இது செல்வா பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம்.
ஒருமுறை செல்வா பள்ளி முடிந்து தனது மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார், அப்பொழுது அவரது நண்பர்கள் அவருக்கு முன்னாள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
செல்வா அவர்களை விலக்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றிருப்பார். அதற்குள் நடந்து வந்துகொண்டிருந்த அவரது நண்பர்களில் ஒருவர் சத்தமாக ஏதோ அவசர செய்தி சொல்லுவது போல அழைத்தார்.
செல்வாவும் எதோ முக்கியமான செய்தியாக இருக்கும் போல என்று சட்டென நின்றார். பின்னர் அவர் அருகில் வந்ததும் " நாளைக்கு என்ன கிழமைடா ? " என்றார் நக்கலாக.
செல்வாவிற்கு புரிந்து விட்டது , இவன் கிண்டல் செய்வதற்காகவே தன்னை நிறுத்தி இருக்கிறான் என்று.
உடனே செல்வா சட்டென நெற்றியில் அடித்துக்கொண்டு " அட ச்சே , டீச்சர் சொன்னாங்க , நான் டைரி ல எழுதி வச்சேன் , அத கிளாஸ்லையே வச்சிட்டேன். ஒரு நிமிஷம் உன் பேக் குடு .." என்று அவரது புத்தகப் பையை வாங்கியவர் அதில் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் கீழே எடுத்து வைத்து விட்டு , அவரது டைரியை எடுத்து எதோ தேடுவது போல பாவனை செய்துவிட்டு " டேய் நாளைக்கு புதன்கிழமை டா , சரி நான் கிளம்புறேன் , புக்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்க " என்றவாறு ஒரு நக்கலான பார்வையுடன் கிளம்பினார்.
அருகில் இருந்த அவரது மற்றொரு நண்பர் அந்த நண்பரிடம் " இது தேவையா உனக்கு ? " என்று கேட்டது செல்வாவின் காதில் விழுந்தது.
(இது உண்மையில் நடந்த சம்பவம் )
17 comments:
vadai
இது உண்மையில் நடந்த சம்பவம்////
பின்ன இருக்காதா....
பழிக்கு பழி :))
ஆமா கிழமைன்னா என்னா?
பாவம் அந்த நண்பருக்கு செல்வா ஒரு சிறந்த அறிவாளி என்று தெரியவில்லை போலும் :)
இச்சம்பவத்தில் அந்த இரு நண்பர்களின் மீது எந்த தவறுமில்லை. பாவம் அவர்கள் மறுநாள் என்ன வேலையோ? அதனால் கிழமையை உறுதி செய்வதற்காக செல்வாவை கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் செல்வாவோ, அவர்கள் பதட்டை புரிந்து கொள்ளாமல் உடனே பதிலை சொல்லாததுடன், அவர்களின் புத்தகங்களையில் பையிலிருந்து எடுத்து கீழே போட்டு இன்னும் அதிகமான மன உளைச்சலை தந்துள்ளார்.
எனவே இச்சம்பவத்தில் செல்வாவின் மீது தவறு இருப்பது ஆதார பூர்வமாக தெரிவதால் அவருக்கு இபிகோ....படி ஏதாவது தண்டனை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!
இது செல்வா பள்ளியில் படிக்கும் போது நடந்த சம்பவம்./////
செல்வா பள்ளியா? அது எங்கேப்பா இருக்கு. நீங்க பள்ளிக்கூடம் வைத்து நடத்துமளவிற்கு பெரிய ஆளு போல....
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி
இபிகோ....படி ஏதாவது தண்டனை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்///
@ எஸ் கே செல்வா கதைகள் படிக்காதீங்கண்ணு சொன்னா கேக்குறீங்களா?.........:))
யாரந்த நண்பன்?
செல்வாவோட டைரில அவரு, டீச்சர் சொல்லி எழுதினதை....
எப்படி அவரோட நண்பர் (!) டைரில இருக்கும்னு தேடினாரு ? (டவுட்)
ஆமா நாளைக்கு என்ன கிழமை...........?
செல்வா... வர்ர சனிக்கிழம என்ன கிழம?
///////Madhavan Srinivasagopalan said...
செல்வாவோட டைரில அவரு, டீச்சர் சொல்லி எழுதினதை....
எப்படி அவரோட நண்பர் (!) டைரில இருக்கும்னு தேடினாரு ? (டவுட்) ////////
செல்வாவுக்கு நண்பரோட டீச்சரைத்தான் புடிக்குமாம்.....!
வெள்ளிக்கிழமைக்கு மறுநாள் சனிக்கிழமை. ஆனா சனிக்கிழமைக்கு மறுநாள் வெள்ளிகிழமை இல்லை. என்ன கொடும சரவணா?
ஞாயித்துகிழமை நான் மட்டும்தான் பதில் சொன்னேன்
படிக்கிற டைம்ல கூட எப்படிப்பா இப்படி யோசிக்கிற..
மகனே...
இன்னிக்கி சனிக்கிழமையாயிடிச்சி இல்லன்னா..
வெளங்குமா....
Post a Comment