Monday, April 4, 2011

எனக்கு MLAவைத் தெரியும்

செல்வாவும் அவரது நண்பரும் அவர்களது கிராமத்தில் இருந்து அருகில் இருந்த நகரத்திற்கு நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

பாதி தூரம் சென்றதும் " டேய் , லைசன்ஸ் இருக்கா ? " என்று நண்பரிடம் கேட்டார் செல்வா.

" லைசென்ஸ் இருக்கு , ஆனா வண்டியோட RC புக் மட்டும் வீட்டிலேயே வச்சிட்டேன் ! "

" அட பாவி , இப்ப யாராச்சும் வண்டி புக் எங்கனு கேட்டா என்ன பண்ணுறது ? "

" நம்ம ஊர் என்ன அவ்ளோ பெரிய ஊரா ? யாரும் கேக்கமாட்டாங்க வாடா ! " என்று சமாதானம் கூறிய நண்பர் நகரத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.

செல்வா பயந்தது போலவே வழியில் வாகனச் சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த செல்வா " டேய் , அதுக்குத்தான் அப்பவே சொன்னேன் , வா திரும்பிப் போயிறலாம்.! "

" இனி திரும்பிப் போனா ,தொரத்திட்டு வந்து பிடிப்பாங்க , நீ ஏதும் பேசாம இரு , நான் பார்த்திக்கிறேன் ! " என்ற நண்பர் தனது வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு காவலரிடம் சென்றார்.

காவலரிடம் வேகமாகச் சென்ற நண்பர் தனது ஓட்டுனர் உரிமத்தைக் காட்டினார். அதை வாங்கிப் பார்த்த காவலர் வேறு எதையும் விசாரிக்காமல் " சரி நீங்க போலாம் " என்றார்.

நண்பர் காவலரிடம் இருந்து விலகுவதற்குள் " மச்சி RC புக் கொண்டு வரலைங்கறத எப்படி சமாளிச்ச ? " என்று சத்தமாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.

இதைக்கேட்ட காவலர் " தம்பி உங்க வண்டியோட புக் எடுத்துட்டு வாங்க"  என்றார்.

செல்வாவை கோபமாக முறைத்த அவரது நண்பர் காவலரிடம் " சார் , புக் வீட்டுல வச்சிட்டேன் சார் , இனிமேல் எடுத்து எப்பவும் வண்டிலேயே வச்சிடறேன் சார் , இப்ப கொஞ்சம் அவசரமா போகணும்  விடுங்க சார் " என்று குழைந்தார் .

ஆனால் காவலர் விடுவதாக இல்லை. சிறிதுநேரம் பேசிய அவரது நண்பர்  பின்னர் " சார் எனக்கு MLA குமாரத்  தெரியும் , நான் வேணா பேச சொல்லட்டுமா?   " என்றார்.

இதைக் கேட்ட காவலர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருவரையும் கிளம்புமாறு சைகை செய்தார் . சிறிது தூரம் சென்றதும் செல்வா 

" மச்சி , உனக்கு உண்மைலேயே MLA வ தெரியுமா  ? "

" தெரிஞ்சா என்ன தெரியலைனா என்ன ? ஊர் போய்ச் சேர  வரைக்கும் வாயத்  தொறக்காத " என்று கத்தியவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நகரத்தில் இருந்த வேலைகளை முடித்து விட்டு  வீடு  திரும்பினர், செல்வாவை அவரது வீட்டில் இறக்கிவிட்ட பின்பு  " நாளைக்கு லீவ் போடுடா , கோயிலுக்குப் போகணும் " என்று கூறிவிட்டுச் சென்றார். 

சரி என்ற செல்வா அவரது மேலாளரிடம் விடுமுறை  கேட்கலாம் என்று அழைத்தார்.

" சார் , செல்வா பேசுறேன் சார் , நாளைக்கு எனக்கு லீவ் வேணும் சார் , கோயிலுக்குப் போறேன் " 

" நாளைக்கு லீவ் இல்லைப்பா , நீ வேணா அடுத்தநாள் எடுத்துக்க ! " என்றார்.

" இல்ல சார் , எனக்கு கண்டிப்பா நாளைக்குதான் லீவ் வேணும் !" 

" நாளைக்கு கண்டிப்பா லீவ் குடுக்க முடியாதுப்பா ! "

" சார் எனக்கு MLA வைத் தெரியும் சார் .. இப்ப லீவ் தர முடியுமா ? "

" MLA வை தெரியுறதுக்கும் லீவ் தரத்துக்கும் என்னப்பா சம்பந்தம் ? "

செல்வா சற்றுக் குழம்பிப்போனார். அவனும் இதத்தான சொன்னான் .. சரி அவனுக்குத் தெரியும்னு சொல்லுவோம்.

" சார் என் பிரண்டு சசிக்கு MLA வை தெரியும் சார் "

" என்ன ஒளர்ற , நாளைக்கு லீவ் எல்லாம் இல்ல , வேலைக்கு வந்து சேர்! " என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார் அவரது மேலாளர்.

அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் " என்னடா நாளைக்கு லீவு தான ? "

" லீவு தரலைன்னு சொல்லிட்டாங்கடா ! "

" ஏன் , நீ என்ன சொன்ன ? "

" நான் கோவிலுக்குப் போகணும்னுதான் சொன்னேன் , தரலைனாங்க , சரி MLA வை தெரியும்னு சொன்னா தருவாங்களோனு அதையும் சொன்னேன் .. அப்பாவும் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க ! "

செல்வாவை முறைத்துப்பார்த்த அவரது நண்பர் " எந்த இடத்துல எத சொல்லணுமோ அத்தான் சொல்லணும் , எல்லா இடத்திலையும் எல்லாமும் பயன்படாது , எப்பத்தான் திருந்தப் போறியோ ?! "  

20 comments:

சக்தி கல்வி மையம் said...

