Saturday, January 7, 2012

மீண்டும் ராங் நம்பர்!

செல்வாவின் வீட்டில் புதிதாக செல்போன் வாங்கியிருந்தார்கள். அதுதான் அவர்கள் வீட்டில் வாங்கப்பட்ட முதல் செல்போனும் கூட.

அதனால் செல்வாவிற்கு அதை இயக்கும் விதங்களைப் பற்றியும், அதில் பெயரினைப் பதிந்து வைக்கும் முறை பற்றியும் அவரது சகோதரர் விளக்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அவர்களது தொலைபேசிக்கு புதிய ஒரு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. தொலைபேசியை எடுத்த செல்வா, யாரென்று கேட்டுவிட்டு “ அவர் இல்லைங்களே, இல்ல, ஆமா! “ என்று சிறிது நேரம் மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

யாருகிட்ட இப்டி குழப்பமா பேசுறான் என்று நினைத்த அவரது சகோதரர் செல்வாவிடமிருந்து தொலைபேசியை வாங்கி யாரென்று கேட்டார். பின் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு “ ராங் நம்பர்ங்க “ என்று அழைப்பினைத் துண்டித்தார்.

 “ ஏன்டா, அவுங்கதான் வேற யாரோ வேணும் கேக்குறாங்கள்ல, ராங் நம்பர்னு சொல்லிட்டு கட் பண்ண வேண்டியதுதானே?”

“ அதான் அதுல ராங் நம்பர்னு வரலையே ? அப்புறம் எப்படி ராங் நம்பர்னு சொல்ல? “

“ராங் நம்பர்னு பேரெல்லாம் வராது, நாமதான் தெரிஞ்சிக்கனும்!”

”அதுக்கு எங்கிட்ட ஐடியா ஒரு சூப்பர் இருக்கு ? இனிமேல் ராங் நம்பர்ல இருந்து போன் வந்தா ஈசியா கண்டுபிடிச்சிடலாம்! “ என்று சொடுக்குப் போட்டார் செல்வா.

”அப்படியெல்லாம் எதுவும் முடியாது, போனே வராத மாதிரி எதாச்சும் பண்ணிவச்சிடாத?” என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு அதே போன்றொரு தவறான அழைப்பு வந்திருந்தது. அப்பொழுதும் செல்வாதான் அழைப்பினை ஏற்றது. இந்த முறையும் முன்பைப் போலவே “ யாரு, அவரு இல்லை, அவரும் இல்லை “ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்.

சந்தேகப்பட்டு தொலைபேசியை வாங்கிய அவரது சகோதரர் அது ஒரு தவறான அழைப்பென்பதைக் கண்டுகொண்டு அழைப்பினைத் துண்டித்தார்.

“ ஏன்டா, ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா ? இது ராங் நம்பர் “ என்றார்.

” இல்ல,எனக்கு நல்லா தெரியும்; அது ராங் நம்பர் இல்லை!

“ என்ன நல்லா தெரியும் ? “

”இரு, இப்ப கண்டுபிடிக்கிறேன் “ என்றவர் செல்போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணிற்கு தொடர்புகொண்டார்.

தனது பெயரைச் சொல்லிவிட்டு தன்னைத் தெரியுமா என்று கேட்டார். எதிர்முனையிலிருந்து “ இல்லைங்க, இது ராங் நம்பர் “ என்று பதில் வந்து, இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தனது சகோதரரைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்துவிட்டு,

“கொஞ்சநாள் முன்னாடி நம்ம போனுக்கு ராங் நம்பர்ல இருந்து கால் வந்துச்சுல்ல, அப்பவே அத ராங் நம்பர்னு சேவ் பண்ணி வச்சிட்டேன். இப்ப கூட அவுங்களுக்குத்தான் போன் பண்ணினேன். அவுங்களே ராங் நம்பர்னு சொன்னாங்க. ஆனா  இப்ப வந்தது வேற நம்பர்தானே ? அப்புறம் இது எப்படி ராங் நம்பர் ஆகும் ? “ குழப்பமாகக் கேட்டார் செல்வா.


41 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கதைய படிக்க வர்ற நாங்கதான் ராங் மெம்பெர்ஸ் :(((

ப.செல்வக்குமார் said...

பாவம்ல நீங்க :)

மனசாட்சி said...

இப்படி அநியாயத்துக்கு அறிவாளியா இருந்து எங்க உசிர எடுக்கபடாது ஒக்க்க்க்க்க்க்கே..........

NAAI-NAKKS said...

Selva........

Eppa
niruthuva......????????????

jaisankar jaganathan said...

செல்வா கதை அருமை.உனக்கு கிட்னி சூப்பரா வேலை செய்யுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல எது ராங் நம்பர், உன் நம்பரா, அவங்க நம்பரா?

dheva said...

நீ ரொம்ப ராங்கா போற தம்பி....

ஹி ஹி ஹி...!

நல்லா இருக்கு ராசா!

Madhavan Srinivasagopalan said...

That's the beaty of Indian Railways..
-----

நாங்களும் வாய்க்கு வந்தத ஒளருவோமிள்ள..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

ப.செல்வக்குமார் said...

@ மனசாட்சி :

அப்ப நியாயத்துக்கு அறிவாளியா இருந்தா பரவால்லைங்களா ?

ப.செல்வக்குமார் said...

@ நாய் - நக்ஸ் :

தெரியலைங்க..

