Monday, April 25, 2011

செல்வாவும் இணையச் சண்டையும்!


அன்று செல்வா மிகவும் கோபமாக இருந்தார் . 

செல்வா ஒரு வலைப்பதிவர் என்பதால் அவரின் கோபத்துக்கு அவரது பதிவிற்கு வந்த பின்னூட்டமே காரணமாக இருந்தது!

அவரது பதிவு ஒன்றிற்கு " பாதிமப்பில் உளறியது போன்ற பதிவு ! " என்ற பின்னூட்டம் வந்திருந்தது.

அதில் ஆரம்பித்த சண்டை செல்வாவும் அந்தப் பின்னூட்டம் போட்டவரும் ஒருவரை ஒருவர் கேவலமாகத் திட்டிக்கொண்டனர்.

இருவரின் குடும்பத்தைப் பற்றியும் , பரம்பரையே மோசம் என்றும் திட்டிக்கொண்டனர்.

செல்வா கோபமாக இருப்பதைக் கண்ட அவரது நண்பர் என்னவென்று விசாரித்தார்.

" நான் எழுதின போஸ்ட்ல ஒருத்தன் வந்து எனக்கு ஒன்னும் தெரியாது அப்படின்னு சொல்லுறான்டா! அதான் சண்டை ! " என்றார் மிகவும் கோபமாக.

"அதுக்கு ஏண்டா குடும்பத்த எல்லாம் இழுக்குறீங்க ?  ப்ளாக் எழுதுறவங்க எல்லோருமே தனியா படிச்சிட்டா வராங்க ? ஒருத்தன் எழுதுறது பிடிக்கலைனா நாகரீகமா சொல்லலாம்ல! அதுக்கு ஏன் இந்தக் கொலை வெறி? அதிலும் அவன் பிறப்புல இருந்தே அசிங்கப்படுத்துரீங்க ? "

" அவன் என்னையத் திட்டினான் , அதான் நானும் திட்டினேன் ! "

" சரி சண்ட போட்டு என்ன பண்ணுவீங்க ? " என்று கேட்டார் நண்பர்.

" சண்டை போட்டா என்னைய அறிவாளின்னு நினைச்சிடுவாங்கல்ல , அது மட்டும் இல்லாம எனக்கும் சமுதாய அக்கறை இருக்குனு எல்லோரும் எனக்கு மரியாதை குடுப்பாங்க! "

" சமுதாய அக்கறை இருக்குற பதிவா ? அப்படி என்னடா பதிவு அது ? "

" நான் போட்ட பதிவோட தலைப்பு " நாய் ஏன் லொல் லொல்னு குரைக்குது? " அப்படிங்கிறது. 

" இதுல கூடவாடா சண்டை வருது ? "

" ஆமா , அவன் வந்து நாய் லொல் லொல் னு குரைக்காது லொள் லொள் னு தான் குழைக்கும் அப்படின்னு கமெண்ட் போட்டான்! அதான் கடிச்சிட்டேன், எத்தன தடவ பார்த்திருக்கேன் , எங்க நாய் குரைக்குறது எனக்குத் தெரியாதா ?"

" அட பாவிங்களா , கடைசில நாய் குலைக்கிறது கூடவா சண்டை ? அது என்ன பள்ளிக்கூடம் போயாடா படிச்சது ? லகர ளகரம் எல்லாம் உச்சரிக்க ? உங்களைச் சொல்லியும் தப்பு இல்ல , இங்க பாதிச் சண்டை இப்படித் தான் நடக்குது! "

" இருந்தாலும் அவன் அப்படி கமெண்ட் போட்டிருக்கக் கூடாது ! அவன இன்னிக்கு விட மாட்டேன் பாரு! "

" உனக்கும் வேலை இல்லை , அவருக்கும் வேலை இல்லை போல! வேலை நேரத்துல கொஞ்சம் ரிளேக்ஸ்சா இருக்கலாம்னு இணையம் வந்தா இங்கயும் நீ பெரிசு , நான் பெரிசு , நீ முட்டாள் , நான் அறிவாளின்னு சண்டை! எப்படியோ போங்க! "

" நான் எவ்ளோ படிச்சிருக்கேன் தெரியுமா ? நான் அவன விடப் பெரிய அறிவாளி ! இன்னிக்கு ரண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டேன் " என்றார் செல்வா.

