செல்வாவின் ஊரில் ராமசாமி என்றொருவர் வசித்துவந்தார். அவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களையே நம்பாமல் அவரது அறையைப் பூட்டிப் பூட்டிப் பாதுகாத்து வந்தார்.
ஆனால் அறையைப் பூட்டி வைத்தாலும் நிம்மதி இல்லாமலே இருந்தார்.
அவரது குடும்பத்தில் உள்ளோர் சாவித் துவாரத்தின் வழியாக உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கின்றனர் என்பதே அவரது நிம்மதியைக் கெடுத்தது.
செல்வா அந்த ஊரிலேயே சிறந்த அறிவாளி(!?) என்பதால் அவரிடம் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
அவரது குறையைக் கேட்ட செல்வா " சாவித் துவாரத்து வழியா பாக்குறாங்களா? சரி பண்ணிடலாம் விடுங்க !" என்று தேற்றி அனுப்பிவிட்டு அவரது வீட்டிற்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் அவரை அழைத்த செல்வா " இனிமேல் அவுங்க சாவித் துவாரத்து வழியா பாக்க முடியாதபடி பண்ணிட்டேன் , தைரியமா இருங்க! " என்று மகிழ்ச்சியாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இரவு வேலை முடிந்து செல்வா என்ன செய்து சாவித்துவாரத்தை அடைத்தார் என்ற ஆவலில் வீட்டிற்கு வந்த ராமசாமிக்கு அதிர்ச்சி. உடனே செல்வாவைத் தேடி ஓடினார்.
" என்ன பண்ணி வச்சிருக்க ? இதுக்குத்தான் உங்கிட்ட ஐடியா கேட்டேனா ?" என்று கோபமாக செல்வாவைப் பார்த்துக் கத்தினார்.
" நீங்க தானே சாவித்துவாரம் வழியா பாக்குறாங்கன்னு சொன்னீங்க , அதான் அப்படி பண்ணினேன்! "
" அதுக்குன்னு கதவவே எடுத்திட்டியே , இனி எப்படி நான் பூட்டுப் போடுறது ? "
" சாவி துவாரம் வழியா பாக்க கூடாதுனா பூட்டு இருக்க கூடாது , பூட்டு இருக்க கூடாதுனா கதவு இருக்க கூடாது , அதான் கதவ எடுத்திட்டேன் , இனி எப்படி அவுங்க சாவித்துவாரம் வழியா பாப்பாங்க ?"
" உன்ன மாதிரி ஒரு லூச நான் பார்த்ததே இல்ல , இப்ப அவுங்க நான் வேலைக்குப் போனதுக்கு அப்புறம் வேற கதவு வாங்கி தே இடத்துல வச்சு மறுபடி சாவித்துவாரம் வழியா பார்த்தா என்ன பண்ணுறது ? "
செல்வாவும் ராமசாமியும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த மற்றொரு நண்பருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
" வீட்டுல இருக்குறவங்கள நம்பலைனா எப்பவுமே உனக்கு நிம்மதி இருக்காது"! என்று அறிவுரை கூறி ராமசாமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவரது நண்பர்.
7 comments:
அட.. வடை
////
செல்வா அந்த ஊரிலேயே சிறந்த அறிவாளி(!?) என்பதால்
///////
சொல்லவே இல்ல...
/செல்வா அந்த ஊரிலேயே சிறந்த அறிவாளி(!?) என்பதால்
///////
சொல்லவே இல்ல...//
ஹி ஹி .. இதெல்லாம் சொல்லனுமா என்ன ?
////MANO நாஞ்சில் மனோ said...
//விக்கி உலகம் said...
அய்யய்யோ ஊரே என்னை திட்டிட்டு இருக்கு இவன்கிட்ட மறுபடியும் வாய கொடுத்திட்டேனே!///
கோமாளி செல்வா போற இடமெல்லாம் அடி வாங்குறான்னா, நீர் திட்டு வாங்குறீராக்கும்............
//////
அப்படியா சங்கதி சொல்லவேயில்ல...
அப்பா...
மனோ-வை போட்டு கொடுத்தாச்சி...
, இப்ப அவுங்க நான் வேலைக்குப் போனதுக்கு அப்புறம் வேற கதவு வாங்கி தே இடத்துல வச்சு மறுபடி சாவித்துவாரம் வழியா பார்த்தா என்ன பண்ணுறது ? "////
அடிங் ங்கொய்யாலே....என்ன வில்லத்தனம்....
அட என்ன மாதிரி அறிவாளிப் பசங்க, ஒரு இரவில கதவையும் எடுத்திட்டாங்களே,
இனி ஓப்பினாகப் பார்க்க வேண்டியது தான்.
ஹி...ஹி..
Post a Comment