இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.
ஒரு முறை செல்வாவின் தந்தை அவரிடம் அருகில் உள்ள கடைக்குச் சென்று எலிமருந்து வாங்கிவரும்படிக் கூறினார்.
செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் செல்வா கடையில் இருந்து திரும்பி வராததால் அவரது தந்தையும் கடைக்குச் சென்று பார்த்துவரலாம் என்று கிளம்பினர். கடையில் ஒரே கூச்சலாக இருப்பதைக் கண்டார்.
செல்வாவின் தந்தை கடைக்குள் நுழைந்ததும் கடைக்காரர் அவரிடம் சற்று கோபமான குரலில் "உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" என்றார்.
" ஏன் , என்ன பண்ணினான் ? "
" உங்க பையன் கிட்டவே கேளுங்க !! "
" என்னடா பண்ணின ? "
" அப்பா நீங்கதானே எது வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கனும்னு சொல்லிருக்கீங்க ? அதான் எலி மருந்து வாங்குறதுக்கு முன்னாடி ஒரு எலியப் பிடிச்சு அதுக்கு இந்த மருந்த வச்சு அது சாகுதான்னு பார்த்துட்டுதான் வாங்குவேன் அப்படின்னு கேட்டேன் , இது தப்பா ? "
செல்வாவின் அப்பாவிற்கு இப்பொழுது விசயம் புரிந்தது. முன்பு ஒருமுறை செல்வாவிடம் பேனா ஒன்று வாங்கி வரச்சொல்லி அது எழுதாமல் போகவே , எத வாங்கினாலும் டெஸ்ட் பண்ணி வாங்கணும் என்று சொன்னது நியாபகம் வந்தது.
" எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.
21 comments:
நல்லவேளை பொண்ணு பார்க்க போகலை!:-)
கிளாசிக் கமெண்டு எஸ்.கே..
@எஸ்கே, ROFL!!!!!
ஒரு சிறுவன் : எங்கப்பா தீப்பெட்டி வாங்கினா, அதுல 50 குச்சியும் இருக்குதான்னு எண்ணிப் பாத்துதான் (செக்கிங்)வாங்கனும்னு சொன்னாரு.
மற்ற சிறுவன் : எங்கப்பா தீப்பெட்டி வாங்கினா, அதுல 50 குச்சியும் சரியா எரியுதான்னு பாத்துதான் (செக்கிங்) வாங்கனும்னு சொன்னாரு.
இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்//
இப்பவும் நீ சின்னப்பையன் தானே தம்பி?
நல்ல ஜோக்
எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா ,//
நல்லா சொல்லுங்கப்பா இவனுக்கு..நல்ல வேளை..இவனை பெட்ரோல் வாங்கி வர சொல்லலை..பங்க் தீப்பிடிச்சிருக்கும்
"உங்க பையன தயவு செஞ்சு கூட்டிட்டுப் போய்டுங்க!" //
கடைக்காரர் புள்ளையை கைய பிடிச்சி இழுத்தியாடா?
நல்லவேளை பொண்ணு பார்க்க போகலை!:-)
he he he...
// எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.//
ithukku selva enna sonnaar... :)
//மாணவன் said...
// எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி வாங்க முடியாதுப்பா , வா போலாம் " என்று செல்வாவை அழைத்துக்கொண்டு சென்றார்.//
ithukku selva enna sonnaar... :)//
அது செல்வா சொன்னார்:
ஆமாம்பா எனக்கு அது தெரியும். பிளட், யூரின் டெஸ்ட் இதெல்லாம் பண்ணிட்டு திரும்ப வாங்கவா முடியும்!
எஸ்.கே said...
நல்லவேளை பொண்ணு பார்க்க போகலை!////
sk sema :))
ஹி ஹி ஹி மச்சி நீ டெஸ்ட் பண்ணு
என் அன்பு தம்பிக்கு, உன் கதைகளுக்கானத் தனிக் களம் அமைத்தமைக்கு பாராட்டுகள்.
வாழ்க்கையில் எல்லாத்தையும் சரிபார்த்து வாழ நினைப்பதில் தவறில்லை. ஆனால் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.
உதாரணத்துக்கு....... இப்படி ஒரு வாய்ப்பு உங்க அப்பாவுக்கு கிடைத்திருந்தால்.... இந்தியா ஒரு “அறிவாளி செல்வாவ” இழந்திருக்கும்.
ஹி...ஹி....ஹி
எஸ்.கே said...
நல்லவேளை பொண்ணு பார்க்க போகலை!:-)
//
haahaaa
>>>இது செல்வாவின் சிறுவயதில் நடந்த சம்பவம்.
அப்போ இப்போ பெரு வயதா?
செல்வாவும் சரி என்று கூறிவிட்டு எலிமருந்து வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார்.
மெடிக்கல்ஷாப்தானே போகனும்?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
எலி மருந்து வாங்க எலிதான போகணும். நீ ஏன் போன?
அடப்பாவி செல்வா.......... நல்ல வேளை எஸ்கே சொன்ன மாதிரி நடக்கலை...........!
நல்லவேளை மருந்து வேலைசெய்தான்னு நீ சாப்பிட்டு பார்க்காம இருந்தியே....அறிவாளிடா நீயி...:))
Post a Comment