Saturday, August 13, 2011

ஆடி வெள்ளியும் கோழி முட்டையும்


செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.

”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.

பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.

அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.

பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.

“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.

அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”




27 comments:

எஸ்.கே said...

haa haaa செம்ம காமெடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

hahahahaa..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ எறும்பை முழுங்கிட்டேன்னா என்ன பண்ணுவ?

இம்சைஅரசன் பாபு.. said...

//லூசு, இது சேவலோட கால் ரேகை!”//

ஹ ..ஹா ..செம

செல்வா said...

// எஸ்.கே said...
haa haaa செம்ம காமெடி!
//

நன்றினா ...

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ எறும்பை முழுங்கிட்டேன்னா என்ன பண்ணுவ?
//

இன்னொரு எறும்பு கிட்ட கையெழுத்து வாங்கிடுவேன்...

செல்வா said...

// இம்சைஅரசன் பாபு.. said...
//லூசு, இது சேவலோட கால் ரேகை!”//

ஹ ..ஹா ..செம
//

ஹி ஹி ஹி ... உங்க தம்பி எவ்ளோ அறிவாளினு பாருங்க :))

Unknown said...

super comedy ............ i love all your funny storiezzzzzzzzzzzzzzz

Anonymous said...

//// பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார். /////

எப்புட்ரா இப்பிடி யோசிக்கிரே ...,நான் உன்ன நேர்ல பாக்கும் பொது உன் மூக்கு புடைப்பா கூட இல்லையே ....,

செல்வா said...

// royal ranger said...
super comedy ............ i love all your funny storiezzzzzzzzzzzzzzz
//

ரொம்ப ரொம்ப நன்றிங்க...

செல்வா said...

//எப்புட்ரா இப்பிடி யோசிக்கிரே ...,நான் உன்ன நேர்ல பாக்கும் பொது உன் மூக்கு புடைப்பா கூட இல்லையே ....,
//

அது வந்து நான் மூக்க சரி பண்ணிருக்கேன்.. நான் கொஞ்சம் அட்வான்சுடு மாடல்., இப்படி யோசனை வரும்போது மட்டும் மூக்கு புடைச்சிக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said...

ஹா.. ஹா.. ஹா.. குட். நல்லா இருக்குடா.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.//////

ஆமா இந்தக் கோழிதான் அந்த முட்டைய போட்டுச்சு எப்படி முடிவு பண்ண?

செல்வா said...

// TERROR-PANDIYAN(VAS) said...
ஹா.. ஹா.. ஹா.. குட். நல்லா இருக்குடா.. //

சரிங்னா :)

செல்வா said...

//ஆமா இந்தக் கோழிதான் அந்த முட்டைய போட்டுச்சு எப்படி முடிவு பண்ண?
//

அது கடவுள ஏமாத்தத்தானே அந்த ஏற்பாடே ...

எஸ்.கே said...

//
ஆமா இந்தக் கோழிதான் அந்த முட்டைய போட்டுச்சு எப்படி முடிவு பண்ண?//

அவர் போலி ஆவணம் ரெடி செய்யதான் ஏதோ ஒரு கோழியை பிடித்தார். துரதிர்ஷ்டம் அவருக்கு சேவலுக்கும் கோழிக்கும் வித்யாசம் தெரியலை!

R.Santhosh said...

தாறுமாறு தம்பி

R.Santhosh said...

//செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.// ஆரம்பமே செம்ம காமெடி

செல்வா said...

//அவர் போலி ஆவணம் ரெடி செய்யதான் ஏதோ ஒரு கோழியை பிடித்தார். துரதிர்ஷ்டம் அவருக்கு சேவலுக்கும் கோழிக்கும் வித்யாசம் தெரியலை!
/

ஹி ஹி.. அதே அதே :)

Madhavan Srinivasagopalan said...

Madhavan Srinivasagopalan - லூசு.. லூசு.. செல்வா ஒரு லூசு.

Madhavan Srinivasagopalan - நேத்து நடந்ததை இன்றே சொல்லிய செல்வா வாழ்க.. வாழ்க.

Selvakumar selvu - ஹி ஹி.. உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா ?:))

Selvakumar selvu - //Madhavan Srinivasagopalan - லூசு.. லூசு.. செல்வா ஒரு லூசு.//

இது இப்பத்தான் தெரியுமா ?

Madhavan Srinivasagopalan - // உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா & இது இப்பத்தான் தெரியுமா ? //

Hence prooved

செல்வா said...

// R.Santhosh said...
//செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.// ஆரம்பமே செம்ம காமெடி//

இதுல என்னா காமெடி உங்களுக்கு,, நான் தினமும் எவ்ளோ சாமி கும்பிடுவேன் தெரியுமா ?

Mohamed Faaique said...

இன்னும் என்னவெல்லாம் பார்ர்க்க வேண்டியிருக்கோ..
யாராவது “நில அபகரிப்பு” கேஸ்`ல புகார் பண்ணி இந்த செல்வா`வ உள்ள போடுங்கப்பா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேய்ய் செல்வா...... இங்க பாரு நியூச...., ஏமாந்தது நீதான்.....!

ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=293807

Anonymous said...

haiyo haiyo

Unknown said...

எனுங்க சாமி முட்டை சைவம் தான்னுங்களே :)

Unknown said...

wow beautiful story..

really very intersting.

(nerila unnai paarkkumpothu erukku..)

Subramanian said...

(twitter மூலமாக வருகை!)

முதன் முதலாக computer முன்னாடி, computerஅ பாத்துக்கிட்டே விழுந்து விழுந்து சிரிச்சேனுங்க!

ரொம்ப ஆச்சர்யமா இருக்கு! இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமான்னு.

உங்கள சந்திச்சதுல மகிழ்ச்சிங்க! ரொம்ப நன்றி!