தேர்தல் தினத்தன்று தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக செல்வா வாக்குச் சாவடிக்குச் சென்றார்.
செல்வாவிற்கு எப்படி வாக்களிப்பது என்று தெரியாது என்பதால் அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டார்.
" அந்த லைன்ல போய் நில்லுங்க, உள்ள இருக்குறவுங்க உங்க பேர சரி பார்த்திட்டு எப்படி ஓட்டுப் போடுறதுன்னு சொல்லுவாங்க ! " என்று அனுப்பினார்.
வரிசையில் சென்ற செல்வா உள்ளே இருந்த தேர்தல் அதிகாரியிடம் சென்றதும் அவர் செல்வாவின் பெயரைச் சரிபார்த்துவிட்டு அவரது கையில் மை வைக்க அவரது கையைக் காட்டுமாறு கூறினார்.
" ஐயோ , இது என்னங்க ப்ளூ கலர் மை வச்சிருக்கீங்க ? எனக்கு ப்ளூ கலர் பிடிக்காது ! வேற கலர் வச்சு விடுங்க ! " என்றார்.
" எல்லோருக்குமே ப்ளூ கலர்தாங்க , கலர் கலரா வச்சு விட இது என்ன பியூட்டி பார்லரா ? "
" அதெல்லாம் முடியாது , எனக்கு சிவப்பு கலர் மை வச்சு விடுங்க ! "
" சுத்தி எடுத்துப் போட்டா சிவப்புக் கலர் வரும் , போடட்டுமா ? "
" யாரச் சுத்தி வந்து ? " என்றார் செல்வா.
" சுத்தி எடுத்துப் போடுறதுனா யாராவோ சுத்தி வரது இல்ல , சுத்தியல் எடுத்து கைமேல போடுறது ? "
" ஒ , அப்படின்னா எனக்கு சிவப்பு பிடிக்காது , ப்ளூ கலரே வைங்க ! "
கையில் மை வைத்துவிட்டு ஓட்டுப் போடும் இயந்திரத்தின் அருகில் சென்ற செல்வா " சார் , எப்படி ஓட்டுப் போடுறது ? "
" அங்க ப்ளூ கலர் பட்டன் இருக்கும் பாருங்க , அத அழுத்துங்க ! "
" ஆனா இங்க 16 இருக்கு. அத்தனையும் அழுத்தனுமா ? "
" அய்யா சாமி , உங்களுக்குப் பிடிச்சத அழுத்துங்க "
" எனக்குத்தான் ப்ளூ பிடிக்காதே ? " என்றார் செல்வா.
" போலீச கூப்பிடவா ? " என்று கோபமாக எழுந்தார் அந்த அதிகாரி.
" வேண்டாம் , நான் ***** கட்சிக்கு ஓட்டுப் போட்டுட்டேன் , யார் கிட்டவும் சொல்லிடாதீங்க " என்று சத்தமாகக் கூறிக்கொண்டு வெளியில் சென்றார்.
வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது நண்பர்கள் " வாடா , எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்ட ? " என்றனர்.
" நான் ***** கட்சிக்கு ஓட்டுப் போட்டேன் டா "
" பன்னாட , அதுக்கு எதுக்குடா ஓட்டுப் போட்ட ? யார் நல்லவங்கன்னு கூட உனக்குத் தெரியாதா ? "
" அவர் எங்க ஆளுடா " என்றார் செல்வா.
" உங்க ஆளுனா ? "
" எங்க ஜாதி , அதான் போட்டேன் "
" நீயெல்லாம் உருப்படவே மாட்ட , தேர்தல் எதுக்கு வைக்கிறாங்கன்னு கூட தெரியாதா, சாதிக்காரனுக்கு ஓட்டுப் போட்டானாம் ? "
" நீதான் லூசு , யார் ஜாதி பெருசு அப்படின்னு பாக்குறதுக்குதானே தேர்தல் வைக்கிறாங்க , இது கூடத் தெரியாதா ? "
" உன்கிட்டப் பேசுறதுக்கு நான் வேற ஏதாச்சும் பண்ணலாம் " என்று கூறிய அந்த நண்பர் பக்கத்தில் இருந்த மற்றொரு நண்பரிடம் " நீ எதுக்கு ஓட்டுப் போட்ட ? என்றார்.
