Monday, April 18, 2011

செல்போன் கயிறு.!

செல்வாவின் செல்போன் அடிக்கடி கீழே விழுந்து உடைந்து விடுவதாக மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட செல்வாவின் நண்பர் " அட , நீ சர்ட் பாக்கட்ல போன் வைக்கிறதால குனியும்போது கீழ விழுந்திடுது. அதனால பேன்ட் பாக்ட்ல போட்டு வை, உடையாது! " என்று ஆலோசனை கூறினார்.

" பேன்ட் பாக்கட்ல போட்டா போன் வந்தா கூட தெரிய மாட்டிங்குது , சத்தமே கேக்குறது இல்ல , சர்ட் பாக்கட்லயே வச்சிட்டு கீழ விழாம இருக்குறதுக்கு எதாச்சும் ஐடியா கொடேன் "

" ஒ ,அப்படின்னா ஒரு TAG வாங்கி கழுத்துல மாட்டிக்கிட்டா கீழ விழாது!"

" TAG னா என்ன ? "

" இத வேற விளக்கனுமா ?  அது ஒரு கயிறு மாதிரி இருக்கும் ! " என்றார் நண்பர்.

" ஒ , மந்திரக் கயிறு தானே ? தாயத்து இருக்குமா ? போன் கீழ விழாம இருக்கிற மாதிரி மந்திரம் பண்ணி வச்சிருப்பாங்களா ? " செல்வா வழக்கம்போல தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தினார்.

" உன்னயெல்லாம் திருத்தவே முடியாது. அது சாதாரணக் கயிறு.! கடைல கேட்டீனா தருவாங்க ! " என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.


சிறிது நாட்களுக்குப் பிறகு அதே நண்பரைச் சந்தித்த செல்வா " போடா வெண்ண , நீ சொன்னது மாதிரி செல்போன் கயிறு வாங்கி என் கழுத்துல கட்டினதுக்கு அப்புறமும் செல்போன் கீழ விழுந்திருச்சு! "


" வாய்ப்பே இல்ல , நான் நம்ப மாட்டேன்! , ஆமா நீ உன் கழுத்துல தான கட்டின ? "

" நீ நம்ப மாட்டீனு தெரியும் , அதான் இப்ப கூட கழுத்துலையே கட்டிருக்கேன்! " என்று கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த செல்போன் TAG இணைக் காட்டினார்.

" நான் முதல்லையே நினைச்சேன் , நீ இன்னொரு முனைல உன்னோட செல்போன இணைச்சியா இல்லியா ? "

" லூசா நீ ? இன்னொரு முனைல இணைச்சிருந்தா நான் எப்பவோ செத்திருப்பேன் ! " என்றார் செல்வா கொஞ்சம் கோபமாக.

" என்ன ஒளர்ற ? "

" ஆமா இன்னொரு முனைல இணைச்சிருந்தாக்க , செல்போன் கீழ விழும்போது நானும் அதுக்கூட சேர்ந்து விழுந்திருப்பேன்ல! அப்புறம் எப்படி நான் உயிரோட இருப்பேன் !? " என்று கேட்டார் செல்வா.

இதைக் கேட்ட நண்பருக்கு என்ன சொல்லுவதென்றே தெரியாமல் அமைதியானார்.

பின்குறிப்பு : எப்படியோ தத்தித் தவழ்ந்து ஐம்பதாவது கதைய எட்டிப் பிடிச்சிட்டேன். இதுல சில கதைகள் உங்களுக்குப் பிடிச்சிருக்கலாம். சிலது பிடிக்காம இருந்திருக்கலாம். செல்வா கதைகளின் நிறை என்ன குறை என்ன அப்படின்னு உங்களோட கருத்துக்களை இந்தப் பதிவுல பின்னூட்டத்திலோ   இல்ல எனது மின்னஞ்சலுக்கோ (thamizhbarathi@gmail.com) அனுப்புங்க. உங்களோட கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

25 comments:

karthikkumar said...

செல்போன் கீழ விழும்போது நானும் அதுக்கூட சேர்ந்து விழுந்திருப்பேன்ல!//// ஆமா மச்சி செல்போன் போனா போகுது... உயிர் முக்கியம்ல....:))

karthikkumar said...

