Saturday, May 14, 2011

ராசிபலன்!


நாட்காட்டியில் தனது ராசிக்கான பலனைப் பார்த்தவுடன் இன்று வேலைக்குச் செல்வதில்லை என்ற முடிவிலிருந்தார் செல்வா!

இந்நேரத்துக்கேல்லாம் ரெடி ஆகிருப்பானே, எங்க ஆளக் காணோம் ?  என்று நினைத்தவாறு செல்வாவுடன் வேலை செய்யும் அவரது நண்பர் செல்வாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

" என்னடா இப்படி உட்கார்ந்திட்டு இருக்க ? வேலைக்கு வரலியா ? "

" இல்ல " என்றார் செல்வா.

" ஏன் , ஒடம்பு சரியில்லையா ? "

" அதெல்லாம் இல்ல , இன்னிக்கு என்னோட ராசிக்கு தீமைனு ராசிபலன் போட்டிருக்கு அதான் வேலைக்கு வந்தா ஏதாச்சும் ஆகிடும்னுதான் வரல! "

" ஏன்டா , காலண்டர்ல போட்டிருக்குற ராசிபலன கூடவா நம்புற  ? எனக்கு அதுல நம்பிக்கை இல்ல , நீ என்கூடவே வா , உனக்கு என்ன தீமை நடக்குதுன்னு பார்க்கறேன்!" என்று கிண்டலாகக் கூறினார் நண்பர்.

" போடா வெண்ண , ராசிபலன் உண்மை! தெரிஞ்சிக்க "

" அதெல்லாம் டுபாகூருடா , ஒழுங்கு மரியாதையா என்கூட வேலைக்கு வந்திடு ! "

சிறிது நேரம் வாதாடிப் பார்த்த செல்வா அவரது நண்பர் ராசிபலன் முழுவதும் பொய் என்றும் தான் நம்ப மாட்டேன் என்றும் கூறுவதைக் கேட்டு நண்பருடன் அலுவலகம் செல்ல முடிவு செய்தார். இருவரும் வேலைக்குக் கிளம்பினர். சிறிது தூரம் சென்றது செல்வா

" டேய் , பூனை குறுக்கால வருதுடா , இது கெட்ட சகுனம்  நான் வரல ! " என்று மறுபடியும் திரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்.

தண்ணி குடிச்சா சகுனம் போய்டும் , அதனால தண்ணிகுடிச்சிட்டுத் போலாம் என்ற நண்பரின் ஆலோசனையை ஏற்று தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் வேலைக்குக் கிளம்பினர் இருவரும்.
மறுபடியும் சிறிது தூரத்தில் வெள்ளைப் புடவை உடுத்திய ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். இதைப் பார்த்த செல்வா " டேய் , இதுவும் கெட்ட சகுனம்டா , இனி நீ என்ன சொன்னாலும் வர மாட்டேன் ! " என்று கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.

அவரது நண்பருக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் அவர் மட்டும் வேலைக்குச் சென்றார்.

மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய அவரது நண்பர் செல்வாவிடம் சென்று ராசிபலனைப் பற்றிக் கிண்டல் செய்யலாம் என்று செல்வாவின் வீட்டிற்கு வந்தார்.

" ஏன்டா , என்னமோ தீமைனு சொன்ன ? எதாச்சும் நடந்திச்சா ? " என்றார் நக்கலாக.

" ஆமாடா , காலண்டர்ல போட்டிருந்த மாதிரியே தீமை ஆகிப்போச்சு! " என்றார் சோகமாக.

நண்பருக்கு ஆச்சர்யம். " அப்படி என்னடா தீமை நடந்திச்சு ? "

" நம்ம குமாரு இருக்கான்ல , அவன் காலைல என்கிட்டே வந்து " ஏன்டா வேலைக்குப் போகலை " ன்னு கேட்டானா, நானும் ராசிபலன் பத்தி சொன்னேன்!" அதுக்கு அவன் " நீ எப்பத்தான் ஒழுங்கா வேலைக்குப் போயிருக்க? வேலைக்குப் போகாமா இருக்க இப்படி ஒரு சாக்கு ! " அப்படின்னு திட்டினான். எனக்கு செம கோவம் வந்திருச்சு. உடனே அவன் மூஞ்சியப் பாத்துக் குத்திட்டேன்! மூக்கெல்லாம் ரத்தமா ஒழுகுச்சு! நீ காலண்டர் ராசிபலன் பொய்னு சொன்ன , உண்மை ஆகிருச்சு பாரு! " என்றார் செல்வா.

