Monday, May 2, 2011

அட்சய திருதியை!


அன்று செல்வா மிகவும் சோகமா இருந்தார்!

அப்பொழுது அங்கு வந்த அவரது நண்பர் செல்வா சோகமாக இருப்பதைப் பார்த்தார். செல்வா இவ்வளவு சோகமாக இருந்து அவர் இதுவரை பார்த்தே இல்லை.

" என்னடா ஆச்சு , கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க ? " என்றார் அந்த நண்பர்.

" கப்பல் கவுந்தா எல்லோரும் ஒரே அடியா போய்ச் சேர்ந்திருவாங்க , அப்புறம் எங்க உட்காருறது ? " என்று அந்த சோகத்திலும் நண்பரின் தவறினைச் சுட்டிக்காட்டி தான் அறிவாளி(!?) என்பதை நினைவுறுத்தினார் செல்வா!

" ஒழுங்கா சொல்லுடா , ஏன் சோகமா இருக்க ? "

" அது ஒன்னும் இல்லை , இந்த வீட்ட விக்கப் போறேன்! அதான் அழுகை அழுகையா வருது" என்று தான் குடியிருந்த வீட்டினை விற்கப் போவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட அந்த நண்பருக்கு அதிர்ச்சி. ஏனென்றால் செல்வாவிற்கு வீட்டினை விற்கும் அளவு எந்தச் செலவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

" வீட்ட விக்குற அளவுக்கு உனக்கு அப்படி என்னடா செலவு ? " என்றார் நண்பர் சற்று அதிர்ச்சியாக.

" அது வந்து , போன வருஷம் அட்சய திருதியை வந்துச்சுல்ல , அப்போ நகை வாங்கினா செல்வம் பெருகும்னு சொன்னாங்க , அதான் அப்போ அதிக வட்டிக்குக் கடன் வாங்கி தங்கம் வாங்கினேன் , ஆனா செல்வம் பெருகவே இல்ல. இப்ப வட்டி ரொம்ப அதிகமா போய் நான் வாங்கின தங்கத்த வித்தா கூட பத்தாத அளவுக்கு வந்திடுச்சு, அதான் வீட்ட வித்துக் கடன அடைக்கப் போறேன்! " என்றார் செல்வா சோகமாக.

" அட பாவி , வீட்ட வித்து கடன அடைக்கணும்னா அதிகமா வாங்கிருப்ப போல ! கைல இருக்குற காசுக்கு தங்கம் வாங்கித் தொலைய வேண்டியதுதானே ?! "

" அப்போ எங்கிட்ட பணம் கொஞ்சமா தான் இருந்துச்சு , சரி கம்மியா தங்கம் வாங்கினா அந்த அளவுக்குத்தானே செல்வம் வளரும் , அதான் கொஞ்சம் அதிகமா வாங்கினா இன்னும் அதிகமா வளரும்ல , அதான் அரை கிலோ தங்கம் வாங்குற அளவுக்கு கடன் வாங்கினேன்! "

" உன்ன எல்லாம் திருத்தவே முடியாது , இனிமேலாச்சும் இந்த மாதிரி மூட நம்பிக்கைய நம்பாத ! "என்று அறிவுரை கூறினார் நண்பர்.

" எது மூட நம்பிக்கை , உண்மைல அட்சய திருதியை அன்னிக்கு எதாச்சும் பண்ணினா அது பெருகும் தெரிஞ்சிக்க ! " என்றார் செல்வா.

" நீ இன்னும் திருந்தலையா ? என்ன பெருகுச்சு உனக்கு ? "

" ஆமா , போன வருஷம் அட்சய திருதியை அன்னிக்கு கொஞ்சம் தான் கடன் வாங்கினேன் , இந்த வருஷம் இவ்ளோ கடன் ஆகிருச்சு பாரு ? " என்றார் செல்வா.

" கடன் எப்ப வாங்கினாலும் வளரும்! , இதப் போய் அட்சய திருதியை கூட கம்பேர் பண்ணி? , உன்னயெல்லாம் ?! " என்று செல்வாவை முறைத்தார் நண்பர்.

பின்குறிப்பு : அட்சய திருதியை உண்மையோ பொய்யோன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா இப்போ காதுல கேக்குற விளம்பரங்கள் எல்லாமே அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கலைனா போலீஸ் பிடிச்சிட்டுப் போயடும்கிற அளவுக்கு இருக்கு! அதனாலதான் இப்படி :-)

27 comments:

வேதாளம் said...

ஒய் பிளட்... சேம் பிளட்.. செல்வா மொக்கை நாயகனே.. வாள்க வாள்க

கோமாளி செல்வா said...

@ வேதாளம் :
நன்றி மச்சி .. ஹி ஹி.. மொக்கை பத்தி உனக்கும் தெரிஞ்சு போச்சா ?

