உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த செல்வா சோப்பு வாங்குவதற்காக அருகில் இருந்த மளிகைக் கடைக்குச் சென்றார். அங்கு தனக்கு வேண்டிய சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்று தருமாறு கேட்டார்.
கடைக்காரரும் ஒரு சோப்பினை எடுத்துக் கொடுத்துவிட்டுப் பனிரண்டு ரூபாய் தருமாறு கேட்டார்.
“ என்னது? இந்தச் சோப்பு பனிரண்டு ரூபாயா ? எங்க ஊருல எல்லாம் ஆறே ரூபாய்தான்! “ என்று பேரம்பேச நினைத்தார் செல்வா.
வழக்கமாக எந்தப் பொருளையும் பேரம் பேசி வாங்க வேண்டும் என்று அவரது தந்தை அறிவுறுத்தியிருப்பதால் எந்தப் பொருளைப் பார்த்தாலும், அவர்கள் சொல்லும் விலையில் பாதி விலைக்குக் கேட்பது செல்வாவின் வழக்கம். அந்தப் பொருளை முன்னர் வாங்கியிருக்காவிட்டாலும் கூட!
“ ஆறு ரூபாய்க்கெல்லாம் இந்தச் சோப்பு வராது தம்பி, அப்படி எந்தக் கடைல ஆறு ரூபாய்க்கு விக்குறாங்கனு காட்டினா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன்! “ என்று கடைக்காரர் கேட்டதும் செல்வாவிற்கு மேலே என்ன சொல்லுவது என்று தெரியாமல் அசட்டுத் தனமாக ஒருமுறை சிரித்துவிட்டுச் சோப்பை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
பிறகு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கடைக்கு வந்து அதே சோப்பினை மீண்டும் வாங்கினார் செல்வா. அப்பொழுதும் தங்கள் ஊரில் ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பு விற்கப்படுவதாகக் கூறினார்.
இந்தமுறை கடைக்காரருக்குக் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அவருக்கு அந்தச் சோப்பை மொத்தமாக விற்பவரே ஒரு சோப்பின் விலை பத்து ரூபாய்க்குத்தான் விற்கிறார். ஆறு ரூபாய்க்கு அந்தச் சோப்பினை யாராலும் விற்கவே முடியாது என்பதால் “ ஏன் தம்பி அடிக்கடி வந்து பொய் சொல்லுற ? “
“ இல்லீங்க, எங்க ஊருல சத்தியமா இந்தச் சோப்ப ஆறு ரூபாய்க்குத்தான் விக்குறாங்க! “
“ நீ சொல்லுறது மட்டும் உண்மையா இருந்துட்டா உனக்கு நூறு சோப்பு இலவசமா தரேன், அந்தக் கடையக் காட்டு!” என்று செல்வாவிடம் இந்த முறையும் அந்தக் கடைக்காரர் கேட்டார். செல்வாவும் அந்தக் கடையைக் காட்டுவதாக ஒப்புக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குக் கிளம்பினார்.
செல்வாவின் ஊருக்கு வந்ததும் அந்தக் குறிப்பிட்ட கடைக்குச் சென்று அங்கே வாங்கிய அதே சோப்பினை வாங்குமாறு கடைக்காரரிடம் கூறினார் செல்வா.
கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட சோப்பின் பெயரைச் சொல்லி ஒன்றை வாங்கிக்கொண்டு அதன் விலையைக் கேட்டார். அதன் விலை ஆறு ரூபாய் என்றதும் கடைக்காரருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
பின்னர் ஊருக்குத் திரும்பி ஏற்கெனவே செல்வாவிடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி நூறு சோப்புகளை இலவசமாகக் கொடுத்துவிட்டு, மீண்டும் அந்த ஆறு ரூபாய்க்கு சோப்பு விற்கும் கடைக்குச் சென்று அவர்களால் எப்படி இவ்வளவு குறைந்த விலைக்கு அதுவும் நஷ்டத்திற்கு விற்க முடிகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக செல்வாவுடனேயே கிளம்பினார் அந்தக் கடைக்காரர்.
