Friday, June 3, 2011

சரியான எடை!


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்வா வீட்டில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.  

சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாயார் சிறிது நேரம் கழித்து செல்வாவை அழைத்து கேஸ் தீர்ந்துவிட்டதாகவும் , அருகில் இருக்கும் பாரத் கேஸ் விற்பனையகத்திற்குச் சென்று வாங்கிவருமாறும் கூறினார். மேலும் கேஸின் எடை அளவினை சோதனை செய்து வாங்கிவருமாறும் கூறினார்.

செல்வாவும் காலியான கேஸ் ட்ரம்முடன்  விற்பனையகத்திற்குச் சென்றார். சிறிது நேர காத்திருப்பிற்குப் பின்னர் அவருக்கு புதிய கேஸ் ட்ரம் கிடைத்தது. அதன் எடையை சோதனை செய்யவேண்டும் என்று கூறிய செல்வா அங்கிருந்த எடைக்கல்லின் மீது வைத்து எடயினைச் சரிபார்த்தார்.

நிரப்பப்பட்ட ட்ரம்மின் எடை 29.4 KG எடை வந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்த செல்வா காலி ட்ரம்மின் எடை 15.2 KG எனவும் அதில் நிரப்பப்பட்டுள்ள கேஸின் எடை 14.2 KG எனவும் அறிந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது தாயார் 

" இங்க இருக்கிற கேஸ் எடுத்துட்டு வரதுக்கு இவ்ளோ நேரமாடா ? " என்றார்.

அதற்கு செல்வா " இல்லமா , நீ எடை செக் பண்ணி வாங்கிட்டு வரச்சொன்னதால முதல்ல மொத்தமா எடைபோட்டேன் , அப்புறம் ட்ரம் எவ்ளோ எடைன்னு தெரிஞ்சிக்க உள்ள இருக்குற கேஸ் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டுட்டு மறுபடியும் எடை போட்டேனா அதான் லேட் ஆகிருச்சு! " என்றார்.

23 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஐ.. வடை..

அர்ஜுன் said...

உனக்கு மட்டும் எப்படி மச்சி ஆண்டவன் இவ்ளோ அறிவ குடுத்தான்..

Madhavan Srinivasagopalan said...

//அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்வா வீட்டில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார். //

1) சனிக்கிழமையின்னா டி.வி பாக்க மாட்டீங்களோ ?
2) on பண்ணிய இல்லா off பண்ணிட்டா ?
----------
இடப்பட்ட பணியை செய்வெனச் செய்த செல்வா வாழ்க..
--------------

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்வா வீட்டில் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்தார்.
//

மிச்ச நாள் பார்க்க மாட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாயார் சிறிது நேரம் கழித்து செல்வாவை அழைத்து கேஸ் தீர்ந்துவிட்டதாகவும் , அருகில் இருக்கும் பாரத் கேஸ் விற்பனையகத்திற்குச் சென்று வாங்கிவருமாறும் கூறினார்.//

ஞாயிறு அன்று கேஸ் கம்பனி திறந்திருக்காதே?

Speed Master said...

வந்தேன்=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

சௌந்தர் said...

உனக்கு சாப்பாடு போடாம பட்டினி போடனும்

நிரூபன் said...

ஆப்பிசில் ஆணி பாஸ், இரவு வந்து கருத்துக்களைப் பகிர்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

எந்த செல்வா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ இதுதான் எடை போடுறதா....? அப்போ ஒரு ஆள எடை போடுறதுன்னு சொல்றாங்களே....அதுக்கும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாயார் சிறிது நேரம் கழித்து செல்வாவை அழைத்து கேஸ் தீர்ந்துவிட்டதாகவும் , அருகில் இருக்கும் பாரத் கேஸ் விற்பனையகத்திற்குச் சென்று வாங்கிவருமாறும் கூறினார்.//

ஞாயிறு அன்று கேஸ் கம்பனி திறந்திருக்காதே?//////

கண்டுபுடிச்சிட்டாருய்யா பெரிய கெவர்னரு......

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவி கொல்லுரான்யா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

நீ பெரிய அறிவாளின்னு அனுப்பிருக்காங்களே ஐயோ பாவம் அம்மா...

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா சிலிண்டரை தலையில் வச்சிதானே கொண்டு போனே...???

சென்னை பித்தன் said...

ஆகா!பயங்கர அறிவாளி போல?!

கடம்பவன குயில் said...

ஒவ்வொரு நாளும் உங்கள் அறிவின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அறிவாளி செல்வா வாழ்க!வாழ்க!

Mohamed Faaique said...

இதுக்கு பிறகு செல்வாவை கடைத்தரு பக்கம் கண்டால் பிச்சு புடுவேன் பிச்சு.......

FOOD said...

நல்லாத்தான் எடை போட்டுருக்காக!

நிரூபன் said...

மாப்பிளை உட்கார்ந்து யோசிப்பியா?
எடை போட்டுப் பார்க்கிறீங்களே...
ரொம்ப கலக்கல் சகா.

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. இன்னுமா உங்ககிட்ட வேலை சொல்றாங்க.. :-)

jaisankar jaganathan said...

செல்வா கதையில சண்டே கூட எல்லா ஆபீஸும் வேலை செய்யும்

மனசாட்சி said...

என்ன நக்கலா?