பாட்டு ரசிகன் said...

உன்தை தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்...

கதையில் என்ன இருக்கு.. பார்த்திட்டு வருகிறேன்..

பாட்டு ரசிகன் said...

மொக்கை பதிவு என்று மூடப்பழக்கங்களை சுட்டிக்காட்டு கதை...

உண்மையில் அருமை..
வாழ்த்துக்கள் செல்வா...

ஆனால் மக்கள் திருந்துவார்களா..?

பாட்டு ரசிகன் said...

உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட கதைல மெசேஜ் கூட இருக்கே....?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பா... நகைச்சுவையில் ஒரு மாபெரும் விழிப்புணர்வு கதை... அருமை .....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கண்டிப்பாக இது ஒரு மொக்கை பதிவு அல்ல....

கோமாளி செல்வா said...

@ பாட்டு ரசிகன் :

மிக்க நன்றி மிக்க நன்றி :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாராட்டுக்கள் செல்வா...!

கோமாளி செல்வா said...

@ கருன் :

ரொம்ப நன்றி அண்ணா!

கோமாளி செல்வா said...

@ ராம்ஸ் :

அண்ணா சும்மா மெசேஜ் கதை ஒன்னும் சொல்லாலாமேன்னு தான் .. ஹி ஹி :-)

Mohamed Faaique said...

நல்ல கருத்து நன்பா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாராட்டுக்கள் செல்வா...!

MANO நாஞ்சில் மனோ said...

//கப்பல் கவுந்தா எல்லோரும் ஒரே அடியா போய்ச் சேர்ந்திருவாங்க , அப்புறம் எங்க உட்காருறது ? " என்று அந்த சோகத்திலும் நண்பரின் தவறினைச் சுட்டிக்காட்டி தான் அறிவாளி(!?) என்பதை நினைவுறுத்தினார் செல்வா!
//

ஹய்யோ ஹய்யோ....

MANO நாஞ்சில் மனோ said...

//ஆமா , போன வருஷம் அட்சய திருதியை அன்னிக்கு கொஞ்சம் தான் கடன் வாங்கினேன் , இந்த வருஷம் இவ்ளோ கடன் ஆகிருச்சு பாரு ? " என்றார் செல்வா.///

அடங்கொன்னியா உன்னை எல்லாம் திருத்த முடியாதுடேய்...

MANO நாஞ்சில் மனோ said...

//
பின்குறிப்பு : அட்சய திருதியை உண்மையோ பொய்யோன்னு எனக்குத் தெரியாதுங்க. ஆனா இப்போ காதுல கேக்குற விளம்பரங்கள் எல்லாமே அட்சய திருதியை அன்னிக்கு நகை வாங்கலைனா போலீஸ் பிடிச்சிட்டுப் போயடும்கிற அளவுக்கு இருக்கு! அதனாலதான் இப்படி :-)///


அடப்பாவிகளா அப்பிடியா பன்னுராணுக...

சௌந்தர் said...

சூப்பர் கதை டா....அதை உன் பாணியில் சொன்னது அதைவிட சூப்பர் மச்சி நீ கலக்கு.....மச்சி

பெம்மு குட்டி said...

செல்வா கதைல மெசேஜ், ஆச்சர்யம் ஆனால் உண்மை.

பிரதீபா said...

விடுங்க செல்வா.. இந்த அட்சய திருதியைக்கு தாமு செட்டியார் போங்க, எம்பேரச் சொல்லி கால்பவுன் வாங்கிக்குங்க.. அடுத்த வருஷத்துக்குள்ள பெருகும் பாருங்க. :)

கோமாளி செல்வா said...

// Mohamed Faaique said...//

ரொம்ப நன்றிங்க :-)

கோமாளி செல்வா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said.
//
மிக்க மகிழ்ச்சி அண்ணா :-) ஹி ஹி ..

கோமாளி செல்வா said...

@ மனோ :
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா :-)

கோமாளி செல்வா said...

@ சௌந்தர் :

நன்றி மச்சி :-)

கோமாளி செல்வா said...

@ பெம்முகுட்டி :

அதிசயம் ஆனால் உண்மைலயே உண்மைங்க .. ஹி ஹி

கோமாளி செல்வா said...

@ பிரதீபா :

இதோ இப்பவே போய் கேட்டுப் பாக்கறேன் ..

கடம்பவன குயில் said...

செல்வா கதையில மெசேஜ்????
ஐயய..... இப்படியெல்லாம் மெசேஜ் சொல்ல 1000 பேர் இருக்காங்க செல்வா. மொக்க கதைக்கு உங்கள விட்டா யாருமே இல்லை. ப்ளீஸ் உங்க டிரெண்ட் (மொக்க???) மாத்தி எங்கள ஏமாத்திடாதீங்க. எப்படினாலும் கதையும் மெசேஜூம் நல்லா இருந்தது.