Thursday, April 7, 2011

தேர்தல் காலமும் செல்வாவின் குழப்பமும்


செல்வா மும்முரமாக எதையோ கூகிளில் தேடிக்கொண்டிருந்தார். 

அப்பொழுது அவரது வீட்டிற்கு வந்த அவரது நண்பர் " என்னடா இவ்ளோ அவசர அவசரமா எதத் தேடிட்டு இருக்க ? " என்றார்.

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஓட்டுக் கேக்குறதுக்காக MLA  வந்திருந்தார். அவர் சொன்னததான் தேடிட்டு இருக்கேன் " 

" அவர் என்ன சொன்னார் ? நீ என்ன தேடுற ? "

"எங்களுக்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தாருங்கள் அப்படின்னார் , அதான் பாவம் போனா போகுது சும்மா வெட்டியாத்தானே இருக்கோம் , தேடித்தரலாமேன்னு தேடுறேன் " என்ற செல்வா கணினியை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

" நான் அப்பவே நினைச்சேன் , ஏண்டா இப்படி இருக்க ? சரி கொஞ்சம் தள்ளு செய்தி பாக்கலாம் " என்றவர் செய்திகளுக்கான இணையதளத்திற்கு மாற்றினார். 

அதன் முதல் பக்கத்தில் " ஆம்னி பஸ்ஸில் ரூ.5  கோடி சிக்கியது ? " என்ற செய்தியைப் பார்த்ததும் " அடடா கை சிக்கிச்சா , கால் சிக்கிச்சா ? இதுக்குத்தான் எங்க போனாலும் மெதுவா போகனும்கறது " என்றார் செல்வா.

" ச்சே, போயும் போயும் இங்க வந்தேன் பாரு " என்று அலுத்துக்கொண்ட நண்பர் வெளியில் கிளம்ப ஆயத்தமானார். அப்பொழுது அவருக்கு எதிரில் கணினித்  திரை ஒன்று இரண்டாகப் பிளக்கப்பட்டுக் கிடந்தது.

" ஏண்டா , இது இப்படி ஒடஞ்சு கிடக்கு ? "

" அது நேத்திக்கு நம்ம ரமேசு ஒரு மெயில் அனுப்பச்சொன்னான் , அதுல கார்பன் காப்பி மெய்ல பிரபுக்கு அனுப்பிடுனு சொன்னானா , அதான் கார்பன் பேப்பர் எங்க வெக்கிரதுன்னு தெரியாம ஒடச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது கார்பன் காப்பி மெயில் அனுப்ப கார்பன் பேப்பர் தேவை இல்லைன்னு ! " என்றார் செல்வா சோகமாக.

"கெரகம் ,இது கூட தெரியாம இருந்திருக்க ? " என்று பேசிக்கொண்டிருக்கையில் வெளியில் மற்றொரு கட்சியினர் ஒட்டுகேட்டுத் தெருவில் பேசிக்கொண்டு சென்றனர்.

வெளியில் வந்த செல்வாவும் நண்பரும் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது " உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ----- சின்னத்தில் போட்டு எங்களை வெற்றி பெறச் செய்யுங்கள் " என்று வாக்குச் சேகரித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தனர்.

" சிந்துரதுக்கு ஓட்டு என்ன அரிசி மூட்டையா ? , சிந்தாமல் சிதராமல்னு ஏன் சொல்லுறாரு ? " என்றார் செல்வா.

" உன் சந்தேகத்த எல்லாம் அவர்கிட்டவே போய்க்கேட்டுக்க , நான் போறேன் " என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் நண்பர்.

15 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

Madhavan Srinivasagopalan said...

நான்தான் ரெண்டாம் ஒட்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nee aalumkatchiyaa?

சௌந்தர் said...

செம செம நான் இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் டா சூப்பர்

அருண் பிரசாத் said...

:) ஹா ஹா ஹா

பாட்டு ரசிகன் said...

எப்படிடா இப்படி..

ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...

பாட்டு ரசிகன் said...

இதையும் கொஞ்கம் படிக்கறது..

http://ungaveetupillai.blogspot.com/2011/04/blog-post_795.html

அன்புடன் நான் said...

மிக திறமைசாலியா இருக்கிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சௌந்தர் said...

செம செம நான் இன்னும் சிரிச்சிட்டு இருக்கேன் டா சூப்பர்//

ஆமா இன்னும் நல்லா உசுப்பேத்தி விடுங்கடா இன்னும் மொக்கை போட்டு கொல்லட்டும்..

நிரூபன் said...

எங்களுக்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தாருங்கள்//

வணக்கம் சகோ... ஆகா நல்லாத் தானே போய்கிட்டிருக்குது.

நிரூபன் said...

ஆம்னி பஸ்ஸில் ரூ.5 கோடி சிக்கியது ? " என்ற செய்தியைப் பார்த்ததும் " அடடா கை சிக்கிச்சா , கால் சிக்கிச்சா ? இதுக்குத்தான் எங்க போனாலும் மெதுவா போகனும்கறது " என்றார் செல்வா.//

அட்டா, சிக்கினது கையுமில்லை, காலுமில்ல, கள்ள ஓட்டுக்கான பணம் பாஸ்.

நிரூபன் said...

அது நேத்திக்கு நம்ம ரமேசு ஒரு மெயில் அனுப்பச்சொன்னான் , அதுல கார்பன் காப்பி மெய்ல பிரபுக்கு அனுப்பிடுனு சொன்னானா , அதான் கார்பன் பேப்பர் எங்க வெக்கிரதுன்னு தெரியாம ஒடச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது கார்பன் காப்பி மெயில் அனுப்ப கார்பன் பேப்பர் தேவை இல்லைன்னு !//

உங்களின் நகைச்சுவைகளின் சிந்தனைப் போக்கும், அதனை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மென்மையாக எங்களிடம் கொண்டுவரும் உரை நடையினையும் ரசிக்கிறேன் சகோ.

நிரூபன் said...

சிந்துரதுக்கு ஓட்டு என்ன அரிசி மூட்டையா ? , சிந்தாமல் சிதராமல்னு ஏன் சொல்லுறாரு ?//

ஹா...ஹா...

பாஸ் சிந்தாமல் சிதறமால் என்றால், வாங்கின இலவச அரிசியை கொட்ட முதலே ஓட்டுப் போடச் சொல்லுறாரு என்று அர்த்தம்.

செல்வா said...

கொடூர ஆணிகளின் பிடியில் இருப்பதால் பின்னூட்டமிட்டர்வர்களுக்கு மிக்க நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகவே உங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்....