Friday, May 27, 2011

பாட்டியின் இறப்பு!


அன்று செல்வா மிகவும் சோகமாக இருந்தார். மேலும் அழுதுகொண்டே இருந்தார்.

செல்வாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்துகொண்டிருந்தனர்! செல்வா இப்படி உடைந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த அவரது உறவினர் ஒருவர் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்தார்.

" அழாத செல்வா , பாட்டிக்கு வயசாய்டுட்சுல அதான் இறந்திட்டாங்க! உனக்கும் ஒருநாள் வயசாச்சுனா நீயும் சாகலாம் இரு! " என்று கல்யாணத்திற்கு வாழ்த்துவது போல ஆறுதல் கூறினார். உண்மையில் அவரும் செல்வா போன்ற அறிவாளியாக (?!) இருந்திருக்க வேண்டும். ஆனால் செல்வா தரப்போகும் அதிர்ச்சி அவருக்கு இப்பொழுது தெரியாது.

சிறிது நேரம் செல்வாவைத் தேற்றிக்கொண்டிருந்த அவரது உறவினர் அப்பொழுது கண்ட காட்சியால் மயங்கிவிழும் அளவிற்கு அதிர்ச்சியுற்றார்.

இறந்துவிட்டதாக சொன்ன செல்வாவின் பாட்டி நல்ல ஆரோக்யத்துடன் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா

" இந்தப் பாட்டிதான் இறந்திட்டாங்க ! " என்றார்.

அவரது உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. இது வழக்கம்போல அறிவாளி(?!) செல்வாவின் முட்டாள்தனங்களில் ஒன்றாக இருக்கும் என்று எண்ணியவர் , செல்வாவிடம்

" என்னடா ,செத்துட்டாங்கன்னு சொல்லுற, இப்ப உயிரோட வராங்க! "என்றார்.

" அவுங்க இப்ப சாகல, இன்னும் பத்து வருஷம் கழிச்சு செத்திட்டாங்க! அதான் அழுறேன்!" என்றார் செல்வா.

செல்வாவின் உறவினருக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை. " பத்து வருஷம் கழிச்சு செத்துப் போவாங்கன்னு இப்ப எதுக்கு அழுகுற? "

" நேத்திக்கு பக்கத்து வீட்டுல ஒருத்தர் செத்ததுக்காக கூரை மேல சோறு போட்டாங்களா  அத பாத்த எங்க அப்பா " உயிரோட இருக்கும்போது சோறு போடலை , இப்போ போடுராணுக பாரு ! " அப்படின்னு திட்டினாரு. எங்க பாட்டி செத்த பின்னாடி அழுதா அவுங்களுக்குத் தெரியாதுல , அதான் உயிரோட இருக்கும்போதே அழுதிடலாம்னு அழுறேன்! " என்றார் செல்வா அழுதுகொண்டே.

அப்பொழுது உள்ளே வந்த அவரது தந்தையைப் பார்த்த உறவினர் " அவுங்க கூரை மேல சோறு போடுறாங்கனா அது அவுங்க நம்பிக்கை , அத ஏன் கிண்டல் பண்ணுறீங்க ? இப்ப பாருங்க இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்னு! " என்று கூறிவிட்டு கிளம்பளானார்.

12 comments:

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. எலேய்... எலேய்..
உன்ன...

Madhavan Srinivasagopalan said...

பாட்டி சுட்ட வடை எனக்கே எனக்கா ?

Speed Master said...

முடியல்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
USB செல்லும் பாதை

http://speedsays.blogspot.com/2011/05/usb.html

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் ....#%##%^%$$^$^%$^%$&%*&^(&*(*&(&*&%&^^$#$#&^%&^%&%^&^%^*

MANO நாஞ்சில் மனோ said...

ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

நீ அழுத சரி ஓகே, எங்ககளை எதுக்குய்யா அழ வைக்குற கொன்னியா...

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடிய்யா உன்கிட்ட மட்டும் எடக்கு மடக்கா ஆளுங்க வந்து மாட்டுரானுக...?

Unknown said...

:)))))))))

Anonymous said...

சோகமும், சிரிப்பும் கலந்த வித்யாசமான படைப்பு. நல்லா இருக்கு செல்வா.

Unknown said...

so nice..

Unknown said...

மாப்ள நீ இவ்ளோ பெரிய அறிவாளியா.......கண்டிப்பா நான் ஒத்துக்கறேன் நான் முட்டாள்னு ஒத்துக்கறேன்!

DREAMER said...

உங்கள் பதிவை முதல்முறை படிக்கிறேன். நல்லாயிருக்குங்க..!

"உனக்கும் ஒருநாள் வயசாச்சுனா நீயும் சாகலாம் இரு!" - இதை இனி எல்லா சாவு வீட்லயும் அழறவங்ககிட்ட சொல்லி தேற்றலாம்னு இருக்கேன். சங்கு ஊதிடுவாங்களோ..?

-
DREAMER