Ha..ha..ha..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாதான் இருக்கு..
இனி எல்லா இடத்திலும் MLA தெரியும் சொல்லிக்கிட்டு திரி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

செல்வா புகழ் ஓங்குகிறது..
ஆனால் நாளை செல்வா பற்றிய பரபரப்பு செய்தி ஒரு தளத்தில் வரவிருக்கிறது....

அந்த தகவல் தெரிய நாளை வரை காத்திருக்கவும்...

செல்வா said...

//ஆனால் நாளை செல்வா பற்றிய பரபரப்பு செய்தி ஒரு தளத்தில் வரவிருக்கிறது..../

ஐயோ அப்படி என்னத்த பண்ணப் போறீங்க .. எத பண்ணினாலும் ஒரு பேச்சு சொல்லிட்டு செய்ங்க ..

செல்வா said...

@ கருண் :

நன்றிங்க ..

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவை முறைத்துப்பார்த்த அவரது நண்பர் " எந்த இடத்துல எத சொல்லணுமோ அத்தான் சொல்லணும் , எல்லா இடத்திலையும் எல்லாமும் பயன்படாது , எப்பத்தான் திருந்தப் போறியோ ?! " //

திருந்துறதா மொக்கையனா.....? உருளையில போட்டு உலக்கையால குத்துனாலும் திருந்த மாட்டான்ய்யா அவன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் M.A MLA வுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

சௌந்தர் said...

உன் பிரெண்ட் சொல்லவே பயமா இருக்குடா எந்த நேரத்தில் என்ன செய்வியோ...

karthikkumar said...

எந்த இடத்துல எத சொல்லணுமோ அத்தான் சொல்லணும் , எல்லா இடத்திலையும் எல்லாமும் பயன்படாது , ///
சமூகத்திற்கு தேவையான கருத்தை தன்னுடைய நகைச்சுவை நடையின் மூலம் செல்வா அளித்திருக்கிறார்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால, பிரண்டுதான் எம்எல்ஏவை தெரியும்னு சொன்னாரு, நீ ஒரு எம்பிய தெரியும், மினிஸ்டரை தெரியும்னு சொல்லி இருக்கபடாது..?

karthikkumar said...

சௌந்தர் said...
உன் பிரெண்ட் சொல்லவே பயமா இருக்குடா எந்த நேரத்தில் என்ன செய்வியோ.///
உன்கிட்ட எவனாவது வம்புக்கு வந்தான்னா எனக்கு செல்வாவ தெரியும்னு சொல்லு. தக்காளி அப்புறம் வரவேமாட்டான்....:))

செல்வா said...

//திருந்துறதா மொக்கையனா.....? உருளையில போட்டு உலக்கையால குத்துனாலும் திருந்த மாட்டான்ய்யா அவன்...//

நான் திருந்த மாட்டேன் . ஏன்னா நான் தப்பு பண்ணினாத்தானே திருந்துறதுக்கு ... ஹி ஹி

செல்வா said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாகராஜசோழன் M.A MLA வுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
///

அவர் இன்னும் MLA ஆகல ... போலீஸ் இன்னும் பச்ச மண்ணாவே இருக்கார் :-)

செல்வா said...

//சௌந்தர் said...
உன் பிரெண்ட் சொல்லவே பயமா இருக்குடா எந்த நேரத்தில் என்ன செய்வியோ...//

கார்த்தி சொன்னதுதான் ... ஹி ஹி .. உங்கிட்ட வம்புக்கு வரவன்கிட்ட எண் பெற சொல்லு .. அப்படியே தெறிச்சு ஓடிருவான் .. ( கொஞ்சம் ஓவரா இருக்கோ ? ) ம்ம்ம்ம் .. சமாளிப்போம் ..

செல்வா said...

//
சமூகத்திற்கு தேவையான கருத்தை தன்னுடைய நகைச்சுவை நடையின் மூலம் செல்வா அளித்திருக்கிறார்...
//

நீதி சொன்னியா மச்சி ? ஹி ஹி .. ரைட் .. நீயும் இப்படி ஆகிட்டியே ..

செல்வா said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால, பிரண்டுதான் எம்எல்ஏவை தெரியும்னு சொன்னாரு, நீ ஒரு எம்பிய தெரியும், மினிஸ்டரை தெரியும்னு சொல்லி இருக்கபடாது..?
//

சொல்லுறதே பொய்யி , இதுல பெரிய இடம் எல்லாம் எதுக்குன்னு தான் கொஞ்சம் கமியா சொன்னேன் .. ஹி ஹி

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்கொய்யால, பிரண்டுதான் எம்எல்ஏவை தெரியும்னு சொன்னாரு, நீ ஒரு எம்பிய தெரியும், மினிஸ்டரை தெரியும்னு சொல்லி இருக்கபடாது..//

அட...பன்னிய தெரியும்னாவது சொல்லியிருக்கலாம்... என்ன போ...!

வைகை said...

செல்வா நீ புத்திசாலி இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கலக்கல் செல்வா.. வர வர நீங்க கதையையும் நல்லா டெவலப் பண்றீங்க.. ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

அதெல்லாம் சரி..
உங்க பிரெண்டுக்கு MLA வை தெரியுமா ?