Friday, September 16, 2011

எனக்கு பதில் நீ


செல்வா கணிதவியலில் தனது முதுநிலைப் படிப்பினை முடித்துவிட்டு மேற்கொண்டு ஆய்வுப்படிப்பினைத் தொடரலாம் என்று காத்திருந்தார்.

செல்வாவுடன் பனிரண்டாம் வகுப்புவரை படித்த அவரது நண்பர் ஒருவர் அதற்குப் பிறகு தொலைநிலைக் கல்வி மூலமாக இளநிலைக் கணிதவியல் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவரால் தேர்ச்சி பெறவே முடியவில்லை.

செல்வா தனது முதுநிலை கணிதவியல் படிப்பினை முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அவரது நண்பருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது அவருக்குப் பதிலாக செல்வாவை பரீட்சை எழுத அனுப்பலாம் என்பதே அந்த் யோசனை.

செல்வாவிடம் இந்த யோசனையைச் சொன்னதும் முதலில் செல்வா தான் ஆள் மாறாட்டம் செய்ய ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனாலும் நீண்ட நேரம் போராடி செல்வாவை ஒப்புக்கொள்ள வைத்தார் அவரது நண்பர்.

பரீட்சைக்கான நாளும் வந்தது.நடுங்கிக்கொண்டேதான் பரீட்சைக்குப் போனார். ஆனால் எதிர்பார்த்த அளவு அங்கு கெடுபிடி ஏதும் இல்லை. செல்வாவும் மிக்க சந்தோசத்துடன் பரீட்சையை முடித்துவிட்டு மகிழ்வுடன் வெளியே வந்தார்.

மீதமிருந்த நான்கு பரீட்சைகளையும் தானே எழுதுவதாக நண்பனிடம் கூறிவிட்டு எல்லாப் பரீட்சைகளையும் எழுதிக்கொடுத்தார். அவரது நண்பருக்கு செல்வாவின் மீது அளவு கடந்த மரியாதையும் நட்பும் ஏற்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு வெளியான தேர்வு முடிவுகள் அவரது நண்பரை மிக்க கோபத்திற்கு ஆளாக்கியது. ஆம். எல்லாத் தேர்வுகளிலும் தோல்வி என்று வந்திருந்தது. உடனே செல்வாவை அழைத்து “ டேய், என்னடா Exam எழுதின? எல்லாத்திலயும் ஃபெயில்! நீ எழுதினா பாஸ் ஆவேன்னுதான உன்ன எழுதச் சொன்னேன், நீ எல்லாம் எப்படிடா M.Sc படிச்ச ? “

“காலேஜ் போய்த்தான் படிச்சேன்! அதுக்கு இப்ப என்ன ?“

” காலேஜ் போய் கிழிச்ச ? ஒரு பரிட்சை ஒழுங்கா எழுதத் தெரியல. இதுல ... “ என்று வாய்க்கு வந்தவாரு திட்டினார் செல்வாவின் நண்பர்.

செல்வாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. ” உனக்கு என்னதாண்டா பிரச்சினை ? இப்ப எதுக்கு என்னைய திட்டுற ? நீ சொன்ன மாதிரி தான நான் பண்ணினேன்“

“ நான் சொன்ன மாதிரி பண்ணுனியா ? “

“ ஆமா , ’என்ன மாதிரியே எழுதிட்டு வா னு ’ எங்கிட்ட சொன்னீல அதத்தான் பண்ணிருக்கேன்! “ குழப்பினார் செல்வா.

“ அதுக்கு என்ன பண்ணின ? “

“ உன்ன மாதிரி எழுதினா பெயில்தான ஆகனும். அதனாலதான் எல்லா கேள்விக்கும் தப்புத் தப்பா எழுதிட்டு வந்தேன்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் செல்வா.
19 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்து நடந்தது என்ன?

karthikkumar said...

மாணவன் கூட எதோ எக்ஸாம் எழுதணுமாம் மச்சி ... கொஞ்சம் என்னன்னு பாரு ... :))

இளையசிங்கம் நவீன் said...

எல்லாதையும் நம்புறேன் அந்த செல்வுM.Sc இதை த்ன் நம்ப முடியல

கோமாளி செல்வா said...

//அடுத்து நடந்தது என்ன?//

அதுதான் தெரியலையே :)))

@கார்த்தி :

அவருக்கும் உதவி செய்யலாம்னு சொல்லுறியா?

கோமாளி செல்வா said...

// இளையசிங்கம் நவீன் said...
எல்லாதையும் நம்புறேன் அந்த செல்வுM.Sc இதை த்ன் நம்ப முடியல

//

வேற வழி இல்லைங்க.. நம்பித்தான் ஆகனும் :))

TERROR-PANDIYAN(VAS) said...

:)))) nice

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேள அதுல ப்ராக்டிகல்ஸ் இல்ல.....

Madhavan Srinivasagopalan said...

எனக்கு நோய் விட்டுப் போனது..

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
:)))) nice////

உன்னைய இவன் கேட்டானா? உனக்கு ஏன் இந்த வேலை? :))

வைகை said...

நல்லவேள.. நான் படிக்கும்போது உன்னை எனக்கு தெரியாது :))

siva said...

good one.:)

கோமாளி செல்வா said...

// TERROR-PANDIYAN(VAS) said...
:)))) nice
//

hard :))

கோமாளி செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல வேள அதுல ப்ராக்டிகல்ஸ் இல்ல.//

ஏன் ?

கோமாளி செல்வா said...

// Madhavan Srinivasagopalan said...
எனக்கு நோய் விட்டுப் போனது.//

ஏன் வாய்விட்டுச் சிரிச்சீங்களா ?

கோமாளி செல்வா said...

/// வைகை said...
நல்லவேள.. நான் படிக்கும்போது உன்னை எனக்கு தெரியாது :))
//

படிச்சிருந்தா உங்களுக்கும் பரீட்சை எழுதிக்கொடுத்திருப்பேன்.

கோமாளி செல்வா said...

// siva said...
good one.:)
//

நன்றி :))

FOOD said...

எதிலும் ஒரு நேர்மை அது செல்வாவின் தனித் திறமை.

VELU.G said...

நல்லாயிருக்கே கதை

அப்புறம் என்னாச்சு

ஹ ஹ ஹ ஹ ஹா

இமா said...

நல்லா இருக்கு கதை. ;)))))))