அந்தக் கடையை அடைந்ததும், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையனிடம் “ தம்பி உங்க ஓனர் எங்கப்பா ? “ என்றார் கடைக்காரர்.
“ உங்க பக்கத்துல நிக்குறாரு பாருங்க! “ என்று செல்வாவைக் கையைக் காட்டினான் அந்தப் பையன்.
கடைக்காரருக்கு மீண்டும் ஆச்சர்யம். அதைவிட எப்படி பத்து ரூபாய்ச் சோப்பினை ஆறு ரூபாய்க்கு விற்க முடிகிறது என்ற குழப்பம் வேறு.
“ எப்படி உங்களால பத்து ரூபா சோப்ப ஆறு ரூபாய்க்கு விற்க முடியுது ? உங்க டீலர் ரொம்ப குறைஞ்ச விலைக்குத் தராரா?“
“ ஆமா, எங்க டீலர் இலவசமா தரார்! “ என்றார் செல்வா.
“ அது யாருங்க, எனக்கும் அறிமுகப் படுத்தி வையுங்க. நானும் வாங்கிக்குவேன்ல! “
” அந்த டீலரே நீங்கதான்!” என்றார் செல்வா.
19 comments:
sema sema sema :)
அந்த சோப்புக் கடைக்காரர் யாரு செல்வா பாபு மக்காவா? :-)
அப்ப சோப்பு கடைக்காரருக்கு இன்னேரம் சீப்பு தேவைப்பட்டிருக்காது
:))))))))))))))))))
:-)
கடைக்காரன் செத்தாம்லேய், சனிபெயர்ச்சி உனக்கு நல்லது செஞ்சிருக்கு ஹி ஹி...!!!
நீ ஆணியே புடுங்காம சம்பாதிக்கும் வழியை சொல்லிவிட்டாய் தம்பி...!!!
கொய்யால்லல.... உன்னை சும்மாவா விட்டுட்டு போனான்????
:-)))))))))))))
செம நக்கல் ...
நல்ல வேலை செல்வா PAY AND USE--TOILET-க்கு
போகவில்லை .....
அப்படி போயேருந்தால்?????
:-)...
சோப்ப வெச்சே ஆப்பா?
//// NAAI-NAKKS said...
நல்ல வேலை செல்வா PAY AND USE--TOILET-க்கு
போகவில்லை .....
அப்படி போயேருந்தால்?????/////
போயிருந்தா என்ன, பாதி கக்காவோட விரட்டி விட்டிருப்பாங்க.......
செல்வா.. டாஸ்மாக் ஏதும் ஓப்பன் பண்ற ஐடியா இருக்கா? இருந்தா சொல்லு நானும் மாலுமியும் வர்றோம், இதேபோல பாதிவிலைக்கு தா :-)
Ha! Ha!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
@ கடைக்குட்டி :
நன்றி மச்சி :)
@ மாணவன் :
இல்லணா, அவர நான் ஏமாத்தமாட்டேனாக்கும்!
@ எஸ்.கே :
நன்றிணா.
@தினேஷ்குமார் :
ஏன் ஏன் ?
@ரமேஷ் :
நன்றிணா :))
@ வெளங்காதவன் :
நன்றினா..
@ மனோ :
ஆமா, எனக்கு சனிப்பெயர்ச்சி நல்லது :)
@ பெம்முகுட்டி :
அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லவர் போல, அதானால அப்படியே போயிட்டாரு..
@ ராஜபாட்டை ராஜா :
நன்றிங்க :)
@ நாய் நக்ஸ் :
ஹி ஹி !
@ பதிவுலகில் பாபு :
நன்றிங்க.
@ ப.ரா :
சோப்பு இலவசமா குடுக்குறாங்கலேன்னு :))
@ வைகை :
நான் நெம்ப நல்லவனாக்கும் :))
@ ஃபுட் நெல்லை :
நன்றிகள் சார்.
@திண்டுக்கல் தனபாலன் :
ரொம்ப நன்றிங்க :))
bad donkey
small wall
Post a Comment