Tuesday, March 15, 2011

திருப்பூர் எங்க இருக்கு ?

வழக்கம் போல செல்வா அலுவலகம் செல்வதற்காக பேருந்தில் ஏறினார். பேருந்தில் அதிக கூட்டமாக இருந்ததால் செல்வாவும் படியில் நின்று பயணம் செய்ய வேண்டியதாயிற்று.

அங்கு வந்த நடத்துனர் " எல்லோரும் டிக்கட் வாங்கிட்டீங்களா ? " என்றார்.

" கொஞ்சம் கால கீழ வச்சா கண்டிப்பா வாங்கிடுவோம் " என்றார் செல்வா.

" என்ன நக்கலா ? " சீட் வாங்கியாச்சா இல்லையா ? " என்று மறுமுறையும் கேட்டார்.கேட்டு விட்டு பின்னாடி திருப்பூர் இருக்குதாப்பா ? " என்று சத்தமாக பேருந்தின் பின்பக்கம் கேட்டார்.

" அதற்கு செல்வா முன்னாடி இருக்குதுங்க " என்றார்.

" முன்னாடி எல்லோரையும் கேட்டுட்டேனே.," என்று தனக்குள்ளே சொல்லிவிட்டு முன்பக்கத்தில் மீண்டும் ஒரு முறை சத்தமாக " முன்னாடி யாருப்பா டிக்கட் வாங்கணும் ? " என்றார்.

பதில் இல்லை. மீண்டும் ஒரு முறை கத்தினார். அப்பொழுதும் யாரும் எதுவும் சொல்லாததால், செல்வாவிடம் " முன்னாடி யார் வாங்கணும் ? " என்றார்.

" தெரியல சார் "

" முன்னாடி திருப்பூர் இருக்குதுன்னு சொன்ன ? "

" ஆமா சார் , நாம இப்ப கோபில இருந்து திருப்பூர் போயிட்டு இருக்கோம் , அப்படின்னா திருப்பூர் நமக்கு முன்னாடி தானே இருக்கு , அதான் சொன்னேன்! " என்றார்.

" நான் டிக்கெட் வாங்கலைன்னு எண்ணிட்டு இருக்கேன் , நீ நக்கல் பண்ணிட்டு இருக்கியா ? " என்றார் கோபமாக.

உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க என்று மனதுக்குள் நினைத்துகொண்டு " சாரிங்க " என்றார்.

19 comments:

Madhavan Srinivasagopalan said...

// அங்கு வந்த நடத்துனர் " எல்லோரும் சீட் வாங்கிட்டீங்களா ? " என்றார்.

" கொஞ்சம் கால கீழ வச்சா கண்டிப்பா வாங்கிடுவோம் " என்றார் செல்வா. //

'சீட்' என்பதற்கு பதில் 'டிக்கெட்' என்று இருந்திருந்தால்.. மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்..
'டிக்கெட் வாங்கியாச்சா ?'

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேளை திருப்பூரு பாக்கெட்டுக்குள்ள இருக்குன்னு சொல்லாம விட்டானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா செல்வா டிக்கட்டுன்னு இருந்தாத்தான் அது சரியா இருக்கும்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செல்வா உனக்கும் இண்ட்லிக்கும் ஏதாவது வாய்க்கா தகறாரா?

செல்வா said...

@ மாதவன் & ராம்ஸ் :
டிக்கட் னு மாத்திட்டேன்

Madhavan Srinivasagopalan said...

//" ஆமா சார் , நாம இப்ப கோபில இருந்து திருப்பூர் போயிட்டு இருக்கோம் , அப்படின்னா திருப்பூர் நமக்கு முன்னாடி தானே இருக்கு , அதான் சொன்னேன்! " என்றார்.//

இத.. இத.. இத.. படிக்கச்சவே நா எதிர்பாத்தேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

Sathish said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பன்னிக்குட்டி ராம்சாமி said..

செல்வா said...

@ பட்டாபட்டி :
அவர் என்னனா உங்ககிட்ட சொன்னார் ? ஹி ஹி

Sathish said...

ஏன் இந்த கொலைவெறி?

வைகை said...

செல்வா உண்மைலே புத்திசாலியோ?

வைகை said...

உண்மையை சொன்னாலும் திட்டுறாங்க என்று மனதுக்குள் நினைத்துகொண்டு " சாரிங்க " என்றார்.//

இதுதான் நீதியா?

sathishsangkavi.blogspot.com said...

ஏம்பா பஸ்ல யாராவமு டிக்கெட் எடுப்பாங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>" கொஞ்சம் கால கீழ வச்சா கண்டிப்பா வாங்கிடுவோம் " என்றார் செல்வா.



ஹா ஹா செம கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஆமா சார் , நாம இப்ப கோபில இருந்து திருப்பூர் போயிட்டு இருக்கோம் , அப்படின்னா திருப்பூர் நமக்கு முன்னாடி தானே இருக்கு , அதான் சொன்னேன்! " என்றார்.

கோபிக்காரர்னா செம லொள்ளுதான் போல..பொண்ணு குடுக்கறவங்க ஜாக்கிரதை

எஸ்.கே said...

உண்மையை சொன்னதற்கு திட்டு கிடைத்தாலும் மன்னிப்பு கேட்கும் மாண்புடையவர் செல்வா!:-)

Unknown said...

எஸ்.கே said...
உண்மையை சொன்னதற்கு திட்டு கிடைத்தாலும் மன்னிப்பு கேட்கும் மாண்புடையவர் செல்வா!:-)

மன்னிப்பு கேட்கலீன்னா யாரு கண்டக்டருகிட்ட திட்டு வாங்குறது :-)

Anonymous said...

தொடர்ந்து வாசித்து வருகின்றேன். சூப்பரா எழுதிறீங்கள்.
வாழ்த்துக்கள்

அமிர்தா
யாழ்ப்பாணம்

செல்வா said...

//தொடர்ந்து வாசித்து வருகின்றேன். சூப்பரா எழுதிறீங்கள்.
வாழ்த்துக்கள்

அமிர்தா
யாழ்ப்பாணம்
//

ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து படிப்பதற்கு.
உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க .!