Thursday, March 17, 2011

என்ன வரம் கேட்பது ?

ஒருமுறை செல்வாவின் கனவில் கடவுள் தோன்றினார். செல்வா அவரிடம் " நீங்கள் யார் ? " என்று கேட்டார்.

" நான்தான் கடவுள் , உனக்கு என்ன வரம் வேண்டும் ? " என்று கேட்டார்.

" நீங்க எனக்கு எதுக்கு வரம் தரீங்க ? இப்ப வரம் வாங்கிட்டா  அதத் திருப்பி தரணுமா ? " என்றார்.

கடவுளுக்கு சிரிப்பு தாங்கவில்லை. இருந்த போதிலும் " திருப்பி எல்லாம் தரவேண்டியது இல்லை , உனக்கு வேண்டியதைக் கேள் " என்றார்.

" ஒ , அப்படின்னா ஒரு பத்துக்கோடி பணம் குடுங்க " என்றார் செல்வா.

" அந்தப் பணத்தை வச்சு என்ன பண்ணுவ ? பத்து லட்சம் போட்டு கார் வாங்குவியா , பெரிய அரண்மனை காட்டுவியா ? " 

தான் செலவு செய்துவிடுவேன் என்று சொன்னால் எங்கே தனக்கு வரம் கொடுக்காமல் போய்விடுவாரோ என்று நினைத்த செல்வா " இல்ல அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் , பேங்க்ல போட்டிருவேன் " என்றார்.

" பேங்க் ல போடுறதுக்கு உனக்கு எதுக்கு நான் பணம் தரனும் , தரமாட்டேன் " என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். அடடா இப்படி ஆகிப்போச்சே என்று நினைத்த செல்வா வருத்தமாக அன்றைய பொழுதைக் கழித்தார்.

அடுத்தநாள் இரவும் கடவுள் அவரது கனவில் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பொழுது சுதாகரித்துக்கொண்ட செல்வா " எனக்குப் பத்துக் கோடி குடுங்க , அத வச்சு பத்து லட்சத்துல கார் வாங்குவேன் , பெரிய அரண்மனை கட்டுவேன் " என்று சொன்னார்.

" அந்தக் கார்ல நீ போகும் போது யாராச்சும் லிப்ட் கேட்டா கொடுப்பியா ? , அந்த அரண்மனைய வாடகைக்கு விடுவியா ? " என்றார் கடவுள்.

தனக்குக் கொடுத்ததை அடுத்தவருக்கு விடுவேன் என்று சொன்னால் கடவுள் கோபப்படுவாரோ என்று நினைத்த செல்வா " லிப்ட் கொடுக்க மாட்டேன் , வாடகைக்கும் விட மாட்டேன் " என்றார்.

" நீயும் பயன்படுத்த மாட்ட , அடுத்தவனையும் பயன்படுத்த விட மாட்ட! அப்புறம் உனக்கு எதுக்கு வரம் கொடுக்கணும் , தர மாட்டேன் போ "  என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் . இன்று இரவு கடவுள் வந்தால் என்ன வரம் கேட்பது என்று.

38 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிச்சிட்டு வந்து வெட்டறன்..

Anonymous said...

VADAIIII..................

செல்வா said...

வாங்க வாங்க . நான் அப்படி ஓரமா போய் நிக்கிறேன் .. ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டு அருவா கேட்டு வாங்கிக் கொடுக்க முடியுமா..
மகனே எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற..

சௌந்தர் said...

உன் மொக்கையை போடு வரம் தருவார்

எஸ்.கே said...

பேசாம செல்வா கடவுளாகனும்னு வரம் கேளுங்க!:-)

செல்வா said...

//இரண்டு அருவா கேட்டு வாங்கிக் கொடுக்க முடியுமா..
மகனே எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற..//

உங்களுக்கு முதல்ல அருவாள் பிடிக்கத் தெரியுமான்னு சொல்லுங்க ... ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன இந்த மாசம் ஏகப்பட்ட பதிவு போட்டு தாக்குற..

ஏதாவது கடவுள் வரம் கொடுத்ததா..

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
வாங்க வாங்க . நான் அப்படி ஓரமா போய் நிக்கிறேன் .. ஹி ஹி////

அப்படியே தூங்கிடாதே மச்சி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////கோமாளி செல்வா said...

//இரண்டு அருவா கேட்டு வாங்கிக் கொடுக்க முடியுமா..
மகனே எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிற..//

உங்களுக்கு முதல்ல அருவாள் பிடிக்கத் தெரியுமான்னு சொல்லுங்க ... ஹி ஹி
//////


நாங்க அறிவாலும் வெட்டுவோம்
அரிவாளாலும் வெட்டுவோம்..

எபபூடி..

செல்வா said...

//நாங்க அறிவாலும் வெட்டுவோம்
அரிவாளாலும் வெட்டுவோம்..//

ஓ , நான் தட்டத்துல போட்டு கையாள மட்டும் வெட்டுவேன் .. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

//எஸ்.கே said..."பேசாம செல்வா கடவுளாகனும்னு வரம் கேளுங்க!:-) " //

ஆமாம் செல்வா.. அப்படியே வரம் கேளு..
அதுக்கப்புறம் என்னோட கனவுல வா (எனக்கு வரம் தர்றதுக்கு )

Unknown said...

arumai anna...

