Saturday, December 24, 2011

வேண்டுதல்

செல்வா சுயதொழில் ஆரம்பித்திருந்த சமயம்.

தனது தொழில் சிறக்க என்னவெல்லாம் செய்யலாமோ, நண்பர்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்களோ அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் செய்துவந்தார்.

இப்படித்தான் ஒருமுறை உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் திட்டமலை முருகன் கோவிலை பௌர்ணமி நாளில் நூற்றியெட்டு முறை சுற்றி வந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார்.

அதை உண்மையென நம்பிய நமது செல்வா அதே போல ஒரு பௌர்ணமி நாளில் சுமார் 300 அல்லது 400 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மலையை நூற்றியெட்டுமுறை சுற்றிவந்தார்.

தனது தொழில் எப்படியாவது சிறப்பாக நடைபெற வேண்டுமென நினைத்ததால் அவருக்கு அந்த மலையைச் சுற்றுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.

மலையைச் சுற்றி முடித்துவிட்டு கடவுளிடமும் வேண்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.

மறுநாள் செல்வாவைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த நண்பர், செல்வா மொட்டைமாடியில் நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.

ஒருவேளை மலையைச் சுற்றியதால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அழுகிறாரோ என்று நினைத்துக்கொண்டு ஏன் அழுகிறார் என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.

“ நான் நூத்தியெட்டுத் தடவ சுத்தி முடிச்சிட்டு கடைசியா முருகன்கிட்ட வேண்டிக்கும்போது என்ன வேண்டிக்கிறதுனு மறந்துட்டு ’ கணக்கு டீச்சர் என்னைத் திட்டவே கூடாதுனு’ வேண்டிக்கிட்டேன்” என்றார் சோகமாக.

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே செல்வாவிற்கு கணக்கு வராது என்பதால் கணக்கு ஆசிரியர்களைப் பார்த்தால் எப்பொழுதுமே பயம்தான்.

” அதனால என்ன, மறுபடி உன்னோட தொழில் நல்லா வரணும்னு வேண்டிக்க வேண்டியதுதானே ? “

“ இல்ல, மலைய சுத்தி வந்த உடனே முதல்ல என்ன வேண்டிக்கிறோமோ அதுதான் நடக்குமாமா! “ 

“அடடா, கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா? சரி விடு. இன்னொரு தடவ சுத்தி மறுபடி வேண்டிக்கலாம்!” என்று சமாதானப்படுத்தினார் நண்பர்.

சிறிது நேரம் அழுகையை நிறுத்திய செல்வா மீண்டும் அழத்தொடங்கினார்.

இப்பொழுது எதற்கு அழுகிறார் என்று குழம்பிய அவரது நண்பர் “ மறுபடி எதுக்கு அழுற ? கால் வலிக்குதா ? “ என்றார்.

“இல்ல, கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுனு வேண்டுனதுக்குப் பதிலா கணக்கு டீச்சர் அடிக்கக் கூடாதுனு வேண்டியிருக்கலாம். அதயும் மறந்துட்டேன்! “

செல்வாவின் நண்பர் கடுப்பாகிவிட்டார்.

“எரும, உனக்கு ஏழு கழுத வயசாகுதுல. இப்ப என்ன பள்ளிக்கூடத்துலயா படிச்சுட்டு இருக்க, கணக்கு டீச்சர் வந்து அடிக்கிறதுக்கு ? கணக்கு டீச்சர் அடிச்சா என்ன ? கொஞ்சினா உனக்கு என்ன ? “ என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.

“ அதில்ல, என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே.

22 comments:

Vadivel M said...

கலக்கல் கதை!,கடைசி வரியால்!

செல்வா said...

@ வடிவேல் :

நன்றிணா :))

classic k7 said...

சூப்பரப்பு .. ஆனா கல்யானம் ஆனவங்களுக்கு பிடிக்கும்ன்னு சொன்ன பாரு ஒரு வார்த்த , அதுல நிக்கற ..
:-)

முத்தரசு said...

கதை அருமை அதுக்கு பன்ச் கடைசி வரிகள்

சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேடே செல்வாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு போல?

செல்வா said...

@ CLASSIC :
நன்றிணா :))

செல்வா said...

@ மனசாட்சி :

ரொம்ப நன்றிங்க :)

செல்வா said...

@ ப.ரா :

ஒரு கதை எழுதுறது தப்பா தப்பா தப்பா ? :))

எஸ்.கே said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!

செல்வா said...

@ எஸ்.கே :

இந்தக் கதை ரமேஷ் அண்ணனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது :))

வெளங்காதவன்™ said...

:-)

#கணக்கு டீச்சரைக் கணக்குப் பண்ணும் செல்வா வாழ்க!!!

நாய் நக்ஸ் said...

:))))))))))

மாணவன் said...

செல்வாவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
:-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரொம்ப நாளைக்கு பிறகு வறார் போல்...

கலக்கு செல்வா..

rajamelaiyur said...

//என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே.

//

அங்கேயும் அப்படிதானா ?

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

Mohamed Faaique said...

லாஸ்ட் பன்ச் செம.... கணக்கு வராது’னு சொல்லிட்டு கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டீங்களே பாஸ்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Madhavan Srinivasagopalan said...

அவியல் சாரி.. சாரி.. அறிவியல் டீச்சர் அடிக்க மாட்டாங்களா ?

உணவு உலகம் said...

பாவம் அந்த கணக்கு டீச்சர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present madam

ராஜி said...

கணக்கு டீச்சர் அடிச்சாங்களான்னு ஒரு பதிவு போட்டுடுங்க செல்வா