" நா ##### கட்சிக்குப் போட்டேன் ! " என்றார் அந்த நண்பர்,
" ஏண்டா அவன் தான் அவன் ஜாதின்னு அந்தக் கட்சிக்குப் போட்டான் , நீ ஏண்டா இந்தக் கட்சிக்குப் போட்ட ? "
" எனக்கு நம்ம ரங்கசாமியப் பிடிக்காது. அவன் எனக்கு எதிரி மாதிரி. அதான் அவன் நான் போட்ட கட்சியோட எதிர்க்கட்சிக்கு ஓட்டுப் போடுறேன்னு சொன்னான். அதனால அவன் போடுற கட்சிக்கு நான் போடக்கூடாதுன்னுதான் இந்தக் கட்சிக்குப் போட்டேன்! " என்றார் அந்த நண்பர்.
" ஓட்டுப் போட்டு ஒரு நல்ல ஆளத் தேர்ந்தெடுக்கச் சொன்னா அங்க போய் ஜாதி , எதிரி இதெல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க , உங்களை வச்சு ஒன்னும் பண்ண முடியாது ! " என்று புலம்பியவாறே கிளம்பினார் அந்த நண்பர்.
16 comments:
vadai...
// *****//
இந்த கட்சி இப்ப புதுசா ஆரம்பிச்சு இருக்காங்களா...:))
ஆமா அப்படி ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்காங்க .. ஹி ஹி
நான் உள்ளே வந்துட்டேன்..
உங்கள நம்பி தேர்தல் நடத்தினா என்னடா இது சின்ன பிள்ளை தனமா...
நல்ல வேளை ஓட்டு போட்ட
அது இல்லா இந்த மிஷின்ல ஓட்டை போட்டிருந்தோன்னு வச்சிக்கோ இன்னோரு முறை நடத்திருக்கனும்..
நல்ல வேளை ஓட்டு போட்ட
அது இல்லா இந்த மிஷின்ல ஓட்டை போட்டிருந்தோன்னு வச்சிக்கோ இன்னோரு முறை நடத்திருக்கனும்..////
நீங்க செல்வாவுக்கு மேல இருப்பீங்க போல ....:))
//" ஐயோ , இது என்னங்க ப்ளூ கலர் மை வச்சிருக்கீங்க ? எனக்கு ப்ளூ கலர் பிடிக்காது ! வேற கலர் வச்சு விடுங்க ! " //
நல்ல புள்ள ஃபிலிம் பாக்கும்.. ஆனா அதுல கூட ப்ளூவே இருக்காது..
//" ஓட்டுப் போட்டு ஒரு நல்ல ஆளத் தேர்ந்தெடுக்கச் சொன்னா அங்க போய் ஜாதி , எதிரி இதெல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க , உங்களை வச்சு ஒன்னும் பண்ண முடியாது ! " என்று புலம்பியவாறே கிளம்பினார் அந்த நண்பர்//
செல்வா கதைகளில் கூட நல்ல நல்ல மெசேஜ், வாழ்த்துகள், செல்வா!
ஓட்டுப் போடுற வயசே வராத பயல்லாம் எப்படி கத விடுறாம்பாரு........
பரவால்ல கடைசில ஏதோ நல்ல மெசேஜ் சொல்லி இருக்கான், மன்னிச்சு விடுறேன்!
//உங்கள நம்பி தேர்தல் நடத்தினா என்னடா இது சின்ன பிள்ளை தனமா...
//
நானே சின்னப் பையன்தானே .. ஹி ஹி
/// நீங்க செல்வாவுக்கு மேல இருப்பீங்க போல ....:)) //
இல்ல அவர் என் கம்மேன்ட்டுக்கு கீழ தான் கமெண்ட் போட்டிருக்கார் .. ஆனா இப்ப என் கம்மேன்ட்டுக்கு மேல அவர் கமெண்ட் இருக்கு .. ஹி ஹி
//நல்ல புள்ள ஃபிலிம் பாக்கும்.. ஆனா அதுல கூடப்ளூவே இருக்காது.//
ஆமா அண்ணா .. அதனாலதான் எனக்கு ப்ளூ பிடிக்காது .. ஹி ஹி
//செல்வா கதைகளில் கூட நல்ல நல்ல மெசேஜ், வாழ்த்துகள், செல்வா!
//
ஹி ஹி .. நன்றி அண்ணா ..
//ஓட்டுப் போடுற வயசே வராத பயல்லாம் எப்படி கத விடுறாம்பாரு......//
இந்த ரகசியம் நமக்குல்லவே இருக்கட்டும் வெளிய சொல்லிடாதீங்க ..
Post a Comment