செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.
அவரது சொந்த ஊருக்கும் , அவர் பயின்ற கல்லூரிக்கும் நீண்ட தொலைவு என்பதால் கல்லூரிக்குப் பக்கத்தில் தனியாக ஒரு அறை எடுத்துத் தங்கி அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்.
ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.
உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். செல்வாவின் காயங்களுக்கு மருந்து போட்ட மருத்துவர் “ இது வெறிநாய்க் கடியானு சரியா தெரியல, அதனால ஒரு மூனு நாளைக்கு உங்களக் கடிச்ச நாய வாட்ச் பண்ணுங்க, மூனு நாளைக்கு அப்புறம் அது என்னாச்சுனு வந்து சொல்லுங்க” என்று கூறி அனுப்பினார்.
செல்வாவும் மருத்துவர் சொன்னது போலவே அந்த நாயினைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தார்.
மூன்றாம் நாள் மருத்துவமனைக்குச் சென்ற செல்வாவிடம் “ அந்த நாய் எப்படி இருக்குது ? நல்லா வாட்ச் பண்ணுனீங்களா ?“ என்று வினவினார் மருத்துவர்.
” அது ஒன்னும் ஆகல டாக்டர், அப்படியேதான் இருக்குது, என்ன கொஞ்சம் குண்டாகிருச்சு!”
” நல்லவேளை ஒன்னும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும். ஒன்னும் பிரச்சினை இல்லை; நீங்க பயப்படாம போங்க! “ என்றார் மருத்துவர்.
” ஒரே நாய் இரண்டு தடவ சாகுமா என்ன ? “ ஆச்சர்யமாய்க் கேட்டர் செல்வா.
” என்ன சொல்லுறீங்க ? இரண்டு தடவ எப்படிச் சாகும் ? “
“ இல்ல டாக்டர், நீங்க அந்த நாய வாட்ச் பண்ணச் சொன்னீங்கள்ல, அப்பவே நான் அது பின்னாடி போனேன். ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல, அதான் அப்பவே அத கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். இந்த மூனுநாளா செத்துப் போன நாயத்தான் பார்த்துட்டு இருந்தேன். நீங்க மறுபடி செத்துப்போகும்னு சொல்லுறீங்களே, அதான் கேட்டேன்! “
இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!
29 comments:
சூப்பர் நண்பா வி.வி.சி
அடங்கொய்யால
என்ன கொடும செல்வா
தலைப்பு வைக்க டெரரிடம் அனுமதி வாங்கிவிட்டாயா?
@ ஜீவன் :
நன்றிகள்ங்க :))
// Blogger "என் ராஜபாட்டை"- ராஜா said...
என்ன கொடும செல்வா//
அதானே!
// Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தலைப்பு வைக்க டெரரிடம் அனுமதி வாங்கிவிட்டாயா?//
அதான் அங்கே சொன்னேன்ல :))
நல்ல வேளை. செல்வாவ ஒரு யானை கடிக்கல
பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு..?
என்ன கொடும செல்வா
// ethu ellam onume elainga sadrana kudumaithan..
தலைப்பு வைக்க டெரரிடம் அனுமதி வாங்கிவிட்டாயா?//
vanmaiyaga kandikirom...
// செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார். //
அவனா படிப்ப முடிச்சிக்கிட்டா, எப்படி காலேஜில சேத்துக்கிட்டாங்க ?
எலேய் அந்த டாக்டர் வெறி பிடிச்சி உன்னை கடிக்கிறதுக்குள்ளே ஓடிருலேய், சிபி கண்ணாடி மேல சத்தியமா உன்னை பாக்குற இடத்துல நான் கடிச்சி வச்சிருவேன் ஹி ஹி ஹி ஹி...
/ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல, அதான் அப்பவே அத கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன். //
Daiiiiiii....!!!
//நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.//
நாய் இடது கால கடிச்சிருந்தா, டாகுடரு அப்படி சொல்லி இருக்க மாட்டாரு..
செல்வாவும் நாய கொன்னுருக்க அவசியம் இருந்திருக்காது..
//இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!
//
ஓ இப்ப மூனு நாளைக்கு செல்வாவுக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்கனுமா?
நாய்க்கு சொந்தகாரங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டியா? எப்ப காரியம்? :-)
பாஸ்..உண்மைய சொல்லுங்க... நாய நீங்க கொன்னீங்களா??? இல்ல அது உங்கள கடிச்சதுமே செத்துப் போச்சா???
///நல்லவேளை ஒன்னும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும்////
அவரு உங்க ஏரியா டாக்டர் இல்லையா???
சாகா வரம் வாங்கி வந்த நாய் கூட செல்வாவ மோப்பம் பிடிச்சா செத்துப் போகும்’னு டாக்டருக்கு தெரியாது போல...
இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!//////
டாகடர்-ரும் காலியா....????
கொஞ்ச நாளைக்கு நீங்க யார் கண்ணுலயும் படாமா இருங்க....
mmmmmmmmmmmmmmmmmmmmmeeeeeeeeeeeeeyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy!!!!!!!
Kolai veri!!!!!!!!!!!!!!!!!!1
நாய் சாவும் போது என்ன சொல்லுச்சி?
//செல்வா தனது பள்ளிப் படிப்பினை முடித்துக்கொண்டு வெளியூரில் இருந்த கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார்.//
காலேஜ் படிப்பெல்லாம் படிச்சிருக்கீ்ங்களா??? நாங்க என்னவொ 5ம் வகுப்பு பையனாக்கும் செல்வான்னு நினைத்தோம்.
//ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.//
வாட் ஈஸ் திஸ்?? 7 கழுதை வயசுல தெருக்குழந்தைகளுடன் விளையாட்டா?? அதான் நாய்க்கே பொறுக்கல...வந்து கடிச்சிருக்கு..
இதில் பெரிய கொடுமை என்னன்னா...செல்வாவை கடிச்சதால நாய் செத்துப் போச்சே...
அதைவிட பெரிய கொடுமை செல்வாக்கு வைத்தியம் பார்த்த டாக்டருக்கே வெறிபிடிச்சுருச்சே...
வாட் எ டிராஜடி!!!
முடியல.............எப்படில்லாம் யோசிகிறான்கப்பா...
//எஸ்.கே said...
//இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!
//
ஓ இப்ப மூனு நாளைக்கு செல்வாவுக்கு ஒன்னும் ஆகாம பார்த்துக்கனுமா?
//
LOL!
:)))))))))))))))
என்ன கொடுமை சார் இது!...
பகிர்விற்கு நன்றி நண்பரே!
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Post a Comment