Wednesday, March 9, 2011

விபத்துப் பகுதி

செல்வாவின் ஊரருகில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருந்தது.செல்வாவின் ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

ஒருநாள் ஊர்க்கார்கள் அனைவரும் அடிக்கடி விபத்து நடக்கும் அந்த இடத்தில் கூடினர். அனைவரும் ஆலோசனை செய்து ஒரு முடிவினை எடுக்கலாம் என்று ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

ஒருவர் இந்த வளைவுப்பகுதியை நேராக மாற்றினால் பெரும்பாலும் விபத்துகள் குறையும் என்றார். ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் யாரும் அவரது கருத்தினை ஏற்கவில்லை.

அங்கே நின்றுகொண்டிருந்த செல்வாவிற்கு ஒரு எண்ணம் தோன்றியது. உடனடியாக அங்கு நின்றிந்தவர்களிடம் அங்கே நடப்பட்டிருந்த அறிவிப்புப்பலகையைக் காட்டி " அத மாத்தி எழுதிட்டா விபத்து குறைஞ்சிடும் " என்றார்.

" அதுல என்ன மாத்தி எழுதுறது ? "

" விபத்துப் பகுதி , மெதுவாக செல்லவும் " அப்படின்னு இருக்கறதாலதான் எல்லோரும் வந்து இங்க விபத்து பண்ணிடறாங்க , நாம அத " இது விபத்துப் பகுதி அல்ல " அப்படின்னு எழுதிட்டா விபத்துப் பண்ணுறவங்களுக்கு இது விபத்துப் பகுதின்னு தெரியாதுல , அப்புறம் விபத்துப் பண்ண மாட்டாங்க!! , எப்படி ஐடியா ? " என்றார் பெருமை பொங்க.!

17 comments:

Madhavan Srinivasagopalan said...

Vadai

Madhavan Srinivasagopalan said...

// என்றார் பெருமை பொங்க.! //

எல்லாம் ஒகே.. இதைத் தவிர.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அந்த போர்டை மாத்திட்டாங்களா?

Madhavan Srinivasagopalan said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி --
இல்லை செல்வாவ வேற ஊருக்கு மாத்திட்டாங்க..

எஸ்.கே said...

விபத்துக்களை தவிர்த்த வித்தகர் செல்வா வாழ்க!
இந்த வருட துணிகரச் செயல் விருது செல்வாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி கையால் வழங்கப்படும்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
" விபத்துப் பகுதி , மெதுவாக செல்லவும் " அப்படின்னு இருக்கறதாலதான் எல்லோரும் வந்து இங்க விபத்து பண்ணிடறாங்க , நாம அத " இது விபத்துப் பகுதி அல்ல " அப்படின்னு எழுதிட்டா விபத்துப் பண்ணுறவங்களுக்கு இது விபத்துப் பகுதின்னு தெரியாதுல , அப்புறம் விபத்துப் பண்ண மாட்டாங்க!! , எப்படி ஐடியா ? " என்றார் பெருமை பொங்க.!///////

இது மாதிரி ஐடியா எங்களுக்கு நிறைய தேவைப்படுது வருவியா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
எஸ்.கே said...

விபத்துக்களை தவிர்த்த வித்தகர் செல்வா வாழ்க!
இந்த வருட துணிகரச் செயல் விருது செல்வாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி கையால் வழங்கப்படும்!
/////

இதை நான் முன் மொழிகிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அந்த போர்டை மாத்திட்டாங்களா?
///////

இந்த பிளாக்குக்கும் இது மாதிரி ஒரு போர்டு மாட்டனும்..
அத நீங்களே மாட்டிடுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
Madhavan Srinivasagopalan said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி --
இல்லை செல்வாவ வேற ஊருக்கு மாத்திட்டாங்க..
////

மாத்தல..

அந்த கூட்டமே அவரை விட்டி விட்டிருப்பாங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க வீட்டு பக்கத்தில் ஒரு கடிக்கிற நாய் ஒண்ணு இருக்கும் கடிக்கும்ன்னு போர்டும் போட்டிருக்காங்க..
அது கடிக்காம இருக்க என்ன செய்யலாம் செல்வா..

MANO நாஞ்சில் மனோ said...

அவனை விடாதீங்கைய்யா பிடிங்க பிடிங்க அவன் வாயிலேயே போட்டு மொக்குங்க...
கொய்யால ஐடியா'வா குடுக்குற ஐடியா....

MANO நாஞ்சில் மனோ said...

//அங்கே நின்றுகொண்டிருந்த செல்வாவிற்கு ஒரு எண்ணம் தோன்றியது.//

உனக்கு மொக்கைய தவிர ஒன்னுமே தோன்றாதே மக்கா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

u mean accident zone?

வைகை said...

மன்னிக்கவும்.. விபத்து பகுதின்னு தெரியாம வந்திட்டேன்!

அருண் பிரசாத் said...

என்னா அறிவு! நீ பொறக்கும்போதே இப்படியா இல்லை நடுவுல நடந்த விபத்தால இப்படி ஆகிட்டீய்யா

சி.பி.செந்தில்குமார் said...

ம் ம் போட்டுத்தாக்குங்க

ப்ரியமுடன் வசந்த் said...

ஓஹ் ஸ்டோரிக்கு தனியா ப்ளாக்கா?

குட் பையா..!