Thursday, March 29, 2012

லிட்டருக்கு 512 கி.மீ

செல்வாவிற்கு இருசக்கர வாகனம் ஒன்று வாங்க வேண்டுமென்பது நீண்ட நாளைய கனவு. தன் கனவு எப்பொழுது நிறைவேறுமென்று காத்திருந்தார்.

அவர் வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் அவரது தந்தை புதிதாக இருசக்கர வாகனம் வாங்கித்தர இசைந்தார்.

செல்வாவும் இருசக்கர வாகன விற்பனையகத்திற்குச் சென்று தனக்குப் பிடித்த வண்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதைப் பற்றிய சில சந்தேகங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் அது ஒரு லிட்டர் பெட்ரோலில் எத்தனை கி.மீ செல்லும் என்ற கணக்கையும் கேட்டார்.

“ நம்ம ரோட்டுக்கு லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் கிடைக்கும்!” இது விற்பனையாளர்.

“ எப்படி அத டெஸ்ட் பண்ணுறது ? “

“ இப்ப டெஸ்ட் பண்ண முடியாதுங்க , வண்டிய ரிஜிஸ்டர் பண்ணின அப்புறம் மீட்டர் மாட்டிருவோம். அப்போ நீங்க பெட்ரோல் ஊத்தும் போது வண்டி எவ்ளோ கி.மீ ஓடிருக்குனு எழுதி வச்சுக்கங்க. மறுபடி பெட்ரோல் தீர்ந்து போகும்போது எவ்ளோ கி.மீ ஓடிருக்குனு பார்த்தா ஒரு லிட்டருக்கு எத்தன கி.மீட்டர் மைலேஜ் கொடுக்குதுனு தெரிஞ்சிக்கலாம்! “

“ இல்லைங்க, எனக்கு மீட்டர் மாட்டுறதுக்கு முன்னாடியே தெரிஞ்சாகனும்!”

” அப்படின்னா ஒரு லிட்டர் பெட்ரோல் ஊத்திக்கங்க, உங்களுக்கு வழக்கமா தெரிஞ்ச இடங்களுக்கு, அதாவது எத்தன கி.மீட்டர் தூரம்னு தெரிஞ்ச இடங்களுக்குப் போயிட்டு வாங்க. இத வச்சு எத்தன கிலோ மீட்டர்னு மைலேஜ் கொடுக்குதுனு கண்டுபிடிச்சிடலாம்!”

செல்வாவிற்கு இந்த யோசனை சரியென்று படவே இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டார்.

ஒருவாரம் கழிந்திருந்தது. செல்வா மிகுந்த ஆச்சர்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருசக்கர வாகனம் வாங்கிய விற்பனையகத்திற்கு வந்திருந்தார்.

செல்வாவின் மகிழ்ச்சியைக் கண்ட விற்பனையாளருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. மகிழ்ச்சிக்கான காரணம் என்னவென்று கேட்டார்.

“ என்னோட வண்டி, நீங்க சொன்னத விட அதிக மைலேஜ் கொடுக்குதுங்க!” ஆச்சர்யம் விலகாமல் செல்வா.

“ எவ்ளோ கொடுக்குது?”

“ லிட்டருக்கு 512 கி.மீ..!”

” என்ன? 512 கிலோ மீட்டரா? வாய்ப்பே இல்லையே? எத்தன லிட்டர் பெட்ரோல் ஊத்துனீங்க? “

“ ஒரே லிட்டர்தாங்க!”

“ உண்மையாவா சொல்லுறீங்க? நம்பவே முடியலையே ?”

“ சத்தியமாங்க.. ஒரு லிட்டர் பெட்ரோல் ஊத்தினதுக்கு அப்புறம் இந்த வாரம் முழுக்க எங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்துட்டு இருக்கேன். இன்னும் பெட்ரோல் தீரல. எங்க ஆபீசு எங்க ஊர்ல இருந்து 50 கி.மீ. அப்படின்னா ஒரு நாளைக்கு நூறு கி.மீட்டர் கணக்காகுது. அப்போ அஞ்சு நாளைக்கு 500 கி.மீட்டர் ஆச்சுல. பஸ்ல போனத மட்டும் சேர்த்துக்கிட்டேன். சனிக்கிழமை ட்ரெயின்ல வேற ஒரு ஊருக்குப் போனேன் அதையும் சேர்த்துக்கனுமா ? “ என்று செல்வா ஆர்வம் பொங்கக் கேட்டார்.

விற்பனையாளர் கடுங்கோபத்துடன் முறைக்கத் தொடங்கினார்.

13 comments:

மாலுமி said...

இந்திய ஜனாதிபதி கிட்ட சொல்லி உன் பேர டெல்லி செங்கோட்டை கல்வெட்டுல பொறிக்க சொல்லுறேன்............ராஸ்கல் :)

maithriim said...

கொல்றீங்களே!! :)))
amas32

Madhavan Srinivasagopalan said...

// 70 கி.மீ மைலேஜ் கிடைக்கும்! //

கிலோ மீட்டர்னு சொன்னதுக்கப்புறம் அதெப்படி மைலேஜ் ஆகும்..
1 மைலேஜ் = 1.6 கிலோமீட்டரேஜ்

ஐயைய செல்வாக்கு கண்வெர்ஷனே தெரியல..
(70 km / l = 43.75 mileage (miles / l )

Prabu Krishna said...

:-)

Prabu Krishna said...

// gunu kumar said...
Great post, you have pointed out some superb details, I will tell my friends that this is a very informative blog thanks.
IT Company India//

தம்பி ஊருக்கு புதுசு போல. நடத்துங்க.

நாய் நக்ஸ் said...

arumai...selva....
super...

ஹாலிவுட்ரசிகன் said...

செல்வாக்கு மட்டும் ஏங்க இப்படியெல்லாம் தோணுது?

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா ! நல்ல நகைச்சுவை !

ரகளை ராஜா said...

இதெல்லாம் எப்ப பாஸ் புக் ஆ வெளியிட போறீங்க...
ஆவலுடன் எதிர்பார்கிறோம்....
இப்படிக்கு
அகில உலக செல்வா ரசிகர் மன்ற தலைவர்.. :))

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/Tamil-Stories.html) சென்று பார்க்கவும். நன்றி !

வெற்றிவேல் said...

இந்த வருட சிரிப்பு சிகாமணி விருது தங்களுக்குத் தான் நண்பரே...

Unknown said...

nalla erukkungaa unga store

Unknown said...

kandippa neenga rj avingagana