செல்வாவின் உடல் சற்று ஒல்லியாக இருந்தது. தான் எப்படியும் தனது உடல் அளவினை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய செல்வா அருகில் இருந்த மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறலாம் என்று சென்றார்.
செல்வாவின் உடலைச் சோதனை செய்த மருத்துவர் " ஒன்னும் பிரச்சினை இல்லை , மீன் சாப்பிட்டா உங்க உடம்பு ஒரு வாரத்துல 3 கிலோ ஏறிடும் " என்று கூறி அடுத்தவாரம் வந்து பார்க்குமாறு அனுப்பினார்.
ஒருவாரத்திற்குப் பிறகு மருத்துவரைச் சந்திக்கச் சென்றிருந்த செல்வாவின் எடை கொஞ்சமும் அதிகரிக்கவில்லை. இதைப் பார்த்த மருத்துவர் " மீன் சாப்டா உடம்பு வரும்னு சொன்னேனே , என்ன பண்ணுனீங்க ? "
" சார் நானும் ஒரு கிலோ எடை இருக்குற மீன் வாங்கி எங்க வீட்டுத் தொட்டில விட்டு தினமும் அதுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டுட்டே இருக்கேன் , அதுதான் கொழு கொழுன்னு வளருதே தவிர என்னோட எடை அதிகமாகவே இல்ல " என்றார் பரிதாபமாக.
இதைக்கேட்ட மருத்துவர் " என்ன சொல்லுறீங்க ? மீனுக்கு எதுக்கு சாப்பாடு போட்டீங்க ? " என்றார் குழப்பமாக.
" நீங்கதானே சொன்னீங்க , மீன் சாப்பிட்டா என்னோட உடம்புக்கு நல்லதுன்னு , அதான் மீனுக்கு சாப்பாடு செஞ்சு போட்டேன் ., அதுவும் சாப்பிட்டுச்சு ! "
" நான் சொன்னது மீன நீங்க சாப்பிட்டா நல்லதுன்னு சொன்னேன் , மீன் சாப்பாடு சாப்பிட்டா அதுக்குத்தான் நல்லது , உங்களுக்கு இல்ல .." என்று கூறியவர் " இனிமேலாச்சும் மீன் வாங்கி நீங்க சாப்பிடுங்க " என்று அறிவுறுத்தினார்.
" சார் உயிரோட மீனா ? இல்ல செத்துப்போன மீனா ? "
எரிச்சலடைந்த அந்த மருத்துவர் " உயிரோட மீன் தான் " என்றார்.
" அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா ? , ஆனா ஒரு பானை தண்ணி என்னோட வயிறு பிடிக்காதே ?!! "
இந்தக் கேணத்தனமான கேள்வியை எதிர்பார்த்திராத அந்த மருத்துவர் " தயவு செஞ்சு வெளிய போறீங்களா ? இல்ல நான் போகட்டுமா ? " என்று கூச்சல் போட்டார்.
இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.
25 comments:
meen vadai
meen pajji
meen protta
மீனா ரொம்ப பழைய பிகராச்சே...
இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்//// இதெல்லாம் கிரியேட்டர்ஸ் லைப்ல சகஜம் மச்சி...:))
ஐயோ ஐயோ டேய் முடியலடா உண்மையில் சிரிச்சேன் இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் :)செல்வா கலக்குறே
எப்படியோ இன்னிக்கு ஓட்டிட்டே..
செல்வா புத்திசாலிதானே?
நல்லவேள..அவரு மீன மட்டும் சொன்னாரு...மீனா...சாப்ட சொல்லல!
மீன் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது..
சாப்பிடலன்னா மீனுக்கு நல்லது..
எப்பூடி..
அப்படியே ஒரு எட்டு கவிதை வீதி வாங்க..
அப்டீக்கா பவானிசாகர் டேம் போனீங்கன்னா கடைல மீன் நெறைய வறுத்து வெச்சிருப்பாங்க.. இதுக்குப் போயி, பானை, சோறுன்னுட்டு..
>>இந்தக் கேணத்தனமான கேள்வியை
கேனத்தனமா.. ஹி ஹி
>>இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.
ஹி ஹி ஃபினிஷிங்க் டச்சு? ஹா ஹா
சரி மக்கா சிரிச்சிட்டேன் போதுமா.
enjoyable read..!
//அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா//
Rolling On The Floor Laughing :))
////செல்வாவின் உடல் சற்று ஒல்லியாக இருந்தது. //////
சற்று ஒல்லியாவா இருக்கு................?
/////////செல்வாவின் உடலைச் சோதனை செய்த மருத்துவர் " ஒன்னும் பிரச்சினை இல்லை , மீன் சாப்பிட்டா உங்க உடம்பு ஒரு வாரத்துல 3 கிலோ ஏறிடும் " என்று கூறி அடுத்தவாரம் வந்து பார்க்குமாறு அனுப்பினார்./////////
யாருலே அந்த டாகுடரு..........?
////////" சார் நானும் ஒரு கிலோ எடை இருக்குற மீன் வாங்கி எங்க வீட்டுத் தொட்டில விட்டு தினமும் அதுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டுட்டே இருக்கேன் , ////////
நீ சொல்றத பாத்தா மீனுக்கு மட்டன் சிக்கன்னு செஞ்சு போட்டிருப்பே போல?
//////" அப்படின்னா என்னோட வயித்துல தண்ணிய நிரப்பி வயித்துக்குள்ள வளர்க்கனுமா ? , ஆனா ஒரு பானை தண்ணி என்னோட வயிறு பிடிக்காதே ?!! "////////
யோவ் அப்பிடியே வளர்த்தாலும் வயித்துக்குள்ள கடிச்சு வெச்சிடுமே?
//////இந்தக் கேணத்தனமான கேள்வியை எதிர்பார்த்திராத அந்த மருத்துவர் " தயவு செஞ்சு வெளிய போறீங்களா ? இல்ல நான் போகட்டுமா ? " என்று கூச்சல் போட்டார்.////////
பேசாம அவரை வெரட்டிட்டு கிளினிக்க கைப்பத்தி இருக்கலாம்ல?
//////இது வழக்கமாக செல்வாவிற்கு நடப்பதுதான் என்பதால் ஒன்றும் நடக்காததுபோல வெளியில் கிளம்பினார்.////////
அடிவாங்கி வாங்கி உடம்ப ரணமா ஆக்கி வெச்சிருக்கான் போல...?
மெய்மறந்தேன்..
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_3510.html வைகோ இப்போது என்ன செய்கிறார் ?
//எரிச்சலடைந்த அந்த மருத்துவர் " உயிரோட மீன் தான் " என்றார்.//
உயிரோட மீன் சாப்பிட்டா நல்லதுன்னு மெய்யாலுமே கொஞ்சம் பேர் மீன் வைத்தியம் செஞ்சுகிட்டிருக்காங்க இந்தியாவுல.
Post a Comment