சொல்லிப்பாரு " என்று கோபமாக கூறினார் பிரபு.

" போடா , உன்னோட போன் தொலைஞ்சா தெரியும் " 

" போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! " என்று சிரித்தார் பிரபு.

" போடா , உங்கிட்ட கேட்டேன் பாரு " என்று கூறிவிட்டு அவரது மற்றொரு நண்பரிடம் கேட்டார்.


" மச்சி , என்னோட போன பார்த்தியா ? "

" இல்ல , ஏன் காணாம போச்சா ? எப்ப இருந்து காணோம் ? அது காணாம போகும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தது ? "

"ங்கொய்யால , போன் எப்படிடா டிரஸ் போடும் ? "

" ஒ , சாரி , வழக்கம்போல கேட்டுட்டேன். சரி அத எப்படி கண்டுபிடிக்கிறது ? "

" அதான் எனக்கும் தெரியல ,ஆ , ஐடியா .. உன்னோட போன்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் விடேன் , அத வச்சு கண்டுபிடிச்சிடலாம்ல " என்றார் செல்வா சற்று மகிழ்ச்சியாக.

" மிஸ்ட் கால எதுக்கு கண்டுபிடிக்கணும் ? "

" டேய் , மிஸ்ட் கால கண்டுபிடிக்கல , என்னோட போன கண்டுபிடிக்கலாம்னு சொன்னேன் ! " 

" சரி , இரு விடுறேன் .... ஐயோ என்னோட போன்ல பேலன்ஸ் இல்ல மச்சி , சாரிடா " என்றார் அவரது நண்பர்.

" ச்சே , சரி விடு , நானே தேடிப்பாக்குறேன் " , என்று காணமல் போனதாகத் தேடிக்கொண்டிருந்த தொலைபேசியின்  இணைப்பைத் துண்டித்தார் செல்வா.

17 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் தான் பஸ்ட்..

சி.பி.செந்தில்குமார் said...

>>" போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! "

ஹா ஹா செம

சி.பி.செந்தில்குமார் said...

>>
" இல்ல , ஏன் காணாம போச்சா ? எப்ப இருந்து காணோம் ? அது காணாம போகும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தது ? "லொள்ளு

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு மிஸ்ட் கால் விடேன் ,


ச்சே... ச்சே.. அது தப்பு.. செல்வா...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////
" நீ உண்மைலேயே லூசா , இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா ? "////////

என்னது வெளியில தெரிஞ்சி போச்சா...

சி.பி.செந்தில்குமார் said...

>>ச்சே , சரி விடு , நானே தேடிப்பாக்குறேன் " , என்று காணமல் போனதாகத் தேடிக்கொண்டிருந்த தொலைபேசியின் இணைப்பைத் துண்டித்தார் செல்வா.

ஃபினிஷிங்க் டச்சாக்கும்.. ங்க்கொய்யால,..... ஹா ஹா

# கவிதை வீதி # சௌந்தர் said...

தொலஞ்ச பொருள தேடுறோம்.. அந்த பொருள் கிடைச்சிட்டா அடுத்து என்ன செய்யனும் தெரியுமா?..

வைகை said...

இதில் யார் புத்திசாலி?

வைகை said...

போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! " என்று சிரித்தார் பிரபு.//

அவருக்கும் தெரிஞ்சிருச்சா? ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

இந்த மாதிரி பேசிக்கிட்டே இருந்தா, போன் காணமப் போகுதோ இல்லையோ.. கண்டிப்பா காசு கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போயிடும்..

எஸ்.கே said...

அப்ப ஃபோன் கிடைக்காதா!
அப்ப ஃபோன் கிடைக்காதா!
அப்ப ஃபோன் கிடைக்காதா!
அப்ப ஃபோன் கிடைக்காதா!

dheva said...

அடப்பாவி மனுசா போன் போட்டு பேசிகிட்டே போன தேடுவியா....????? ஹா..ஹா..ஹா..!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

குட்டிக் கதைக்கு உள்ள மகத்துவமே தனி...
இக்கதையின் முடிவு அருமை...

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா.ஹா..............சூப்பர் செல்வா .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ கடேசி வரைக்கும் போன் கிடைக்கலியா?

Anonymous said...

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள்.
இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :
* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.
* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.
* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.
* முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.
* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம். - இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால அனானி, ஏன்யா இப்படி ஒரு பச்சப்புள்ள ப்ளாக்ல வந்து இப்படி அராஜகம் பண்றீங்க?