செல்வாவின் ஊரிற்கு ஒரு வினோதமான மனிதர் வந்திருந்தார். தான் மட்டுமே சிறந்த அறிவாளி என்றும் தன்னைவிடச் சிறந்த ஒருவர் இந்த உலகத்திலேயே இல்லை என்றும் கூறிக்கொண்டார்.
ஆனால் செல்வாவின் அறிவுத்திறனை அறிந்திருந்த அந்த கிராமத்து மக்கள் செல்வா தான் சிறந்த அறிவாளி என்று கூறினர்.
இதனால் எரிச்சலடைந்த அந்த மனிதர் செல்வாவைச் சோதனை செய்து பார்த்தால்தான் இதை நம்புவேன் என்று கூறி செல்வாவின் அறிவுத்திறனைச் சோதிக்க ஆரம்பித்தார்.
செல்வாவால் தன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்று நினைத்த அந்த மனிதர் ஏமாற்றமடைந்தார்.
எப்படியாவது செல்வாவைத் தோற்கடித்தே தீர வேண்டும் என நினைத்த அந்த மனிதர் அருகில் இருந்த குழி ஒன்றைக் காட்டி ”இதைத் தூக்கி அந்தக் கிணற்றுக்குள் போட்டால் நீ அறிவாளி என ஒத்துக்கொள்கிறேன்!” என்றார்.
எப்படியும் செல்வா இது முடியாது என்று விலகிவிடுவார் என்று நினைத்தே இதைக் கூறினார்.
ஆனால் செல்வா வழக்கத்தை விட சற்று உற்சாகமாக “ அது ரொம்ப ஈஸிங்க, ஆனா எனக்கு ஒரு நாள் அவகாசம் தரனும் “ என்று கேட்டுக்கொண்டார். மேலும் கிணற்றின் ஆழத்தையும் , குழியின் ஆழத்தையும் அளந்துகொள்ளுமாரு கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மறு நாள் காலையில் அந்தக் குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிவிட்டதாக அந்த மனிதரைக் குழி இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார்.
அவர் சொன்னது போலவே அந்த இடத்தில் குழியைக் காணவில்லை. அந்த மனிதருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதை தான் நம்ப மாட்டேன் என்றும் கிணற்றுக்குள் கிடக்கும் அந்தக் குழியைக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிணற்றை அளந்து பார்த்தால் தெரியும் என்று செல்வா சொன்னதும் உடனே கிணறு அளக்கப்பட்டது. கிணற்றின் ஆழம் நேற்று இருந்ததிலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. ஆச்சர்யப்பட்ட அந்த மனிதர் செல்வா வென்றுவிட்டார் என்று அறிவித்துவிட்டு ” எப்படி அந்தக் குழிய இதுக்குள்ள தூக்கி வீசினீங்க ?“
“ கிணத்துக்குள்ள இருந்து மண்ண வாரி இதுக்குள்ள கொட்டினேன்! “ என்றார் செல்வா.
11 comments:
:))
ஏன் குழிய கிணறு ஆக்கி இருக்கலாமே
நல்ல வேள கெணறே காணாம போகல..........
இது செல்வாவா???
தூள் செல்வா...
வாழுக...
நேற்றிரவு சிரிப்பு போலீஸின் பிறந்தநாளை முன்னிட்டு போன் செய்தேன்...
என்னைக் காறித் துப்பி போனை வைத்துவிட்டார்.....
#சும்மா ஒரு பீலிங்கு...
ada selva ipo maritaru polarukke
Heart Rider
http://vigneshms.blogspot.com
முல்லா கதை மாதிரி ஒரு காலம் செல்வா கதைகளும் பிரபலமாகும். வாழ்த்துக்கள். ;))))))))
தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html
arumai selva
Post a Comment