Friday, April 29, 2011

செல்வா எழுதிய நீதிக்கதை!


இது செல்வாவின் பள்ளிக்காலத்தில் நடந்த சம்பவம்.

அப்பொழுது செல்வா பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்தார்.

அன்று அவரது தமிழாசிரியர் " பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்! " என்ற நீதியை விளக்கும்படி நீதிக்கதை எழுதுமாறு கூறி இருந்தார்.

வகுப்பில் உள்ள அனைவரும் தனித்தனியாக அமர்ந்து தத்தமது கதைகளை எழுதத் தொடங்கினர்.

செல்வாவும் எவ்வளவோ யோசனை செய்தும் அவரால் கதை எழுத முடியவில்லை. இருந்தபோதிலும் எழுதுவது போல பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.

சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த செல்வா பின்னர் தனக்கு முன்னாள் அமர்ந்திருந்த மாணவரிடம் அவர் எழுதிய கதையைக் காட்டுமாறு கூறினார். ஆனால் அவர் காட்ட முடியாது என்று கூறியதோடு ஆசிரியரிடமும்  போட்டுக்கொடுத்தார்.

" படிச்சு எழுதுறதுல தான் ஒழுங்கா எழுத மாட்டிங்கிற, இது கதைதானே , இதையுமா பார்த்து எழுதுவ ? " என்றார் ஆசிரியர் கோபமாக.

" சார் , நான் ஒன்னும் பாத்து எழுதுறதுக்காக அவன் கிட்ட கேக்கல , போன தடவ கணக்குப் பரிட்சைல நாங்க ரண்டுபேரும் 15*15 = 255 னு எழுதினதுக்கு கணக்கு வாத்தியார் ஏண்டா பார்த்து எழுதினணு திட்டினார் , ஆனா மத்தவங்க எல்லோருமே 15*15= 225 னு எழுதிருந்தாங்க, அவுங்கள திட்டல! அதான் இந்த தடவையும் அவன் எழுதின கதையவே நானும் எழுதிட்டா என்ன திட்டுவீங்கனுதான் , அவன் எழுதினத பார்த்துட்டு அது மாதிரி இல்லாம வேற எழுதலாம்னு கேட்டேன்! " என்றார் செல்வா.

" உனக்கு என்ன வருதோ அத எழுது ! இனிமேல் திரும்பி பார்க்குறத பார்த்தேன்னா அப்புறம் நடக்குறதே வேற ! " என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார் ஆசிரியர்.

செல்வாவிற்கு இருந்த ஒரு நம்பிக்கையும் வீணாய்ப் போனது. மற்ற மாணவர்கள் சிலர் இன்னமும் வேக வேகமாக எழுதுவதும் , சிலர் எழுதி முடித்துவிட்டு கிளம்புவதுமாக இருந்தனர். செல்வாவும் தேர்வு நேரம் முடியும் வரையிலும் முயற்சித்துப் பார்த்தார். அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இறுதியாக ஒரு வரி மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.

அன்று மதியம் ஆசிரியர் அனைவரின் கதைகளையும் படித்துக்கொண்டிருந்தார். செல்வாவின் பேப்பரைப் பார்த்தவருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. இப்படியும் ஒரு மாணவனா என்று வியந்தவர் செல்வாவை அழைத்து " நீ என்ன கதை எழுதி வச்சிருக்க ? " என்றார்.

" இல்ல சார் , நீங்க தானே அவுங்க அவுங்க வேலைய அவுங்க அவுங்கதான் செஞ்சிக்கணும்னு , அதான்! " என்றார் சற்று பயந்தவாறே.

செல்வா எழுதி இருந்த கதை இதுதான் " பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் - நீதிக்கதை என்று தலைப்பிட்டு இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் , மேலும் இது நீதிக்கதை என்பதால் இதற்கான நீதியினை ஒரு நீதிபதி வழங்குவார்! "

21 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீதி//

என்ன நீ தீ மிதிக்க போறியா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

நீதிக்கதையில் ஒரு நீதியா..
வாழக்...

