செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.
வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால் சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.
" டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? "என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
" ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! " என்று சலித்துக்கொண்டார் செல்வா.
" என்ன சொல்ற ? "
" ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! "
நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா " அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? " என்றார்.
" சரி வா " என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் " காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.
" டேய் என்னடா , இது ? "
" அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! "
" அதுக்கு ஏன் இப்படி ? "
" லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் " என்றார் செல்வா.
" இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? " என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்.
15 comments:
vadai
>>அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
ஹா ஹா செம கலக்கல்
>>" லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது
ஆஹா .. அறிவுக்கொழுந்து.. ஹி ஹி
லூசாடா செல்வா?
vaayu bakavaan vaazhka
machi sema......:)) romba romba super...
@ CPS
//ஆஹா .. அறிவுக்கொழுந்து.. ஹி ஹி//
அறிவுக்கொழுந்து கிடையாது .. அறிவு மரம் .. ஹி ஹி
@ போலீஸ்
யார் அது வாயு பகவான் ? உங்க பக்கத்து வீட்டுக்காரரா ? இல்ல ஏலேச்சன்ல நிக்குரவரா ?
@ கார்த்தி :
ஹி ஹி .. நீ ரொம்ப நல்லவன் மச்சி ..
டேய் உன் அறிவைப் பார்த்தல் உடம்புபெல்லாம் புல் அரிக்குது டா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்குறியோ...!!!
அறிவு கதைகள் தொடரட்டும்..
கடைசியில் ஒரு புத்தகமாக போட்டுடலாம்...
வந்தேன்..
//அறிவு கதைகள் தொடரட்டும்..
கடைசியில் ஒரு புத்தகமாக போட்டுடலாம்...
வந்தேன்..
//
repeatu
அசத்து அசத்து லூசு லூசு லூசு ஹே ஹே ஹே ஹே லூசுன்னு மொக்கையன சொல்லும் போது என்னா சந்தோஷமா இருக்குபா அக்காங்...
;-)))))
/////// லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் " என்றார் செல்வா./////////
காத்து போறத வேற மாதிரியும் செட் பண்ணலாமே?
Post a Comment