Tuesday, March 8, 2011

சோதித்து அறிந்த செல்வா!

 ஒரு முறை செல்வா மிகவும் கோபமாக இருந்தார்.

அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. கோபமாக இருந்த செல்வா  அவரது நண்பரை தொலைபேசி அழைப்பை எடுக்கும் முன்பாக சிறிது திட்டினார்.

பின்னர் அவரது அழைப்பை எடுத்து பேசிவிட்டு வழக்கம்போல தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார். சிறிது நேரத்திலெல்லாம் அவரது கோபம் அடங்கிவிட்டது.

பின்பு ஒரு நீண்ட யோசனைக்குப் பிறகு அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தனது நண்பர் தனக்கு அழைத்த போது அவரைத் திட்டினோமே , அப்பொழுது அவர் அழைப்பினை எடுத்துவிட்டோமா ? அல்லது எடுப்பதற்கு முன்னர் திட்டிவிட்டு எடுத்தோமா ? என்ற குழப்பம் அவரை வெகுவாக குழப்பியது.

செல்வாவிற்குச் சரியாக தெரியவில்லை. ஒரு வேலை நாம் திட்டியதை அவர் கேட்டிருந்தால் தன்னைப்பற்றி தவறாக நினைத்து விடுவாரே என்று மிகவும் குழப்பமும் , வேதனையும் அடைந்தார். இதற்கு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.

உடனடியாக தனது தொலைபேசியை எடுத்தவர் அந்த நண்பருக்கு அழைத்தார். அவரிடம் " நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணின போது நான் உங்களை நாய் , பன்னாட அப்படின்னு திட்டினேனே அத கேட்டீங்களா? " என்றார். அந்த நண்பர் " இல்ல கேக்கல !! " என்று சொன்னதும் தான் செல்வா நிம்மதி அடைந்தார்.

16 comments:

மாணவன் said...

வடை

எஸ்.கே said...

மற்றவர் மனம் புண்படக் கூடாதுன்னு நினைக்கும் செல்வா வாழ்க!

மாணவன் said...

//மற்றவர் மனம் புண்படக் கூடாதுன்னு நினைக்கும் செல்வா வாழ்க!//

இதான் நீதீயா?? :))

Anonymous said...

பதிவு அருமை ! நன்றிகள்

Madhavan Srinivasagopalan said...

"எஸ்.கே said...

மற்றவர் மனம் புண்படக் கூடாதுன்னு நினைக்கும் செல்வா வாழ்க! "

தன்னால் திட்டப் பட்டாலும் , மற்றவர் மனம் புண்படக் கூடாதுன்னு நினைக்கும் செல்வா வாழ்க!

வைகை said...

ஆமா..செல்வா ஏன் அவர திட்னாறு?

எஸ்.கே said...

//ஆமா..செல்வா ஏன் அவர திட்னாறு? //
பின்ன செல்வாவுக்கு முன்ன போய் எல்லா பிளாக்லயும் வடை வாங்கினா, கோபம் வராதா?

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நடத்து ராஜா நடத்து...../

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னாடை பரதேசி. அறிவு கெட்டவனே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா என்னோட முந்தைய கமெண்ட்ல உன்னை திட்டினத நீ படிக்கலைல. ப்ளீஸ் அத படிக்காத...

VELU.G said...

ரொம்ப நல்ல எண்ணம்

சி.பி.செந்தில்குமார் said...

>>> ஒரு முறை செல்வா மிகவும் கோபமாக இருந்தார்.

எனக்கு எப்பவும் கோபமே வராதுன்னு சொன்னது பொய்யா?

Unknown said...

//எஸ்.கே said...
மற்றவர் மனம் புண்படக் கூடாதுன்னு நினைக்கும் செல்வா வாழ்க!//

ரிப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>>" நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணின போது நான் உங்களை நாய் , பன்னாட அப்படின்னு திட்டினேனே அத கேட்டீங்களா? " என்றார். அந்த நண்பர் " இல்ல கேக்கல !! " என்று சொன்னதும் தான் செல்வா நிம்மதி அடைந்தார்.

ஹா ஹா செம கலக்கல் பின்னீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

தனக்குத்தானே மரியாதை கொடுத்துக்கொள்ளும் செல்வாவுக்கு இனி மரியாதை நாமன் செல்வா என பட்டம் அளிக்கப்படுகிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த நண்பர் ரமேசுதானே.....?