எஸ்.கே said...

க்டவுள் வரத்தை கையில வச்சுகிட்டு செல்வாக்கு பயன்படாம வச்சுகிட்டு இருக்காரே! நியாயமா?

VELU.G said...

கடவுளே இந்த செல்வா யோசிக்கறத குறைச்சிடுன்னு வரம் வாங்கனும்

MANO நாஞ்சில் மனோ said...

உள்ளேன் ஐயா....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

.................
........................:-)
.................
.................
........................:-)
.................
.................
........................:-)
.................
.................
........................:-)
.................
.................
........................:-)
.................

MANO நாஞ்சில் மனோ said...

குழப்பமும் சந்தேகமும் உன்னை சுத்தி கும்மி அடிச்சிட்டே நிக்குதே மொக்கையா.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இரவு கடவுள் வந்தால் என்ன வரம் கேட்பது//

சாகாவரம் கேளு மச்சி..!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கேரளாவுக்கு போகும்லாரியில் இடம் உள்ளது..
’செ’ வில் தொடங்கி, ‘வா’ வில் முடியும் பெயருடையவர்களுக்கு, இலவச பயணம்...

MANO நாஞ்சில் மனோ said...

//கடவுளுக்கு சிரிப்பு தாங்கவில்லை.//

ஹே ஹே ஹே ஹே மனோ எஸ்கேப்பு.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
MANO நாஞ்சில் மனோ said...

உள்ளேன் ஐயா....
////

அட்னஸ் போட்டாச்சி

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் .//

நீ உருப்பட போவதில்லை......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
பட்டாபட்டி.... said...

கேரளாவுக்கு போகும்லாரியில் இடம் உள்ளது..
’செ’ வில் தொடங்கி, ‘வா’ வில் முடியும் பெயருடையவர்களுக்கு, இலவச பயணம்...
//////

நடுவில என்ன எழுத்து என்ன வரும்..

வைகை said...

பட்டாபட்டி.... said...
கேரளாவுக்கு போகும்லாரியில் இடம் உள்ளது..
’செ’ வில் தொடங்கி, ‘வா’ வில் முடியும் பெயருடையவர்களுக்கு, இலவச பயணம்.//

நடுவில " ல் " வர்றவங்களுக்கு?

வைகை said...

அப்ப செல்வா புத்திசாலி இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.... said...
கேரளாவுக்கு போகும்லாரியில் இடம் உள்ளது..
’செ’ வில் தொடங்கி, ‘வா’ வில் முடியும் பெயருடையவர்களுக்கு, இலவச பயணம்...///////

ல்ல விட்டுட்டீங்களே.....ங்ணா நீங்க விட்டீங்களா..... சார் நீங்க விட்டீங்களா?

Anonymous said...

இன்று இரவு கடவுள் வந்தால் என்ன வரம் கேட்பது என்று//
அவர் ஜட்டியை மட்டும் கேட்டுவிட வேண்டாம் ஹிஹி

Anonymous said...

அப்ப செல்வா புத்திசாலி இல்லையா//
அண்ணே இன்னொன்னும் மாட்டிகிச்சு

Anonymous said...

செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் //
பட்டாபட்டி பதிவுகளை ஒரே மூச்சில் படிக்கவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
அப்ப செல்வா புத்திசாலி இல்லையா?/////////

அப்போ புத்திசாலி செல்வா இல்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்ப செல்வா புத்திசாலி இல்லையா//
அண்ணே இன்னொன்னும் மாட்டிகிச்சு/////////

என்னது உங்க ஜட்டியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் . இன்று இரவு கடவுள் வந்தால் என்ன வரம் கேட்பது என்று.////

வேற கடவுள் வேணும்னு கேளு செல்வா......

செல்வா said...

//வேற கடவுள் வேணும்னு கேளு செல்வா......//

இது நல்லா இருக்கும் போலேயே .. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>" நீங்க எனக்கு எதுக்கு வரம் தரீங்க ? இப்ப வரம் வாங்கிட்டா அதத் திருப்பி தரணுமா ? " என்றார்.

ஹா ஹா கலக்கல் ஓப்பனிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

?>>>" நீயும் பயன்படுத்த மாட்ட , அடுத்தவனையும் பயன்படுத்த விட மாட்ட!

செல்வா நல்லவர் தான்.. ஏதோ எதேச்சையா அமைஞ்சிடுச்சு.. உடனே டபுள் மீனிங்க்ல எழுதறார்னு யாரும் அவரை கும்மக்கூடாது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>செல்வா இன்னமும் குழப்பத்தில் உள்ளார் .

வ்ழக்கமா உங்க பதிவை படிக்கறவங்க தானே குழம்புவாங்க..?

சக்தி கல்வி மையம் said...

கதை படிக்க நல்லாயிருக்கு...
ஊருல இருக்கீங்களா?

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html