செல்வாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. விருந்திற்கு செல்வாவும் அழைக்கப்பட்டிருந்தார்.
செல்வா உறவினர் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. அங்கு இருந்தவர்களைச் சாப்பிட அழைத்தனர். செல்வாவும் பந்திக்குச் செல்லத் தயாரானார்.
அங்கு செல்வாவின் அருகில் வேறு சாதிக்காரர் ஒருவரும் தரையில் அமர்ந்திருந்தார். செல்வாவிற்கு சாதி பேதங்கள் பற்றி அதிகம் தெரியாததால் அவரையும் பந்திக்கு அழைத்துச் சென்று அவரருகில் அமரவைத்தார்.
அப்பொழுது அங்கு வந்த அவரது உறவினர் அந்த வேற்று சாதிக்கார ஆளினைப் பார்த்து " நீ எதுக்கு இங்க உட்கார்ந்த ? , போய் கீழ உட்கார் " என்று அதட்டலாகக் கூறினார்.
இதைக் கேட்ட செல்வா " நான் தான் இங்க உட்காரச் சொன்னேன்,ஏன்?" என்றார்.
" அவன் வேற சாதி , அவன் நம்ம சாப்பிடற இடத்துல எல்லாம் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது ! " என்று கூறிவிட்டு அங்கிருந்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு செல்வா அவசர அவசரமாக அந்த உறவினரின் வீட்டிற்கு வந்தார்.
" மாமா , உங்க காட்டுல அந்த வேற சாதிக்காரர் நின்னு களை பறிச்சிட்டு இருந்தார். நான் நீ இங்க வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லி விரட்டிட்டேன்! , இனிமேலாச்சும் நல்லா பார்த்துகோங்க! அவர உள்ள விட்டுறாதீங்க" என்றார் செல்வா.
இதைக்கேட்ட அந்த உறவினர் " அடப் பாவி , ஏண்டா அப்படி பண்ணின ? நானே ரொம்ப சிரமப்பட்டு அவனக் கூட்டிட்டு வந்தேன்! நீ எதுக்கு வேலை செய்ய வேண்டாம்னு சொன்ன ? "
" நீங்கதானே அவர் வேற சாதி , நாம சாப்பிடற இடத்துல சாப்பிடக் கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீங்க.! அதான் நாம சாப்பிடற இடத்துலேயே சாப்பிடக் கூடாதுனா , நாம வேலை செய்யுற இடத்துல அவர் வேலை செஞ்சா தீட்டு ஆகாதா ? அதான் போகச் சொன்னேன் ! " என்று குழப்பமாகக் கூறினார் செல்வா.
செல்வாவின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று குழப்பமாக செல்வாவையே பார்த்துக் கொண்டிருந்தார் அவரது உறவினர்.

10 comments:
நல்ல கருத்து. எளிமையாய் அழகாய் சொல்லியிருக்கீங்க.! வாழ்த்துக்கள்..!
nice மச்சி ... இன்னும் சாதி பேரை சொல்லி இந்த கொடுமையெல்லாம் நடந்துட்டு இருக்குறது வருத்தமான விஷயம்....
நல்ல கதை தம்பி .....
நல்லா இருக்கு தொம்பி....
ஓட்டும் போட்டாச்சி...
சமூகத்தில் காணப்படும், புரிந்துணர்வற்ற சாதி வேறுபாடுகள் பற்றி ஒரு கலாய்ப்புடனும், யதார்த்ததுடன் நிறைந்த கதையினைப் பகிர்ந்திருக்கிருக்கிறீர்கள்.
பாருய்யா கருத்தா கதை சொல்ல ஆரம்பிச்சுட்டான்...!!!
புதிய தத்துவம் 1024.....
அருமை!!
அனைவருக்கும் நன்றிகள். அதிக வேலை இருப்பதால் தனித்தனியே நன்றி கூற இயலவில்லை. இருக்கும் கொஞ்ச நேரத்தில் நான் இன்றைய கதையா எழுதச் செல்கிறேன் :-)
Post a Comment