Wednesday, April 27, 2011

செல்வா செய்தது சரியா?


பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தார் செல்வா!

அங்கு வருவோருக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொடுக்கும் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

செல்வாவும் தனது வேலையினைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்தார்.

ஒருநாள் கடையின் மேலாளர் செல்வா இருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். அங்கே பிளாஸ்டிக் டப்பா ஒன்று உடைந்து காணப்பட்டது.

உடைந்ததற்கான காரணத்தைக் கேட்டார் அவரது மேலாளர். பொருள் வாங்க ஒரு வாடிக்கையாளர் தனக்கு எட்டாத உயரத்திலிருந்த பொருளை எடுப்பதற்காக இந்த டப்பாவின் மேல் ஏறி எடுக்க முயன்றபோது உடைந்ததாகக் கூறினார் செல்வா.

" வர்ற கஸ்டமர்க்கு தேவையானத எடுத்துத் தர்றதுக்குத் தான் உன்னைய வேலைக்கு வச்சிருக்கு ,  அவுங்கள ஏன் நீ எடுக்க சொல்லுற ? இனிமேல் இப்படி எதாச்சும் உடஞ்சா உன்னோட சம்பளத்துலதான் பிடிப்பேன்! " என்று கோபமாகத் திட்டிவிட்டுச் சென்றார் மேலாளர்.

அதற்குப் பிறகு செல்வா இன்னமும் கவனமாக வேலை பார்க்கத் தொடங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு செல்வாவின் வேலைக்கே உலை வைக்கும் அந்த சம்பவம் நிகழ்ந்தது. 

கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரிடம் சிறு தகராறு செய்துகொண்டிருந்தார் செல்வா. என்னவென்று விசாரித்த அவரது மேலாளர் செல்வாவை வெகுவாகக் கடிந்துகொண்டார். இருந்தபோதிலும் செல்வாவிற்குக் குழப்பம். இதற்கு முன்னாள் மேலாளர் சொன்னதைத் தானே செய்தோம் , பின்னர் எதற்காகத் திட்டுகிறார் என்று. அவரிடமே கேட்டுவிட முடிவு செய்தார் செல்வா.

" சார் , நீங்கதானே சார் அன்னிக்கு அந்த டப்பா மேல ஒருத்தர் ஏறி உடைச்சதுக்கு என்னையத் திட்டுனீங்க! அதான் இப்படி பண்ணினேன் ? " என்று அப்பாவியாய்க் கேட்டார் செல்வா.

" அதுக்காக எடை பாக்குறதுக்காக எடை போடுற மிசின் மேல ஏறப் போனவன  வேண்டாம்னு சொல்லிட்டு, நீ அது மேல ஏறி நின்னு உன்னோட எடையச் சொல்லுறியே கொஞ்சம் கூட அறிவே கிடையாதா ? "

" கடைக்கு வர்றவங்க எது கேட்டாலும் எடுத்துக் குடுன்னு நீங்கதானே  சொன்னீங்க , அதான் எடுத்துக் குடுத்தேன் , இது தப்பா ? " என்ற செல்வாவை முறைத்தாலும் உள்ளூர சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மேலாளர்.

12 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்து விட்டு வருகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
செல்வாவும் தனது வேலையினைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்தார்.////

அப்படியா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
சில நாட்களுக்குப் பிறகு செல்வாவின் வேலைக்கே உலை வைக்கும் அந்த சம்பவம் நிகழ்ந்தது. ////


அப்ப வீட்டுக்கு அனுபபிலயா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உன்னுடைய எடை எவ்வளவு...

சௌந்தர் said...

சரி சரி உன் வெயிட் என்ன அதையும் சொல்லு....

செல்வா said...

ஏன் இரண்டு சௌந்தரும் என்னோட எடைய கேக்குறீங்க ? ஹி ஹி

Madhavan Srinivasagopalan said...

// சௌந்தர் said...

சரி சரி உன் வெயிட் என்ன அதையும் சொல்லு.... //

வெயிட்டோட வந்த இன்றைய பலன் (செல்வாவிற்கு ):
வாசகர்களிடம், அடி வாங்குவார்..

karthikkumar said...

:)) nallaa irukku machi....

கடம்பவன குயில் said...

பொறாமையா இருக்கு . செல்வாவின் புத்திசாலிதனத்தைப் பார்த்து. ஏன்?ஏன்?ஏன்? செல்வாக்கு மட்டும் இவ்வளவு அறிவ படைச்ச ஆண்டவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பல்பொருள் அங்காடினா பல்லை விப்பாங்களா?

Mohamed Faaique said...

///பல்பொருள் அங்காடினா பல்லை விப்பாங்களா?//

சேலம் பல் வைத்திசாலை’ல பல்ல கழட்டாம விட்ட்டாங்க பாருங்க.. அது ரொம்ப தப்பு’னு இப்போதான் புரியுது

Mohamed Faaique said...

///செல்வாவும் தனது வேலையினைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்தார்.///

அங்கயும் கருத்து சொல்லிக் கொண்டா இருந்தீங்க...