அட அம்பது வந்தாச்சா வாழ்த்துகள் மச்சி.. :))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

50-வது கதைக்கு எனது வாழ்த்துக்கள்...

சௌந்தர் said...

நல்ல வேளை மச்சி நீ மட்டும் அந்த கயிறை செல் போன் ல இணைச்சு இருந்தே...உன்னால அடுத்த கத்தை எழுத முடியாம போய் இருக்கும்....

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்...!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடர்ந்து எழுத நான் வாழ்த்துகிறேன்..
புதிய சிந்தனை..
புதிய பாணி...
புதிய பாதை...

ம்.. கலக்குங்க..

வைகை said...

ஐம்பதாவது கதையை எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

வைகை said...

ஆமா இன்னொரு முனைல இணைச்சிருந்தாக்க , செல்போன் கீழ விழும்போது நானும் அதுக்கூட சேர்ந்து விழுந்திருப்பேன்ல! அப்புறம் எப்படி நான் உயிரோட இருப்பேன் !?//

அதன் இன்னொரு முனையை எங்க கழுத்தில் இணைக்கவும்!

வைகை said...

எப்படியோ தத்தித் தவழ்ந்து ஐம்பதாவது கதைய எட்டிப் பிடிச்சிட்டேன். //

எட்டி பிடிசிட்டியா? அப்ப இது யாரு எழுதியத பிடிச்ச?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேற ட்விஸ்ட்ட எதிர்பார்த்தேன், பட் இது ரொம்ப நல்லாருக்கு..........!

Madhavan Srinivasagopalan said...

உங்கள் செல்போன் தோராயமாக 30 -- 40 கிலோ இருக்குமோ ?

மாணவன் said...

வாழ்த்துக்கள் செல்வா....செல்வா கதைகள் மென்மேலும் சிறப்புற்று சிரிக்கவும் சிந்திக்கவும்...தொடரட்டும் உங்கள் மகத்தான பணி... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உன் வில்லங்கமான பணி!

சி.பி.செந்தில்குமார் said...

50க்கு வாழ்த்துக்கள்.. ராம்சாமி நினச்ச மாதிரி நானும் ... ட்விஸ்ட் சுமார்தான்

செல்வா said...

வாழ்த்திய அனைவருக்கும் காலைல வந்து பதில் சொல்லுறேன். இப்பக் கிளம்பிட்டேன். நன்றி :-))

Anonymous said...

இந்த கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடவும்.

MANO நாஞ்சில் மனோ said...

// ஆமா இன்னொரு முனைல இணைச்சிருந்தாக்க , செல்போன் கீழ விழும்போது நானும் அதுக்கூட சேர்ந்து விழுந்திருப்பேன்ல! //

இந்த ஒன்னுக்காகவே உன்னை குமுறி எடுக்க கை அரிக்குது....

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு மக்கா அசத்து அசத்து....

Unknown said...

बॉस वाल्गा वाल्गा

Unknown said...

रोम्बा नल्ला एरुक्कू अन्नाची कलाक्कुरींगा
पगुथ अचा हे

Unknown said...

வாழ்த்த வயதில்லை இந்த நண்பனுக்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா ரொம்ப நல்ல கருத்துள்ள தளம்

Unknown said...

வாழ்த்த வயதில்லை இந்த நண்பனுக்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் நண்பா ரொம்ப நல்ல கருத்துள்ள தளம்

Unknown said...

செல்வாவின் 50வது கதை அருமை

உணவு உலகம் said...

ஐம்பதிற்கு வாழ்த்துக்கள். ஐநூறாய் பெருகட்டும். வாழ்த்துக்கள்.

இம்சைஅரசன் பாபு.. said...

முடிவு கொஞ்சம் சொதப்பிடீயே ..ராச ..இருந்தாலும் ஐம்பது தடவ என்னோட கழுத்தை ..அருத்ததர்க்கு வாழ்த்துகள் ..

Unknown said...

50 வது கதைக்கு வாழ்த்துக்கள் செல்வா..

கதை நல்லாயிருக்கு.. முடிவு இந்தமாதிரிதான் இருக்கும்னு தெரியும்.. :-).. செல்வா பத்தித் தெரியாதா.. :-)