செல்வாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி செல்வாவின் அறிவாளித்தனத்தால்(?) சண்டைகள் ஏற்படுவது வழக்கமே.
செல்வாவும் எவ்வளவோமுறை தனது அறிவாளித்தனத்தை வெளியில் காட்டிக்கொல்லாமலிருக்க முயன்றுள்ளார். ஆயினும் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதும் உண்டோ ? என்பதுபோல அவரது அறிவின் ஒளிக்கிரணங்கள் வெளிப்பட்டேவிடுகின்றன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர் ஒருவர் செல்வாவின் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று செல்வாவின் பெற்றோர் வெளியூருக்குச் சென்றிருந்தனர்.
செல்வாவும் அவரது நண்பரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அதுவரையிலும் செல்வாவின் அறிவாளித்தனம் வெளிப்படாதது குறித்து அவரது நண்பர் மிக்க சந்தோசத்தில் இருந்தார்.
நண்பர் விடைபெறும் தருணமும் வந்தது.
"சரிடா, நான் கிளம்புறேன்!"
" சரி, போயிட்டு வா. அப்புறம் போறதுக்கு முன்னாடி எங்க வீட்டுல முன்னாடி இருக்கிற பூட்ட பூட்டிட்டுப் போய்டு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வெளில போகணும். அப்படி போகும்போது நான் பூட்டுரதுக்கு மறந்தாலும் மறந்துடுவேன்!"
வந்திருந்த நண்பர் கொஞ்சம் எரிச்சலாக " என்ன சொல்லற ? நான் எப்படி பூட்ட முடியும்? பூட்டினாலும் சாவியை என்ன செய்யுறது ?"
" நீ பூட்டிட்டு , சாவிய திண்ணைமேல வச்சிடு. நான் வெளிய வரும்போது எடுத்துக்கிறேன்!"
" எரும, வெளிய பூட்டிட்டா நீ எப்படி வருவ? "
" ஆமாம்ல, இத மறந்தே போயிட்டேன். அப்போ உள்ளே பூட்டிட்டு போய்டு!" என்றதும் அதற்குமேல் அந்த நண்பர் அங்கிருக்கவில்லை.
6 comments:
ரொம்ப நாளைக்கப்புறம் செல்வா ரிடர்ன்ஸ் ... ரசித்தேன். சத்தியமா என்னாலும் முடியல!!
எலேய் தம்பி, நல்லாயிருக்கியாடே...?
ம்ம்ம்ம் திரும்பவும் பழைய வேகத்தோடு வந்திருப்பதற்கு வாழ்த்துகள் மக்கா...
ஹா ஹா ஹா செல்வா... செம்ம...
அருமை.. சிரித்தேன்
//அப்புறம் போறதுக்கு முன்னாடி எங்க வீட்டுல முன்னாடி இருக்கிற பூட்ட பூட்டிட்டுப் போய்டு.//
அடாடா நல்ல ச்சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே....
தீபாவளி வாழ்த்துக்கள் செல்வா - நீண்ட இடைவெளிக்கு பின் அதே வீரியத்துடன்குசும்பு - ரசித்தேன் சிரித்தேன்
Post a Comment