Thursday, March 3, 2011

பைத்தியத்துடன் ஒரு நாள்


ஒரு முறை செல்வா தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் ஒருவர் செல்வாவின் வண்டியை நிறுத்தச் சொல்லி சைகை செய்தார்.

செல்வா வண்டியை நிறுத்தியதும் 

" எங்கிட்ட வாங்கின 500 ரூபாய திருப்பி கொடு!! " என்றார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. சற்று அந்த ஆளை உற்று நோக்கியதில் அவர் ஒரு பைத்தியம் என்பது விளங்கியது. மேலும் அவர் தற்பொழுது அதிக கோபமாகி செல்வாவின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

செல்வாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். உடனே ஒரு யோசனை தோன்றியது. தனது சட்டைப்பையில் கையை விட்டு வெறும் கையில் பணம் இருப்பது போல பாசாங்கு செய்து அவரிடம் நீட்டினார்.

செல்வா அப்படிக் கையை நீட்டியதும் அந்தப் பைத்தியம் செல்வாவிடம் இருந்து பணத்தை வாங்குவது போல வாங்கிகொண்டு , செல்வாவைப் பார்த்து 

" லூசா நீ , 500 தரத்துக்கு 1000 தர்ற..! இப்படி ஏமாளியா இருக்காத ?!" என்று கூறிவிட்டு தனது கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த சட்டைப்பையில் பணத்தை வைப்பது போல பாசாங்கு செய்து விட்டுப் போய்விட்டது.

செல்வாவும் அப்பாடி தப்பிச்சோம் என்ற உணர்வுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அடிக்கடி அவர் இவரிடம் கேட்பதும் இவர் அதே போல வெறும் கையை அவரிடம் கொடுப்பதுமாக இருந்தனர்.

ஒருநாள் வழக்கம் போல செல்வாவை வழிமறித்த அவர் இந்த முறை வெறும் 5 ரூபாய் கேட்டார். செல்வாவிற்கு ஒரு யோசனை , இத்தனை நாளும் அதிகமாகப் பணம் கேட்டதால் வெறும் கையைக் காட்டினோம் , இன்றைக்கு  ஐந்து ரூபாய்தானே கேட்கிறார் , அதனால உண்மையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசித்தவர் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

இதைப் பார்த்ததும் அந்தப் பைத்தியம் மேலும் கோபமாக அந்த நாணயத்தை செல்வாவின் மூஞ்சியில் வீசிவிட்டு " சுக்கு மிட்டாய கொடுத்து என்னைய ஏமாத்தப் பாக்குறியா ? " என்று கூச்சல் போட்டுக்கொண்டே செல்வாவை அடிக்க ஆரம்பித்தது.

செல்வாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவரது அடியிலிருந்து தப்பித்து ஓட முயன்றுகொண்டிருந்தார்.

( பைத்தியம் என்ற சொல்லாடலுக்கு வருந்துகிறேன் )

15 comments:

மாணவன் said...

வடை

எஸ்.கே said...

அவருக்கு ஏன் சுக்கு மிட்டாய் தந்தீர்கள்?

மாணவன் said...

//( பைத்தியம் என்ற சொல்லாடலுக்கு வருந்திகிறேன் )//

இது என்னா செல்வா ஒன்னுமே புரியல...ஹிஹிஹி

மாணவன் said...

ஆமாம் ஏன் இந்த கதையில நீதி இல்லை...

:))

எஸ்.கே said...

நீதி: செல்வா லூசு இல்லை!

செல்வா said...

நீதி கோமாளி ப்ளாக் ல மட்டும்தான் இருக்கும் .. ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீதி: செல்வா லூசு இல்லை! முழு லூசு

karthikkumar said...

( பைத்தியம் என்ற சொல்லாடலுக்கு வருந்திகிறேன் ///
மச்சி நீ நல்லவன்டா...:)) சரி அவர் நீதானே ...

சௌந்தர் said...

என்ன காசு தர சொன்னா நீ ஏன் சுக்கு மிட்டாய் தரே ....ஒழுங்கா போய் அந்த ஆளுக்கு காசு கொடு...!!!

வைகை said...

அப்பொழுது சாலையில் ஒருவர் செல்வாவின் வண்டியை நிறுத்தச் சொல்லி சைகை செய்தார்.//

வண்டிய நிறுத்த சொன்னா செல்வா ஏன் நிருத்துராறு? அப்ப செல்வாதானே பைத்தியம்? :))

Madhavan Srinivasagopalan said...

மாட்டினாண்ட செல்வா வசமா (மன நலம் குன்றிய ஒருவரிடம்).
எங்களை மொக்கை போட்டு வறுத்தெடுத்தான்..
இப்ப பலன அனுபவிக்கறான்..

Unknown said...

இது பீலீங் கதையா?

Unknown said...

//பைத்தியத்துடன் ஒரு நாள்//


இது பல நாள் கதை மாதிரி தெரியுதே?

Unknown said...

இங்கிருந்த Indli ஓட்டுப்பட்டைய யாரு தூக்கீட்டு போனாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல யாரு ஒரிஜினல்னு தெரியலியே ராஜா......?