செல்வா அலுவலகம் செல்லும் பாதையில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் நின்றிந்தார். அவர் அனைத்து ஆதாரங்களைக் காட்டினாலும் பணம் பறிப்பார் என்று நண்பர் ஒருவர் செல்வாவிடம் கூறியிருந்தார்.
செல்வா அதை நம்பவில்லை. அது எப்படி அனைத்து ஆதாரங்களும் இருந்தும் ஒருவர் பணம் பறிப்பார் ? என்று நினைத்தவர் வழக்கம் போல அந்த வழியாகச் சென்றார். இவரை வழிமறித்த போக்குவரத்து அதிகாரி
" லைசென்ஸ் வாங்கிட்டியா ? " என்றார்.
" எதுக்கு சார் ? "
" என்ன நக்கலா ? ஒழுங்கா லைசென்ஸ் , RC புக் , இன்சூரன்ஸ் எல்லாத்தையும் காட்டு ? "
செல்வாவும் அனைத்து ஆவணங்களையும் காட்டினார். அந்த அதிகாரி எப்படி இவனிடம் பணம் பிடுங்குவது என்று யோசித்தவர் , " எதுக்கு இவ்ளோ வேகமா வந்த ? , அங்க பார் SPEED LIMIT 40 KMPH னு போட்டிருக்கு. நீ 50 KMPH ல வந்திருக்கற , அதனால ஃபைன் போடட்டுமா , இல்ல 100 ரூபாய் குடுத்திட்டு வண்டிய எடுத்துக்கிறியா ? " என்றார்.
செல்வாவிற்கு என்ன சொல்லுவதென்று தெரியாமல் நூறு ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு தனது வண்டியை எடுத்துச்சென்றார்.
அடுத்தநாளும் அதே இடத்தில் அதே அதிகாரி கையை காட்டி செல்வாவை நிறுத்துமாறு கூறினார். செல்வா இந்த முறை தனது வேக முள்ளின் அளவைப் பார்த்தார். அது 40 KMPH என்ற அளவைக்காட்டியது. இதைப் பார்த்த செல்வா அதே வேகத்தில் அந்த அதிகாரியை நெருங்கிச்சென்று நீட்டிக்கொண்டிருந்த அவரது கையில் மோதி அவரைக் கீழே தள்ளிவிட்டு இவரும் விழுந்தார்.
கோபமாக எழுந்த அந்த அதிகாரி செல்வாவிடம் வந்து " நான் கைய நீட்டுறது கூட தெரியாம என்னத்த வண்டி ஓட்டுற ? " என்றார்.
செல்வா சற்று மரியாதையாக " சார் , நான் அந்த SPEED LIMIT பார்த்துதான் ஓட்டினேன். 40 KMPH னு இருக்கு. அப்படின்னா அத விட கம்மியா ஓட்டினா அதுக்கும் பணம் கேப்பீங்களோனு நினைச்சுத்தான் அதே வேகத்துல வந்தேன் " என்றார்.
13 comments:
அப்புறம் அந்த டிராபிக் போலீஸ் ரமேஷா?
நானும் வந்துட்டேன்..
ippo entha jeyilla irukka?
எஸ்.கே said...
அப்புறம் அந்த டிராபிக் போலீஸ் ரமேஷா?
//
nono
முடியல...
ஹா ஹா செம கலக்கல் செல்வா
இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்.
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...
அப்புறம் அந்த டிராபிக் போலீஸ் ரமேஷா?
//
nono
//
அதானே! நீங்க தான் நேர்மையானவராச்சே!
அட. ஸ்பீட் 40 kmph க்கு அதான் அர்த்தமா ?
அப்படீன்னா எவராகினும் நடந்து அந்தப் பக்கமா போக முடியாதே, ஓடணுமே ? அதுவும் அவ்ளோ ஸ்பீடுல போனா கால் வலிக்காதா ?
அடங்கொய்யால....
ஹா ஹா கலக்கல் (mudiala) :(
ஹஹஹஹஹாஹாஹா..:)
Post a Comment