Friday, March 25, 2011

செல்வாவின் முன்னெச்சரிக்கை

செல்வாவின் நண்பர் ஒருவர் குளியலறையில் தரை வழுக்கியதால் கீழே விழுந்து பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகவலை அறிந்த செல்வா நண்பரைக் காண்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்பொழுது செல்வாவின் தொலைபேசி ஒலித்தது. செல்வாவின் நண்பர் அழைத்திருந்தார். அவரிடம் பேச செல்வாவிற்கு விருப்பம் இல்லையாதலால் தொலைபேசியை எடுத்து " என்னோட போன் சுவிட்ச் ஆப் ல இருக்கு " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

அங்கிருந்த அந்த நண்பரின் உறவினர்களிடம் விசாரித்த செல்வா அவரது நண்பர் இருந்த அறைக்குச் சென்றார். 

நண்பரின் உடல்நிலை இப்பொழுது கொஞ்சம் நல்ல நிலைக்கு மாறியிருந்தது. செல்வா அவரது உடல்நிலையைப் பற்றி விசாரித்துவிட்டு " எங்க விழுந்த ? " என்றார்.

" பாத்ரூம் போகும்போது தரை வழுக்கி விட்டுருச்சு ! "

" இதுக்குத்தான் எங்க போனாலும் ஹெல்மெட் போடனும்கறது ? " என்றார் செல்வா.

" லூசா நீ , பாத்ரூம் போகும்போது கூட ஹெல்மெட் போடனும்கற ? "

" அட எங்க போனா என்ன ? ஹெல்மெட் போட்டுட்டுப் போக வேண்டியதுதானே ! "

" உன்னயெல்லாம் எவன் உள்ள விட்டது ? உன்னப் பார்த்த போதே நினைச்சேன் , ஒழுங்கா வெளிய போய்டு " என்று கத்த ஆரம்பித்தார் அவரது நண்பர்.

நல்லதுக்கே காலம் இல்லை என்று முனகியவாறே செல்வா மருத்துவமனையில் இருந்து வெளியில் கிளம்பினார்.


13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்ப நீ ஹெல்மெட் போட்டுக்கிட்டு இருக்கியா.. மக‌னே கல்லு வருது...

பெசொவி said...

நல்ல வேளை, நான் ஹெல்மெட்டோட இந்த ப்ளாக் படிக்க வந்தேன், இல்லைனா, விழுந்து விழுந்து சிரிச்சதில தலை அடிபட்டிருக்கும் இல்ல?

Madhavan Srinivasagopalan said...

// செல்வாவின் நண்பர் ஒருவர் குளியலறையில் தரை வழுக்கியதால் கீழே விழுந்து பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகவலை அறிந்த செல்வா நண்பரைக் காண்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். அப்பொழுது செல்வாவின் தொலைபேசி ஒலித்தது. செல்வாவின் நண்பர் அழைத்திருந்தார். அவரிடம் பேச செல்வாவிற்கு விருப்பம் இல்லையாதலால் தொலைபேசியை எடுத்து " என்னோட போன் சுவிட்ச் ஆப் ல இருக்கு " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். //

நண்பரைப் பாத்து பேசணும்னு தான ஆஸ்பத்ரிக்கு போனீங்க,
அப்புறம் ஏன் செல்போன் இணைப்பு துண்டிச்சீங்க ?

ஓ! அது வேற நண்பரா.. தெளிவாச் சொல்லனும்ல..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல வேளை, நான் ஹெல்மெட்டோட இந்த ப்ளாக் படிக்க வந்தேன், இல்லைனா, விழுந்து விழுந்து சிரிச்சதில தலை அடிபட்டிருக்கும் இல்ல?
///////

விழுந்து விழுந்து சிரிச்சிங்களா..

இப்படி உசுப்பேத்தியே ரணகளமாக்க விடறீங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றி கிளம்பியாச்சி...

சௌந்தர் said...

சரி சரி நீ ஹல்மெட் போட்டு தானே சுச்சு போறே

Anonymous said...

Yes, Wearing helmet is safety always...

Madhavan Srinivasagopalan said...

இனிமேல் செல்வா பிளாக் பக்கம் போகுறப்ப உடம்பு பூரா வெளிய தெரியாம இரும்புக் கவசம் போட்டுதான் போகணும்.. அந்தக் கடி கடிக்கராறு..

Anonymous said...

" அட எங்க போனா என்ன ? ஹெல்மெட் போட்டுட்டுப் போக வேண்டியதுதானே ! //
அதானே...இப்ப செல்வா பிளாக் வந்திருக்கேன் இதுக்கும் போட்டுக்கறது நல்லதா

வைகை said...

புத்திசாலி செல்வாவை இந்த உலகம் எப்பொழுது புரிந்துகொள்ளும்?

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவின் நண்பர் ஒருவர் குளியலறையில் தரை வழுக்கியதால் கீழே விழுந்து பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.//

உனக்கு நண்பனா வாய்ச்சவனும் கண்ணு தெரியாத கபோதியா....

MANO நாஞ்சில் மனோ said...

//நல்லதுக்கே காலம் இல்லை என்று முனகியவாறே செல்வா மருத்துவமனையில் இருந்து வெளியில் கிளம்பினார்.//

அப்புறம் அந்த நண்பரை கீழ்பாக்கம் கொண்டு போனது தனி கதை....

Unknown said...

நல்ல நகைச்சுவை...