" இதுல உனக்கு எங்க தீமை நடந்துச்சு ? , உனக்கு ஒரு தீமையும் இல்லைனா ராசிபலன் பொய்தானே!" என்றார் நண்பர் ஆவலாக.

" அதான் குமாருக்கு நடந்திசுல ! "

" குமாருக்கு நடக்குறதுக்கும் நீ சொன்னதுக்கும் என்ன சம்பந்தம் ? "

" லூசு, குமாருக்கும் எனக்கும் ஒரே ராசி! எனக்கு நடக்கலைனாலும் குமாருக்கு நடந்திச்சுல! " என்றார் செல்வா.

" அப்படின்னா காலண்டர்ல போட்டிருக்கறது யாரோ ஒருத்தருக்குத்தான் நடக்குமா ? அப்புறம் எதுக்கு அத நம்புற ? "

" ஹி ஹி " என்று பதில் சொல்லத்தெரியாமல் இளித்தார் செல்வா.

12 comments:

மாணவன் said...

வணக்கம் செல்வா :)

மாணவன் said...

இனிமேல் ராசிபலன் பார்த்துதான் வேலைக்கு போக வேண்டும் :)

பெசொவி said...

//மாணவன் said...
இனிமேல் ராசிபலன் பார்த்துதான் வேலைக்கு போக வேண்டும் :)
//

ராசிபலன் பார்த்துதான் இந்த ப்ளாகுக்கே வரணும் போலிருக்கு!

கடைக்குட்டி said...

ஓ.கே.. இது உங்க பெஸ்ட் இல்ல சகா.. தோணுச்சு .. சொல்லிட்டேன்..

இன்னும் முயல்வோம்.. சேந்து உயர்வோம் எழுத்தில் :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்று மதியம் நான் நான் வெஜ் சாப்பிட்டேன்...

ஏன் தெரியுமா..

எங்க வீட்டு காலண்டர்ல கரிநாள் -அப்படின்னு போட்டிருந்தது...

கொய்யால நாங்களும் சொல்லுவோம்ல...

Madhavan Srinivasagopalan said...

//பெசொவி said...
"ராசிபலன் பார்த்துதான் இந்த ப்ளாகுக்கே வரணும் போலிருக்கு!"//

ரிபீட்டோய்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ராசின்னா அது அந்த நடிகைதானே?

கடம்பவன குயில் said...

// " நீ எப்பத்தான் ஒழுங்கா வேலைக்குப் போயிருக்க? வேலைக்குப் போகாமா இருக்க இப்படி ஒரு சாக்கு ! " அப்படின்னு திட்டினான். எனக்கு செம கோவம் வந்திருச்சு. உடனே அவன் மூஞ்சியப் பாத்துக் குத்திட்டேன்! மூக்கெல்லாம் ரத்தமா ஒழுகுச்சு!//

அய்ய்....செல்வாக்கு கூட கோபமெல்லாம் வருமா என்ன?

அட.... செல்வாக்கு வர கோபத்தப்பாருங்கப்பா...

Mohamed Faaique said...

செல்வாவா கொக்கா....?

நிரூபன் said...

நாட்காட்டியில் தனது ராசிக்கான பலனைப் பார்த்தவுடன் இன்று வேலைக்குச் செல்வதில்லை என்ற முடிவிலிருந்தார் செல்வா!//

சும்மாவே வேலைக்குப் போக கள்ளம், இதுல நாட்காட்டி ராசி பலன் வேறையா;-)))

நிரூபன் said...

" அப்படின்னா காலண்டர்ல போட்டிருக்கறது யாரோ ஒருத்தருக்குத்தான் நடக்குமா ? அப்புறம் எதுக்கு அத நம்புற ? "//

சமுதாயத்தில் மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ளோருக்கு ஒரு தர்ம அடியாக இந்த நகைச்சுவை உள்ளது.

Unknown said...

பாராட்டு