( இந்தக் கதைல எந்த சிந்தனையும் இல்லைங்க. சும்மா சிரிச்சிட்டுப் போலாம் )
செல்வா ஒரு முறை அவரது நண்பரைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். செல்வா தன்னுடன் ஒரு ஸ்டவ் அடுப்பினை எடுத்து வந்திருந்தார் . அப்பொழுது அவரது நண்பர் இன்னொரு நண்பருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.
" டேய் , புத்தாண்டு அதுவுமா காலைல எட்டு மணிவரைக்கும் தூங்கினா இந்த வருஷம் முழுசும் தூங்கிட்டேதான் இருப்ப, உனக்குப் போய் போன் பண்ணினேன் பாரு " என்று கூறிவிட்டு அந்த நண்பருடன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.
உடனே செல்வா " டேய் , எனக்கு ஒரு சந்தேகம் ? " என்றார்.
" உனக்குத்தான் அடிக்கடி சந்தேகம் வந்திடுமே ! சொல்லு "
" புத்தாண்டு அன்னிக்கு நேர வரைக்கும் தூங்கினா வருஷம் முழுசுமே அப்படி இருக்கும்னு சொன்னீல , அதே மாதிரி புத்தாண்டு அன்னிக்கு ஒருத்தன் செத்துப் போய்ட்டா வருஷம் முழுக்க அவன் செத்துட்டே இருப்பானா ? ஆனா அது முடியாதுல ! "
செல்வாவை முறைத்துப் பார்த்தவர் " அது ஒரு பேச்சுக்குச் சொல்லுறது ! " என்று கூறிவிட்டு " ஆமா , எதுக்கு அடுப்பு எடுத்துட்டு வந்திருக்கற ? "
" நீ தான நான் பச்ச பச்சையா பேசுறேன்னு சொன்ன , அதான் ஒரு குண்டாவுக்குள்ள தண்ணி ஊத்தி நான் பேசுறத செல்போன்ல ரெகார்ட் பண்ணி அந்த செல்போன தண்ணிக்குள்ள போட்டு அடுப்பப் பத்தவச்சு அத வேக வச்சிடோம்னா நான் பேசுறது பச்சையா இருக்காதுல்ல ?! எப்படி ஐடியா ? "
" எனக்கு இதுவும் வேணும் , இன்னமும் வேணும் ! "
" என்கிட்டே ஒரு அடுப்புதான் இருக்கு ?! "
" உஸ்ஸ்ஸ்.. என்னால முடில டா.. சர்க்கரைல எறும்பு ஏறுதுன்னு அதுக்கூட எறும்பு மருந்தக் கலக்கி வச்சவன்தான நீயி .. உன் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொன்னா எனக்குப் பைத்தியம் பிடிச்சிரும் ! " என்று புலம்ப ஆரம்பித்தார் அந்த நண்பர்.
14 comments:
vadai...
ஹிஹி... யாரு அந்த நண்பர்...நம்ம கார்த்திக் மச்சிதானே..!!
//ஹிஹி... யாரு அந்த நண்பர்...நம்ம கார்த்திக் மச்சிதானே..!!
//
இது ரகசியம்ம் .. ஆமா அவன் தான்.. ஹி ஹி
இது ரகசியம்ம் .. ஆமா அவன் தான்.. ஹி ///
அடபாவி ரகசியம்னு சொல்லிட்டு பேரையும் சொல்றானே ....:))
போங்கடா....
அப்புறம் பச்ச பச்சயா திட்டப் போறேன்...
மச்சி நீ கலக்குறே டா சூப்பர்....
கலக்கு கலக்கு...
இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களிலிருந்து ஒரு சிறுகதைக்கான கரு எடுக்கிறிர்களே அதுதான் இதன் வெற்றி..
// சௌந்தர் said...
மச்சி நீ கலக்குறே டா சூப்பர்....
//// MANO நாஞ்சில் மனோ said...
கலக்கு கலக்கு...
//
ஹி ஹி .. நன்றி ..
/இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களிலிருந்து ஒரு சிறுகதைக்கான கரு எடுக்கிறிர்களே அதுதான் இதன் வெற்றி.//
நன்றி அண்ணா ..
//இந்தக் கதைல எந்த சிந்தனையும் இல்லைங்க. சும்மா சிரிச்சிட்டுப் போலாம்//
இப்படி சொல்லி மத்த கதைல எல்லாம் கருத்து இருக்குற மாதிரி பில்ட்-அப் என்னத்துக்கு?
நகைச்சுவை செல்வன் அப்டின்னு இன்று முதல் நீ அழைக்கபப்டுவாய்...தம்பி!
என்ன கொடுமைய்யா இதெல்லாம்!
என்ன கொடுமை சரவணன் இது
Post a Comment