பலே பிரபு said...

ஆசிரியர் தப்பிச்சுட்டாரு நாங்க மாட்டிக்கிட்டோமா

வேதாளம் said...

"கடுப்பேத்துறான் மை லார்ட்" நீதிக்கதை சொல்ல நீ என்ன வக்கீல் வண்டுமுருகனா?

இம்சைஅரசன் பாபு.. said...

நீதி//

என்ன நீ தீ மிதிக்க போறியா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் ,//
இன்றைய நாட்டு நடப்பை ..சிந்திக்க வைத்த கதை மக்கா ..நல்லா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அப்பொழுது செல்வா பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்தார்.//////

அப்போவும் பத்தாவதுதானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////செல்வா எழுதி இருந்த கதை இதுதான் " பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் - நீதிக்கதை என்று தலைப்பிட்டு இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் , மேலும் இது நீதிக்கதை என்பதால் இதற்கான நீதியினை ஒரு நீதிபதி வழங்குவார்! "////////

அப்போ நிறைய வாய்தா வாங்குவாங்களா?

மாலுமி said...

செல்வா....
நீ எப்போ நீதிபதி ஆன????? எந்த கோர்ட்????
ஏன்ன, எனக்கு செல்வா னு ஒரு மொக்கை போடுற பய இருக்கான்.
அவன கொஞ்சம் கவனிகொனும்.......
எப்போ இது பத்தி பேசலாம் ????

FOOD said...

தீர்ப்பை ஒரு சேஞ்ச்சுக்காக ஒத்தி வைக்காம இருந்திருக்கலாமே!

FOOD said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

காலேஜ் போயுமா நீங்க இப்படி ஆயிடீங்க??????

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால உன் வாத்தியும் அப்பிடிதானா...

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவும் எவ்வளவோ யோசனை செய்தும் அவரால் கதை எழுத முடியவில்லை. இருந்தபோதிலும் எழுதுவது போல பாசாங்கு செய்துகொண்டிருந்தார்.//


கிட்னில ஸாரி மண்டையில சரக்கு இருந்தாதானே...

MANO நாஞ்சில் மனோ said...

//
" படிச்சு எழுதுறதுல தான் ஒழுங்கா எழுத மாட்டிங்கிற, இது கதைதானே , இதையுமா பார்த்து எழுதுவ ? " என்றார் ஆசிரியர் கோபமாக.//

நியாயமான கோபம்தான்....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த தடவையும் அவன் எழுதின கதையவே நானும் எழுதிட்டா என்ன திட்டுவீங்கனுதான் , அவன் எழுதினத பார்த்துட்டு அது மாதிரி இல்லாம வேற எழுதலாம்னு கேட்டேன்! " //

கம்னாட்டிக்கு குறுக்கு புத்தி எப்புடி வேலை செய்யுது பாரு...

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வாவும் தேர்வு நேரம் முடியும் வரையிலும் முயற்சித்துப் பார்த்தார். அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. இறுதியாக ஒரு வரி மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.///


அந்த ஒற்றை வரியை படித்து விட்டு வாத்தியார் கண்டிப்பா மூர்ச்சையாகிருப்பார்....

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா எழுதி இருந்த கதை இதுதான் " பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் - நீதிக்கதை என்று தலைப்பிட்டு இது நீதிக்கதை என்பதால் இதற்கான தீர்ப்பினை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் , மேலும் இது நீதிக்கதை என்பதால் இதற்கான நீதியினை ஒரு நீதிபதி வழங்குவார்! "//


அடங்கொன்னியா நீ திருந்தவே மாட்டியா அவ்வ்வ்வ்வ்....

jaisankar jaganathan said...

சூப்பரான கதை செல்வா

கோமாளி செல்வா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி :-) இப்ப கொஞ்சம் ஆணி இருப்பதால் கொஞ்ச நேரம் கழித்து வந்து அனைவருக்கும் பதில் அளிக்கிறேன்!