" அப்படின்னா ப்ளாக் எழுதுறவங்க மட்டும்தான் அறிவாளியா ? இல்ல அறிவாளிங்க மட்டும்தான் ப்ளாக் எழுதுறாங்களா ? உன்னப் பத்திப் பிரச்சினை இல்ல , நீ ஒரு லூசு ! அவர் எப்படி இந்தமாதிரி கமெண்ட் போட்டு சண்டை போடுரார்னு தான் தெரியல ! " என்று சிரித்தவாறே கிளம்பினார் அவரது நண்பர்.


( பின்குறிப்பு : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கான பதிவு மட்டுமே. யாருடைய மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. பதிவுலக சண்டைகளில் பெரும்பாலும் சரியான புரிதல் இருப்பதில்லை என்பதே இதன் சாரம்! அதுமட்டும் இல்லாமல் பதிவுலக சண்டைகள் பயனற்றவை என்ற எனது புரிதலுமே காரணம்:-) )

17 comments:

Madhavan Srinivasagopalan said...

இணையுறதுக்கு எதுக்காக சண்டை போடணும்..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ்: டேய் செல்வா சண்டைக்கு வாடா..
டெரர்: லொள் லொள்

karthikkumar said...

மச்சி இதையே சாக்கா வெச்சிட்டு பதிவுல நீ அறிவாளி அப்டின்னு சொன்ன பாத்தியா....:)) செம மச்சி ...:))

சி.கருணாகரசு said...

உங்க ஆதங்க வெளிப்பாடு...

மாணவன் said...

//நாய் ஏன் லொல் லொல்னு குழைக்குது ? "//

என்னாது குழைக்குதா?? இல்ல குரைக்குமா?? நாய் குலைக்குமா?? நாய் குளைக்குமா??? #டவுட்டு

:))

MANO நாஞ்சில் மனோ said...

நீ ஒரு லூசு' ஹே ஹே ஹே ஹே சரியாதானே சொல்லுறார்......

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன ஒரு சண்டை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

சண்டை போட என்க்கு நேரம் இல்லை அதனால கிளம்புறேன்...

கோமாளி செல்வா said...

// # கவிதை வீதி # சௌந்தர் said...
என்ன ஒரு சண்டை...

//

ஹி ஹி.. இது சண்டை அல்ல :-))

கோமாளி செல்வா said...

// MANO நாஞ்சில் மனோ said...
நீ ஒரு லூசு' ஹே ஹே ஹே ஹே சரியாதானே சொல்லுறார்......

//

என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ?

கோமாளி செல்வா said...

/என்னாது குழைக்குதா?? இல்ல குரைக்குமா?? நாய் குலைக்குமா?? நாய் குளைக்குமா??? #டவுட்டு

:))//

இதுல கூடவா டவுட்டு வருது ?

கோமாளி செல்வா said...

// சி.கருணாகரசு said...
உங்க ஆதங்க வெளிப்பாடு...

//

ஆமாம் அண்ணா :-))

கோமாளி செல்வா said...

// karthikkumar said...
மச்சி இதையே சாக்கா வெச்சிட்டு பதிவுல நீ அறிவாளி அப்டின்னு சொன்ன பாத்தியா....:)) செம மச்சி ...:))

//

அதான் இடைல லூசுன்னு சொல்லிருக்கேனே . அப்புறம் என்ன மச்சி ?

கோமாளி செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ்: டேய் செல்வா சண்டைக்கு வாடா..
டெரர்: லொள் லொள்

/

ஹி ஹி .. சண்டை இழுக்கப்ப பாக்குறீங்களா ?

கோமாளி செல்வா said...

// Madhavan Srinivasagopalan said...
இணையுறதுக்கு எதுக்காக சண்டை போடணும்..?

/

ஹி ஹி ஹி.. தெரில ..

பெசொவி said...

இப்ப இந்தப் பதிவுக்கு நான் ஏதாவது எதிர்ப்பு தெரிவிச்சா, நான் அறிவாளியா, இல்ல புத்திசாலியா?
(ங்கொய்யால, ரெண்டுல ஒண்ணுதான் சொல்லணும்)

K N MALOLAN said...

நல்லது.சார் வெரி குட்.ஏன் ஸார் நல்லா மொக்கை பொடரேங்லே ரூம் போட்டு யோசிப்பீங்க்லோ?