செல்வாவின் உறவினர் வீட்டில் சிறிது நாட்களுக்கு முன்னர் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் டிஸ் டிவி வாங்கியிருந்தார்கள்.
அவர்களின் வீட்டிற்குச் சென்ற செல்வா அது இயங்கும் விதத்தை மிக ஆச்சர்யமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
தானும் அதுபோல ஒன்று வாங்கவேண்டும் என்று ஆவல் செல்வாவிற்கு எழுந்தது. அதன் விலை விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு அது போன்ற டிஸ் டிவி வாங்கும் அளவு பணம் செல்வாவிடம் சேர்ந்திருந்தது. எப்படியும் வாங்கிவிடவேண்டும் என நினைத்த செல்வா மீண்டும் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று எங்கே வாங்கினார்கள் என்பதையும் தெரிந்துகொண்டு தானும் அது போல வாங்கப் போவதாகக் கூறினார்.
அதை ஆமோதித்த அவரது உறவினர் அவர்கள் வாங்கிய அதே கடைக்குக் கூட்டிச் சென்று டிஸ் ஆண்டனா மற்றும் ரிசீவர் ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தார்.
செல்வாவிற்கு அவற்றைப் பொருத்தத் தெரியாதென்பதால் அவரது உறவினரையே தன் வீட்டிற்கு வந்து பொருத்தித் தருமாறு கேட்டுகொண்டார்.
வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ரிசீவரை டிவிக்கு அருகில் வைத்துக்கொண்டு டிஸ் ஆண்டனாவை வீட்டின் மாடியில் வைத்துவிடலாமா என்று கேட்டார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த செல்வா அருகில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான அறை ஒன்றைச் சுட்டிக்காட்டி அதில் பொருத்தலாம் என்றார்.
” மாடில வச்சா சிக்னல் ரொம்ப தெளிவா கிடைக்கும், இங்க வச்சா அவ்ளோ தெளிவா இருக்காது, அதனால மாடிலயே வைக்கலாம்! “ என்றார் உறவினர்.
“ வெயில்லயும் , மழைலயும் நனைஞ்சா என்னத்துக்கு ஆகுறதுனுதான் அந்த ரூம் கட்டிருக்கேன். அதுக்குள்ள வச்சிடலாம், வெளில வேண்டாம்! “ என்றார் செல்வா.
நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே டிஸ் ஆண்டனாவை வைத்துவிட்டு பிறகு வந்து சரி செய்வதாகக் கூறிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோமென்று ஓடி விட்டார்.
26 comments:
என்ன டிஷ் செல்வா? பிஷ் fry ? சிக்கென் 65 ?
or gobi 65, panneer butter masala?
நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே செல்வாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு *அறை* கொடுத்தார்
// செல்வாவிற்கு அவற்றைப் பொருத்தத் தெரியாதென்பதால் அவரது உறவினரையே தன் வீட்டிற்கு வந்து பொருத்தித் தருமாறு கேட்டுகொண்டார். //
அடேய்... ஒழுங்கா இன்ஸ்டாலேஷன் ஃபீஸ் தந்திருந்தா அந்த பிரச்சனை வந்திருக்காதில்ல..
அப்ப டிவிய கொண்டுபோய் மாடில வைப்பாரா? :))
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ.......
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன டிஷ் செல்வா? பிஷ் fry ? சிக்கென் 65 ///
ஊறுகா...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ......//
அப்ப மேல எது போகும்?
////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ......//
அப்ப மேல எது போகும்?
///////
வயருதான் மேல போகும்.....
//என்ன டிஷ் செல்வா? பிஷ் fry ? சிக்கென் 65 ?//
மனுசன் பிரை..
//நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே செல்வாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு *அறை* கொடுத்தார்
//
ஒளிஞ்சிருந்து பார்த்தீங்களா ?
//அடேய்... ஒழுங்கா இன்ஸ்டாலேஷன் ஃபீஸ் தந்திருந்தா அந்த பிரச்சனை வந்திருக்காதில்ல..//
அவருதான் இன்ஸ்டாலேசனே பண்ணலியே..
// வைகை said...
அப்ப டிவிய கொண்டுபோய் மாடில வைப்பாரா? :))
//
அதுவும் வெயில்ல நனைஞ்சு, மழைல காஞ்சு போகுமே ?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ...../
இல்லனா.. மூன் டைரக்டு...
தங்கள் பொன்னான பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்!
#ஏன்? ஏன்?
ஏன் இப்புடி கொல்லுற அப்பு?
எலேய் நீ உருப்படவே மாட்டியா...?
கோமாளி செல்வா said...
//என்ன டிஷ் செல்வா? பிஷ் fry ? சிக்கென் 65 ?//
மனுசன் பிரை..//
அடிங்கோய்யால இது தெரிஞ்சிருந்தா சத்தியமா உன் கூட வந்துருக்கமாட்டேன் போடாங்....
எத்தனை தடவை உன்னை தூக்கி போட்டு மிதிச்சிருக்கேன் ராஸ்கல் நீ இன்னும் திருந்தலையே...!!!
///MANO நாஞ்சில் மனோ said...
எத்தனை தடவை உன்னை தூக்கி போட்டு மிதிச்சிருக்கேன் ராஸ்கல் நீ இன்னும் திருந்தலையே...!!!
////
எத்தனை தடவைனு சரியா சொல்லுங்க.....
நானும் உங்களைவிட நாலஞ்சு மிதிதான் கம்மியா மிதிச்சிருப்பேன்...
#செல்வா, உன்னைப்பாத்து எல்லாரும் பேதி, ச்சீ பீதி ஆவுறோம்...
//அடிங்கோய்யால இது தெரிஞ்சிருந்தா சத்தியமா உன் கூட வந்துருக்கமாட்டேன் போடாங்...//
அதான் தப்பிச்சிட்டீங்கள்ல.. அப்புறம் ஏன் பயம் ?
//
#செல்வா, உன்னைப்பாத்து எல்லாரும் பேதி, ச்சீ பீதி ஆவுறோம்...
//
விடுங்க விடுங்க.. இதுக்கு போய் கண்ண கசக்கிட்டு...
வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ......//
அப்ப மேல எது போகும்?//
மேலே எது போகும்னு சொன்னா நல்லா இருக்காது, எங்கே காதை கிட்டே கொண்டு வாரும்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீண்ட நேரம் போராடியும் செல்வா ஒப்புக்கொள்ளாததால் எரிச்சலடைந்த அவரது உறவினர் அந்த அறையிலேயே செல்வாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு *அறை* கொடுத்தார்//
இவனுக்கு கன்னத்தில் குடுத்தா ஒன்னும் சரிப்படாது தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிக்கணும், ஆனாலும் திருந்தமாட்டான் ஹே ஹே ஹே ஹே...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது சன் டைரக்டா........? அப்போ டைரக்டா கீழ வந்துடுமெ......//
அப்ப மேல எது போகும்?
///////
வயருதான் மேல போகும்.....//
ஏய் தெளிவா சொல்லி தொலைங்கப்பா டபுள் மீனிங் வருது ஹி ஹி...
hahaha..nice one..
25th vadai enakey enakaa
Post a Comment