ப.செல்வக்குமார் said...

@ ஜெய் சங்கர் :

நன்றிணா :))

ப.செல்வக்குமார் said...

@ ப.ரா :

முதல்ல அவுங்களது, ரண்டாவது என்னோடது :))

ப.செல்வக்குமார் said...

@ தேவா :

வாங்கணா, ரொம்ப நன்றி :)))

ப.செல்வக்குமார் said...

@ மாதவன் :

மணி 4.28 ஆச்சுணா!

ப.செல்வக்குமார் said...

@ கவிதை வீதி :

:)

மனசாட்சி said...

ப.செல்வக்குமார் said...
@ மனசாட்சி :

அப்ப நியாயத்துக்கு அறிவாளியா இருந்தா பரவால்லைங்களா ? //

பரவா இல்ல - யோவ் அதுக்குன்னு எங்க உசுரை ஏன்யா அவ்வ்வ்வ்வ்வ்

Mohamed Faaique said...

யாருப்பா அது??? ராங்’கான ஆளுக்கே ராங் கால் போட்டது????

ஹாலிவுட்ரசிகன் said...

நீங்க “ராங்”கா இருந்தாலும் உங்க கதை ரைட்டா இருக்கு.

ப.செல்வக்குமார் said...

@ மனசாட்சி :

விடுங்க, விடுங்க! இதுக்கெல்லாமா அழுறது ? :)

ப.செல்வக்குமார் said...

@ Faaique :

நீங்க யாரச் சொல்லுறீங்க ?

ப.செல்வக்குமார் said...

@ ஹாலிவுட் ரசிகன் :

நன்றிங்க!

மாணவன் said...

ஆரம்பத்துலேருந்தே ராங்கா போய்ட்ட்ருக்கு இது சரியில்ல... :-)

ராங் நம்பர் சூப்பர் செல்வா... இதுபோல இன்னும் நிறைய ராங் நம்பருக்கு கால் பண்ணி பேசுங்க! :-)

MANO நாஞ்சில் மனோ said...

”அதுக்கு எங்கிட்ட ஐடியா ஒரு சூப்பர் இருக்கு ?//

டேய் என்னாது இது...?

MANO நாஞ்சில் மனோ said...

இதை படிக்க வச்சி எங்களை ராங் ஆக்குறியே முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

மனசாட்சி said...
இப்படி அநியாயத்துக்கு அறிவாளியா இருந்து எங்க உசிர எடுக்கபடாது ஒக்க்க்க்க்க்க்கே.......//

உயிரை ஒரேயடியா எடுத்தா பரவாயில்லையே, கொஞ்ச கொஞ்சமால்லாய்யா எடுக்குறான் பன்னாடை....

MANO நாஞ்சில் மனோ said...

உன் அண்ணன் இடத்துல நான் இருந்துருந்தா முதல் போன் வந்தப்பயே`மரத்துல கட்டி வச்சி தோலை உரிச்சிருப்பேன் ம்ஹும்...

ப.செல்வக்குமார் said...

@ மாணவன் :

கண்டிப்பா. உங்க நம்பர முதல்ல ராங் நம்பரா மாத்துங்க. உங்களுக்கு போன் பண்றேன் :))

ப.செல்வக்குமார் said...

//இதை படிக்க வச்சி எங்களை ராங் ஆக்குறியே முடியல...//

ஏதோ என்னால முடிஞ்சது..

ப.செல்வக்குமார் said...

//உன் அண்ணன் இடத்துல நான் இருந்துருந்தா முதல் போன் வந்தப்பயே`மரத்துல கட்டி வச்சி தோலை உரிச்சிருப்பேன் ம்ஹும்...//

போன் வரதுக்கு நான் என்ன பண்ண முடியும் ?

கடம்பவன குயில் said...

பாவம் செல்வா! எல்லோருக்கும் செல்வா மேல பொறாமை. ராங்காலை எவ்வளவு புத்திசாலித்தனமா டீல் பண்ணிருக்காரு. பாராட்டாம.....


ராங்கால்ல எதுனா ஃபிகர் மாட்டினாலும் மாட்டும். நீங்க கலக்குங்க செல்வா..

FOOD NELLAI said...

ரொம்ப தெளிவு.

வெங்கட் said...

என்னா அறிவு..!! என்னா அறிவு..?!!

ராஜி said...

போன் வாங்கி குடுத்த உங்க அப்பாவை சொல்லனும்

சேலம் தேவா said...

என்னா அறிவு..!! என்னா அறிவு..?!!
repeat..

பொன்.செந்தில்குமார் said...

என்ன அறிவு... என்ன அறிவு...
உனக்கு ஏம்ப்பா இந்த கொலவெறி....படிக்க படிக்க் உடம்பெல்லாம் இரத்தம் வடியுதே...

Anonymous said...

Today was a complete loss, but oh well.
Good luck with all you do and continue to inspire those who read your story. Well done.. this crystal clear
[url=http://pogowaso.freewebspace.ws/I-z-8Q-b-556.html]expedia maps and directions[/url]

Best regards from regular visitor of your site. ;)

சேகர் said...

நல்ல பதிவு..

கோவை நேரம் said...

சாரி..ராங் பதிவுக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன்..

ARUN PALANIAPPAN said...

ராங் நம்பருக்கே ராங் காலா?
இருந்தாலும் கதை சூப்பர்!

Anonymous said...

dai Porambookku poi velaya paaruda